வேத நாயகி

"வேத நாயகி"
_____________________

ஜகன்மாதாவான அம்பாளின் பெருமையை சொல்வது யாராலும் முடியாத ஒன்று. ஆதிசங்கரர் தன்னுடைய ஆனந்த லஹரியில் "  அம்மா !!  நான்கு முகம் கொண்ட  பிரம்மனாலும், ஐந்து முகம் கொண்ட உன் அகத்துக்காரர் ருத்ரனாலும், ஆறு முகம் உடைய உன் குழந்தை சுப்பிரமணியனாலும், ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனாலும் உன் பெருமைகளை சொல்லமுடியலை என்றால்  ஒரு முகத்தை வைத்துக்கொண்டு நான் எப்படி  சொல்லமுடியும் என்கிறார். இவருக்கு முந்தைய காலத்தவரான  தூர்வாச மகரிஷி தன்னுடைய சக்தி மஹிம்ன ஸ்தோத்திரத்தில் , "அம்மா உன்னோட பதியான பரமசிவன் கூட உன்னுடைய மகிமையை பூரணமாக சொல்ல முடியாத போது நான் இந்த  ஸ்தோத்திரத்தை ஏன் சொல்கிறேன் தெரியுமா ?  உண்   மேல்  இருக்கும் பக்தியாலும் அன்பினாலும், வாத்ஸல்யத்தினாலும்  நான் எது சொன்னாலும் நீ ஏற்றுக் கொள்வாய் என்பதால் தான் ! துர்வாசர் மிகப்பெரிய அம்பிகை உபாசகர்.  அவரே இப்படி  அம்பாளை சரண் அடைகிறார் .  பிரம்மத்தை இன்னது என்று அறிவிக்கும்  அம்பாளின் மூச்சுக் காற்றாக இருக்கும் வேதங்களும் அவளை அறிய முடியவில்லை.  அதனாலயே வேதங்கள் பிரம்மத்தைப் பற்றி கூறும்போது இதுதான் என்று கூறாமல் இது  இல்லை ! இது இல்லை! என்று ஒவ்வொன்றாக மறுக்கிறது
நான்கு வேதங்களும்  ப்ரம்மம்  இன்னதென்று   அறிந்துகொள்ள தாங்களே முயற்சியில்  இறங்கின. தாங்களே அனாதி , தங்களால் முடியாதது ஒன்றுமில்லை என்ற கர்வத்துடன் பிரம்மத்தை தேடிப் புறப்பட்டன. நான் எனது என்ற சிந்தனையில் முயற்சி செய்ததால் பிரம்மத்தின் ஒரு துளிகூட வேதங்களுக்கு புலப்படவில்லை.    இறுதியில்

"தா-மக்னி-வர்ணாம் தபாஸாஜ்வலந்தீம் வைரோசனீம் கர்ம-பலேஷு
ஜுஷ்டாம்!!  துர்காம் தேவீ ஸரண-மஹம் ப்ரபத்யே !!

- துர்க்கா ஸூக்தம்.

""அக்னி போன்ற சிந்தூர வடிவத்திலும்,  தவத்தினால்  ஜ்வளிப்பவளும், ஜீவராசிகள் செய்த கர்மங்களின் பலத்திற்கு ஏற்ப பயன் தருபவளுமான  துர்க்காம்பிகையின் பாதார  விந்தங்களை சரணடைவோம்""

என்று
 அம்பாளை சரணடைந்தன. வேதங்களுக்கு அனுக்கிரகம் செய்ய அம்பிகை திருவுளம் கொண்டாள். தவத்தினாலும், தேவர்கள், மும்மூர்த்திகளுக்கும் எட்டாத தன்னுடைய திருவடியை வேதங்களைப் சிரசில் வைத்து
அனுக்ரஹம் செய்தாள்.

"ஸ்ருதி ஸீமந்த ஸிந்தூரி க்ருத  பாதாப்ஜ  தூளிகா"

  - லலிதா ஸஹஸ்ரநாமம்

"அம்பாளுடைய பாதத்தில் உள்ள சிறு தூளி யானது வேத மாதாவின் நெற்றியில் சிந்தூரமாக ப்ரகாசிப்பதாய் ஸஹஸ்ரநாமம் கூறுவதை பார்க்கலாம்.
அம்பிகையே பிரம்மம் என்று உணர்ந்த வேதங்கள்  அவளை
திரிபுரோபநிஷத்,  பாவனோபநிஷத், சக்ரோபநிஷத் போன்ற உபநிஷத்களில் நேரிடையாகவும் , மற்ற இடங்களில்   பரதேவதையே ப்ரம்மஸ்வரூபினி என்று பறைசாற்றுகின்றன .
வேதங்களும் சரணடைந்த அம்பிகையை பூர்ணமாக சரணடைந்து அவள் அருள்மழையில் நனைவோம்

யாதேவி  ஸர்வ பூதேஷு மாத்ரு  ரூபேண ஸம்ஸ்திதா  ! நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,நமஸ்தஸ்யை , நமோன் நம: !!
🙏🙏🙏🙏🙏

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ருத்ரம்

தர்ம சாஸ்திரம்

அர்த்தமுள்ள ஸந்தியாவந்தனம்: