அர்த்தமுள்ள ஸந்தியாவந்தனம்:
__________________________________
தொடர்:- 1
நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய கர்மாக்களை ‘நித்ய’, ‘நைமித்திக’, ‘காம்ய’ என்று மூன்றாக பிரித்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
நாம் எந்த பிரதிபலனையும் விரும்பாமல் ஒரு கடமையின் பாவத்துடன் செய்யக்கூடிய கர்மங்கள் "நித்ய கர்மா " எனப்படும்.இதை எல்லோரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விஷயம். ‘
ஒரு நிமித்தத்தை உத்தேசித்து செய்யக்கூடிய கர்மம் ‘நைமித்யக’ கர்மம் என்று கூறப்படுகிறது. இதில் தான் பித்ரு ஸ்ராத்தம் திருவாராதனம் ஆகியன அடங்கும்.
‘காம்ய’ கர்மம் மூன்றாவதாகும்.
அதாவது. ஹோமங்கள் யக்ஞங்கள் பரிகார பூஜைகள் என்பன
இதைச் செய்வதோ செய்யாமல் இருப்பதோ கர்த்தாவின் விருப்பம் ஆகும். நித்ய’கர்மாக்களின் வரிசையில் சந்தியாவந்தனம் அடங்கியுள்ளது.
ஸந்தி என்றால் இரவும்- அதிகாலையும் .,காலையும் மதியமும்., மாலையும் இரவும் ஒன்றை ஒன்று சந்திக்கும் நேரம்
அப்படிபட்ட சந்தியாகாலத்தில் நமக்கு பிரத்யக்ஷமாக தோன்றும் ஜோதியான சூரியனை பிரார்த்தித்து செய்யக்கூடிய வந்தனம் ஸந்தியாவந்தனம் எனப்படும்.
அதாவது ஸந்தியாகாலம் என்பது அதிகாலை, மத்யான்னம் ஸாயங்காலம் என்னும் மூன்று காலங்கள் ஆகும்.
நித்ய கர்மாவில் அடங்கிய ஸந்தியாவந்தனத்தைச் செய்யாமல் இருந்தால் ‘பாபபாக்’ (பாபி) ஆகிவிடுவான் என தேவீபாகவதத்தில் கூறப்படுகிறது
____________________
ஸந்தியாவந்தனம் செய்ய கற்றுக் கொண்டவன் துவிஜன் அல்லது இருபிறப்பாளர் என்று அழைக்கப்படுகிறான். தர்ம சாஸ்திரங்கள் ,
"ஜன்மனா ஜாயதே சூத்ர: !
கர்மணா ஜாயதே த்விஜ: "
அதாவது பிறப்பால் எல்லோரும் சூத்திரர்களே என்றும் ஞானக்கண் திறக்கப் பெற்று பிரம்மார்ப்பணமாக கர்மானுஷ்டானம் செய்யத் தொடங்கிய பின்னரே "த்விஜன் " எனப்படுவர் என்கிறது.
“ஸந்த்யாவிஹீநோ ஸுசிர்நித்யம் அநர்ஹ: சர்வகர்மஸு
யதன்யத் குருதே கர்ம ந தஸ்ய பலபாக்பவேத்”
ஸந்த்யாவந்தனம் செய்யாதவன் அபவித்ரன்.
அவர்கள் ஆன்மிக கர்மாக்களில் ஈடுபடத் தகுதியில்லை. அவன் எந்த யாகத்தைச் செய்தாலும் அதன் பலனை அடையமாட்டான்.
பகவத் ஞானம் கிடைக்கவேண்டும் என்றால் நரஜன்மத்திலே பிறக்க வேண்டும்.
வேதாத்யயனம் மற்றும் ஸந்த்யா உபாசனைகளைச் செய்யாதவன் “த்விஜன்”அத இருபிறப்பாளன் (இரண்டாவது முறை பிறந்தவன், முதலில் தாயின் வயிற்றிலிருந்து, இரண்டாவது முறையாக உபநயனம் செய்து கொண்டபொழுது) என்ற தகுதியை இழக்கிறான்..
ஒரு வேளை கார்யங்களின் அழுத்தத்தினால் மத்யாஹ்ன ஸந்தியாவந்தனம் செய்யமுடியாமல் இருந்தாலும் ப்ராதஸந்தியையும், ஸாயம் ஸந்திகளையும் கட்டாயமாகச் செய்யவேண்டும்.
மந்த்ரங்களை உச்சரிக்கும்பொழுது அதன் பொருளையும் கவனிக்க வேண்டும்.
தொடரும்.......
_______________________________
தொடர்-2
சந்தியாவந்தனத்தில் தனக்கு சம்பவித்த வாசிக, மானஸிக, இராத்ரி சொப்பன இந்திரிய மூலமாக நித்தம் ஏற்படும் பாபங்கள் நாசமாகட்டும் என்ற ப்ரார்த்தனைகள் உள்ளது.
வைதிக தர்மத்தை அனுசரிப்பவர்களுக்கு வேதம் மிக முக்கியமானதாகும்.
வசிஷ்ட, வாமதேவ, ஆகிய ரிஷிகளின் முக கமலங்களிலிருந்து வேத மந்திரங்கள் வெளியே வந்ததால் மந்த்ரங்கள் மேலும் வலிமை கொண்டுள்ளன.
புதியதாக உபநயனமான வடுவை முதலாக கொண்டு மற்ற எல்லா ஆசிரமத்தினர்களுக்கும் சந்தியாவந்தனம் கண்டிப்பாக செய்யவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
"உத்யந்தமஸ்தம் யம்தமாதித்யம் அபித்யாயன் ப்ராம்ஹணோ வித்வான் ஸகலம் பத்ரமஸ்நுதே"
- ஸூத்ரம்
உதித்து வரும், அஸ்தமனமாகிற சூர்யனை யார் தியானிக்கிறாரோ அவர்களுக்கு அனைத்து இடங்களிலும் மங்களம் தான் உண்டாகும்.
ஒருவனின் தேஜஸ், பலம், ஆயுள் ஆகியவற்றுக்கு சூர்யன் தான் காரணம். ‘வர்த்மாபுனர்ஜன்மனாம்’ என்ற வராஹமிஹிரரின் சொல்லின்படி பரந்தாமத்தை நோக்கி செல்பவர்களுக்கு சூர்ய மண்டலம் தான் மார்க்கம்.
காலையில் சந்தியாவந்தனம் செய்ய உகந்த காலம் -
"உத்தமா தாரகோபேதா மத்யமா லுப்ததாரகா கநிஷ்டா ஸூர்ய சஹிதா ப்ராத: சந்த்யா த்ரிதாஸ்ம்ருதா"
- ஸூத்ரம்
அதிகாலையில் இரவில் தோன்றிய நட்சத்திரங்கள் வானில் இருக்கும் பொழுதே சந்தியாவந்தனம் செய்வது உத்தமம் .
நட்சத்திரங்கள் மறைந்த பிறகு மத்யமம் ஆகும்.
சூர்யன் உதயம் ஆனபிறகு செய்யக்கூடிய சந்தியாவந்தனம் கநிஷ்டம்.
மாத்யானிகம் செய்ய ஏற்ற காலம் -
சூரிய பகவான் நேர் உச்சி ஸ்தானத்திற்கு
(அபிஜித் முகூர்த்தம்)
வரும்போது செய்வது உத்தமம்.
சாயம் சந்தியாவந்தனம் செய்ய ஏற்ற காலம்-
"உத்தமா ஸூர்யசஹிதா மத்யமாலுப்ததாரகா
கநிஷ்டா தாரகோபேதா ஸாயம் சந்த்யா த்ரிதா ஸ்ம்ருதா"
- ஸூத்ரம்.
மாலையில் சூர்யன் இருக்கும் பொழுது செய்யக்கூடிய சந்தி உத்தமம்.
நட்சத்திரங்கள் வருவதற்கு முன்பு செய்வது மத்யமம்.
நட்சத்திரங்கள் வந்த பிறகு செய்வது கநிஷ்டம்.,
அர்த்தமுள்ள ஸந்தியா வந்தனம்
______________________________
தொடர் :-3
___________
பராசரரது புத்திரரான வேத வ்யாஸர் வேதங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்தார். மூன்று வேதத்திலும், சிற்சில மாறுதல்களுடன், ஸந்த்யாவந்தன கர்மா காணப்படுகிறது.
