வேத நாயகி
"வேத நாயகி" _____________________ ஜகன்மாதாவான அம்பாளின் பெருமையை சொல்வது யாராலும் முடியாத ஒன்று. ஆதிசங்கரர் தன்னுடைய ஆனந்த லஹரியில் " அம்மா !! நான்கு முகம் கொண்ட பிரம்மனாலும், ஐந்து முகம் கொண்ட உன் அகத்துக்காரர் ருத்ரனாலும், ஆறு முகம் உடைய உன் குழந்தை சுப்பிரமணியனாலும், ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனாலும் உன் பெருமைகளை சொல்லமுடியலை என்றால் ஒரு முகத்தை வைத்துக்கொண்டு நான் எப்படி சொல்லமுடியும் என்கிறார். இவருக்கு முந்தைய காலத்தவரான தூர்வாச மகரிஷி தன்னுடைய சக்தி மஹிம்ன ஸ்தோத்திரத்தில் , "அம்மா உன்னோட பதியான பரமசிவன் கூட உன்னுடைய மகிமையை பூரணமாக சொல்ல முடியாத போது நான் இந்த ஸ்தோத்திரத்தை ஏன் சொல்கிறேன் தெரியுமா ? உண் மேல் இருக்கும் பக்தியாலும் அன்பினாலும், வாத்ஸல்யத்தினாலும் நான் எது சொன்னாலும் நீ ஏற்றுக் கொள்வாய் என்பதால் தான் ! துர்வாசர் மிகப்பெரிய அம்பிகை உபாசகர். அவரே இப்படி அம்பாளை சரண் அடைகிறார் . பிரம்மத்தை இன்னது என்று அறிவிக்கும் அம்பாளின் மூச்சுக் காற்றாக இருக்கும் வேதங்களும் அவளை அறிய முடியவில்லை. அதனாலயே வேதங்கள் பிரம்மத்தைப் பற்றி கூறும்போ