Posts

Showing posts from September, 2019

தேவி மானச பூஜை 64 உபசாரங்களுடன்.

Image
___________________________ ______________________________ ஐங்கார-ஹ்ரீங்கார-ரஹஸ்யயுக்த - ஶ்ரீங்கார-கூ³டா⁴ர்த²-மஹாவிபூ⁴த்யா । ஓங்கார-மர்ம-ப்ரதிபாதி³நீப்⁴யாம் நமோ நம: ஶ்ரீகு³ருபாது³காப்⁴யாம் !!    ஶீ லலிதா தியானம்:-  ஸிந்தூராருண-விக்ரஹாம்-த்ரிநயனாம் மாணிக்ய மௌலிஸ்புரத் தாரநாயக-சேகராம் ஸ்மிதமுகீம்-ஆபீன-வக்ஷோருஹாம் பாணிப்யாம்-அளிபூர்ண-ரத்ன-சஷகம்-ரக்தோத்பலம் பிப்ரதீம் சௌம்யாம் ரத்ன-கடஸ்த-ரக்தசரணாம் த்யாயேத் பராம் அம்பிகாம்!! அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம் த்ருத பாசாங்குச புஷ்ப பாண சாபாம் அணிமாதிபிராவ்ருதாம் மயூகை: ரஹமித்யேவ விபாவயே பவானீம். த்யாயேத் பத்மாஸனஸ்தாம் விகஸிதவதனாம் பத்ம பத்ராயதாக்ஷீம் ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலித லஸத்ஹேம பத்மாம் வராங்கீம்  ஸர்வாலங்கார யுக்தாம் ஸதத மபயதாம் பக்தநம்ராம் பவானீம் ஸ்ரீவித்யாம் சாந்தமூர்த்திம் ஸகலஸுரநுதாம் ஸர்வஸம்பத் ப்ரதாத்ரீம். என்று அம்பாளை தியானம் செய்து இந்த ஸ்வரூபத்திலேயே  அவளை  "ஶீ லலிதா மஹாதிரிபுரசுந்தரிம் அம்ருத சைதன்ய மூர்த்திம்  த்யாயாமி! ஆவாஹயாமி !" என்று மனதில் ஆவாஹனம் செய்துகொண

அர்த்தமுள்ள ஸந்தியாவந்தனம்:

Image
__________________________________ தொடர்:- 1 நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய கர்மாக்களை ‘நித்ய’, ‘நைமித்திக’, ‘காம்ய’ என்று மூன்றாக பிரித்துள்ளார்கள் நம் முன்னோர்கள். நாம் எந்த பிரதிபலனையும் விரும்பாமல் ஒரு கடமையின் பாவத்துடன் செய்யக்கூடிய கர்மங்கள்  "நித்ய கர்மா " எனப்படும்.இதை எல்லோரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விஷயம். ‘ ஒரு நிமித்தத்தை உத்தேசித்து செய்யக்கூடிய கர்மம் ‘நைமித்யக’ கர்மம் என்று கூறப்படுகிறது. இதில் தான் பித்ரு ஸ்ராத்தம் திருவாராதனம் ஆகியன அடங்கும். ‘காம்ய’ கர்மம் மூன்றாவதாகும். அதாவது. ஹோமங்கள் யக்ஞங்கள் பரிகார பூஜைகள் என்பன இதைச் செய்வதோ செய்யாமல் இருப்பதோ கர்த்தாவின் விருப்பம் ஆகும். நித்ய’கர்மாக்களின் வரிசையில் சந்தியாவந்தனம் அடங்கியுள்ளது. ஸந்தி என்றால் இரவும்- அதிகாலையும் .,காலையும் மதியமும்., மாலையும் இரவும் ஒன்றை ஒன்று சந்திக்கும் நேரம் அப்படிபட்ட சந்தியாகாலத்தில் நமக்கு பிரத்யக்ஷமாக தோன்றும் ஜோதியான சூரியனை பிரார்த்தித்து செய்யக்கூடிய வந்தனம் ஸந்தியாவந்தனம் எனப்படும். அதாவது ஸந்தியாகாலம் என்பது அதிகாலை, மத்யான்னம் ஸாயங்காலம் என்னும

லலிதோபாக்யாணம்

Image
           (லலிதையின்  சரிதம்) ______________________________________ அறிமுகம் __________________________________ மகாபாரதத்தில் பகவத் கீதை ஒளிந்துள்ளது போல் பதினெட்டு புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தில் உத்தர காண்டத்தில் சிப்பிக்குள் முத்துப் போல அமைந்துள்ளது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமமும், லலிதோபாக்யாணம் என்னும் ஶீ லலிதையின்  சரிதமும். பராம்பிகையின் லீலாவினோதங்கள் என்றுமே கேட்பதற்கு இனியது. அதனை பற்பல புராணங்கள் பலவாக பேசும். தேவி பாகவதம் புவனேஸ்வரியாக அவளை புகழும், தேவி மாஹாத்மியம் சன்டியாக பாடிப் பரவும் . தத்தாத்ரேயரின் த்ரிபுரா ரகஸ்யம் முதல்  சங்கரரின் ஸெளந்தர்ய லஹரி வரை வேறு எந்த தெய்வ வடிவம் கொண்டிராத அளவுக்கு பராசக்தியான அம்பிகையின் பெருமையை பறைசாற்றும் நூல்கள் அநேகம். அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் விளங்குவது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம். தேவாதி தேவர்க்கும் மூவர்க்கும் முன்னவளாய் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக விளங்கும் ஸ்ரீ மாதாவின் பெருமையை பாடுவது லலிதையின் ஸஹஸ்ரநாமம். மற்ற ஸஹஸ்ரநாமங்கள் தேவர்களாலும் ரிஷிகளாலும் சொல்லப்பட்டிருக்க, லலிதைய