ரிக்வேதம் :-
வேத வ்யாஸர் ரிக்வேதத்தை பைலர் என்ற சிஷ்யன் மூலமாக ப்ரகாசப்படுத்தினார். அந்த வேதம் 8 பிரிவாக பிரிக்கப்பட்ட்து (அஷ்டகங்கள்). ஐத்ரேயமும். கௌஷீதகி ப்ராம்மணமும் இதைச் சார்ந்ததாகும். ரிக்வேதிகளுக்கு ஆச்வலாயனர், ஸாங்க்யாயாயனர் என்ற மகரிஷிகள் முறையே ஶ்ரௌத ஸூத்ரம், க்ருஹ்யஸூத்ரம் என்ற கல்பஸூத்ரங்கள் செய்துள்ளனர். ஶ்ரௌத ஸூத்ரம் மூன்று அக்னிகளால் செய்யப்படும் யாகத்தைப் பற்றியும், க்ருஹ்யஸூத்ரம் நாற்பது ஸம்ஸ்காரங்களையும், ஸந்த்யாவந்தனம், ஶ்ராத்தம் முதலியவைகளைப் பற்றியும் கூறுவதாகும்.
யஜுர்வேதம்:-
வேத வ்யாஸர் யஜுர்வேதத்தை வைசம்பாயநர் முலமாக ப்ரசுரமாக்கினார். யஜுர்வேதம் சுக்லயஜுஸ், கிருஷ்ணயஜுஸ் என இரண்டாகப் பிரிந்தது. சதபதப்ராம்மணம், மைத்ராயணீயம் முதலியவை இதைச் சார்ந்தவை. ஸுக்லயஜுஸ்ஸுக்கு காத்யாநர், பாஸ்கரர் க்ருஹ்யஸூத்ரங்களை எழுதியுள்ளனர். கிருஷ்ணயஜுஸ்ஸுக்கு ஆபஸ்தம்பர், போதாயனர், வைகாநசர், பாரத்வாஜர், வராஹர், ஸத்யாஷ்டர் முதலிய பலர் க்ருஹ்யசூத்ரங்கள் எழுதியுள்ளனர். இவைகளில் ஒன்றுக்கொன்று மற்றக் கர்மாக்களில் மாறுதல் உண்டு என்றாலும் ஸந்தியாவந்தனத்தில் மாறுதலில்லை.
ஸாமவேதம்:-
வேத வ்யாஸர் ஸாம வேதத்தை ஜைமிநி மூலமாக பிரசுரம் செய்தார். சாந்தோக்யம், தண்டியம், தலவகாரம் என்பவை ஸாமவேதத்தைச் சார்ந்தவை. இதற்குக் கல்பஸூத்ரம் எழுதியவர் த்ராஹ்யாயணர் கோபிலர்.
ஒரே வேதமாயிருந்தாலும், ஸந்த்யாவந்தனத்தில் ஆந்த்ரர், மத்வர், வைஷ்ணவர், ஸ்மார்த்தர் ஆகியோருக்குள் அவா அவா ஸுத்ர ப்ரகாரம் சிற்சிறு பேதங்கள் உண்டு.
தொடரும்.....
#அர்த்தமுள்ள ஸந்தியாவந்தனம்
____________________________________
தொடர் -4
______________
பிரம்மாவின் தியானத்தின் முதிர்ந்த பயனாய் தோன்றிய பரதேவதைக்கு சந்தியா என்று பெயர். அவளை இருதய ஆகாசத்திலும் பேராகாசத்திலும் அன்றாடம் உதித்து அஸ்தமிக்கும் சூரியனிடத்திலும் வந்தனம் செய்வது சந்தியாவந்தனம்.
"ப்ரஹ்மணோ த்யாயதோ யஸ்மாத் ஸம்யக் ஜாதா வராங்கனா ! அத: ஸந்த்யேதி லோகேஸ்மின் அஸ்யா: க்யாதிர் பவிஷ்யதி !!"
உபநயனம் செய்விக்கப்பட்ட த்விஜன் அல்லது இருபிறப்பாளன் என்பவர்கள் கண்டிப்பாக சந்தியாவந்தனம் செய்ய வேண்டும்.
உபநயனம் எனப்படுவது இரண்டாவது பிறப்பின் வாயிலாக அமைகிறது.
"உப "என்றால் சமீபத்தில் என்று பொருள்படுகிறது. எதற்கு சமீபத்தில்? பிரம்மத்தின் சமீபத்தில் , "நயனம் " என்பதற்கு அழைத்துச் செல்லுதல் என்று பொருள். ஆகவே உபநயனம் எனும் சொல்லுக்கு ஆச்சாரியன் சிஷ்யனை பிரம்மத்திற்கு சமீபத்தில் அழைத்துச் செல்வது என்று பொருளாகும்.
பிராமணர்களும் ஷத்ரியர்கள் வைசியர்களும் கர்ப்பத்திலிருந்து முறையே, 8, 12, 16 வயதுக்குள், காமம் மனத்தில் புகுமுன் உபநயன தீக்ஷை பெறவேண்டும் என்பது தொன்று தொட்டு வரும் பழக்கம்.
வாமன மூர்த்தியாக அவதரித்த பகவானுக்கு உபநயனம்" செய்வித்ததை ஸ்ரீமத் பாகவதம் அழகாக வர்ணிக்கிறது.
சூரியதேவன் காயத்ரி மந்திரத்தை வாமனருக்கு உபதேசித்தார்.
பிரகஸ்பதி தவத்தை காக்கும் யக்ஞோபவீதத்தை கொடுத்தார். பிரம்மச்சரியத்திற்கு ரக்ஷை போன்ற முஞ்சி" கயிற்றை கஸ்யபர் இடுப்பில் கட்டினார். ஆயுளை வளர்க்கும் மான் தோலை பூமிதேவி போர்த்தினாள். ஓஷதிகளின் பதியான சோமன் பலாச தண்டத்தை அளித்தார். தாயான அதிதி கெளபீனத்தையும், மேலுலக தேவதை குடையையும், பிரம்மா கமண்டலத்தையும் சப்தரிஷிகள் தர்ப்பையையும், சரஸ்வதி ஜெபமாலையையும், குபேரன் பிக்ஷை பாத்திரத்தையும் அளித்தனர். உமாதேவி பிக்ஷை இட்டாள். இவ்வாறு உபநயனம் செய்விக்கப்பட்ட வாமனர் பிரம்ம தேஜஸ்ஸுடன் பிரகாசித்தார். தக்க வயதில் ஒழுங்காக உபநயனம் செய்விக்கப் பெறும் ஒவ்வொரு சிறுவனும் வாமன பிரம்மச்சாரியின் திருவுருவைபோலவே காட்சி அளிப்பான்.
உபநயனத்தில் குருவானவர் சிஷ்யனை ஒரு கல்லின் மேல் கால் ஊன்றி நிற்க செய்து ஆசீர்வதிப்பது.....
"ஆதிஷ்டேமம் அச்மானம் அச்ம இவத்வம் ஸ்திரோபவ !
அபிதிஷ்ட ப்ருதன்யத:
ஸஹஸ்வ ப்ருதானாயத: "
- ஸூத்ரம்..
இக்கல்லை போன்ற வலிமை கொண்ட உடலும் உறுதி கொண்ட நெஞ்சும் உடையவனாக நீ இருக்க வேண்டும். உன் விரதங்களுக்கு ஊரு செய்பவர்களை எதிர்த்துப் போராடி நீ விரட்டி அடிக்க வேண்டும் என்பதே.
மேலும் கூறுவதாவது
"ப்ரஹ்மசார்யஸி !"
நீ ப்ரம்மசாரியாகிவிட்டாய் .
"அபோ (அ)சான:! கர்ம குரு :! மாஸுஷுப்தா !"
சந்தியாவந்தனத்தையும் மற்ற கடமைகளையும் தவறாமல் செய்ய வேண்டும். அறியாமையிலிருந்து விழித்தெழு ! உறங்காதே !
என்றெல்லாம் பலவாறாக உபநயத்தின்போது உபதேசிக்கப் படுகிறது.
#Sathya001
#அர்த்தமுள்ள ஸந்தியாவந்தனம்
_________________________
தொடர் -5
______________
ஸந்தியாவந்தனத்தில் ஜீவ நாடியாக இருப்பது அர்க்ய ப்ரதானம். மார்ஜனம், ப்ராசனம் முதலிய பகுதிகள் அஷ்டாங்க யோகத்தின் முதற்படியான இயமமும் , நியமமும் போன்று பூர்வாங்கங்களாக அமைகின்றன.
புறத்தூய்மையுடன் அகத்தூய்மையும் வேண்டும் என்பதை இம்மந்திரங்கள் உணர்த்துகின்றன.
யோகத்தின் மூன்றாவது நான்காவது படிகளாகிய ஆசனமும், பிராணாயாமமும், ஸந்தியாவந்தனத்தில் அங்கங்களாக அமைந்திருக்கிறது. வெளிநாட்டமுள்ள இந்திரியங்களை
வசப்படுத்தும் பிரத்யாஹாரமும் , தியானம், தாரணை, சமாதி என்னும் படிகளும் ஜெபத்தில் அடங்குகிறது.
இப்படி ஸந்தியா வந்தனத்தில் அஷ்டாங்க யோகம் அப்யசிக்கப்படுகிறது .
உச்சரிக்கும் மந்திரங்களின் உட்கருத்துக்களை உணர்ந்து உபாசனை செய்தால் தான் அவை உண்மையான பலன் அளிக்கும்.
சாந்தோக்ய உபநிஷத் கூறுவது
" தேநோபெள குருதோ யச்சைத-தேவம் வேத யச்ச ந வேத !
நா நா து வித்யா சா வித்யா ச யதேவ வித்யயா கரோதி ச்ரத்தயோபநிஷதா ததேவ வீர்யவத்- பவதீதி !!
- 1. 1. 10அதாவது ஓம்கார உச்சாரணத்துடன் அறிந்தவர் , அறியாதவர் என்ற இருவரும் கர்மங்களை செய்கிறார்கள். அருவம் அறியாமையும் முற்றிலும் வேறு வேறு அன்றோ?. தத்துவ ஞானத்துடன் சிரத்தையுடனும் யோகமுறை அனுசரித்து எது செய்யப்படுகிறதோ அது மிகுந்த வீரியம் என்பதே தெளிவு. நெருப்பின்றி விறகு எப்படி தானாகவே எரியாதோ அப்படி ஞானம் இன்றி கர்மம் பலன் தராது. அதனால் நித்திய கர்மா வான ஸந்தியா வந்தனத்தின் உட்கருத்தை உணர்ந்துகொண்டு செய்தோமானால் அதன் பரிபூரணமான பலனை அடைய முடியும். எல்லாக் கர்மங்களுக்கும், எல்லா உபாசனைகளுக்கும் , எல்லா மந்திரங்களுக்கும், ஆணிவேர் போன்று இருப்பது ஸந்தியாவந்தனம். வெவ்வேறு திசையில் இருந்து ஒரே ஊரை நோக்கி வரும் பாதைகளைப் போல எல்லா சமயங்களும் இங்கு ஒன்றுபடுகின்றன. சைவரோ , வைஷ்ணவரோ, சாக்தரோ , வடநாட்டவரோ, தென்னாட்டவரோ யாராயினும் ஸந்தியாவந்தனத்தில் ஜெபிக்கும் மந்திரம் ஒன்றே. நம்முடைய முன்னோர்கள் பெற்று நமக்கு அளித்துள்ள அழிவில்லா செல்வம் ஸந்தியாவந்தனம்.
தொடரும்........
#Sathya001
#அர்த்தமுள்ள சந்தியாவந்தனம்.
_________________________
தொடர் -6
____________________
ஸந்தியாவனந்தத்தின் ஜீவநாடி போன்றவை மூன்று. அவை 'அர்க்கியப் பிரதானம்', 'பிராணாயாமம்'
மற்றும் 'காயத்ரீ ஜபம்'. மார்ஜனம், பிராசனம், உபஸ்தானம் முதலிய பகுதிகள் அங்கங்களாக அமைகின்றன. அர்க்கியப் பிரதானத்தின் கருத்தை விளக்க ஒரு கதை வேதத்திலே கூறபடுகிறது. சூரியனை எதிர்த்து அரக்கர்கள் அன்றாடம் போராடுகின்றனர் என்றும், ஸந்தியாவந்தனம் செய்பவன் காயத்ரீ ஜபித்து விடும் அர்க்கியம் வஜ்ராயுதம் போல் வலிமை படைத்து அரக்கர்களை முறியடிக்கிரதென்றும் அது கூறுகிறது. அஞ்ஞானமே அரக்கர் படை. ஞானமே சூரியன்.போர்க்களம் மனிதனுடைய மன வெளி. இப் போரில் வெற்றி காண பிரம்மாஸ்திரம் போன்றது காயத்ரீ மந்திரம். அசுரர் படை திரும்ப திரும்ப வந்து அகவெளியில் சூழ்ந்துக் கொள்வதால் போர் புரிந்துக்கொண்டே இருக்கவேண்டும். தினந்தோறும் சாப்பிட மறந்தாலும் ஸந்தியாவந்தனத்தை மறக்க கூடாது.
இனி ஸந்தியா வந்தன பிரயோகங்களை காண்போம்.
1) ஆசமணம் ||
காலை மற்றும் மதிய வேலையில் கிழக்கு நோக்கியும், மாலையில் வடக்கு நோக்கியும் ஆசமனம் செய்ய வேண்டும். மேற்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் செய்யக் கூடாது.
நாஸாமே தாஸனஸ்-தாங்க்ரீர்- ந பத்தாசன ஏவ வா !
ந ப்ரஸாரி தபதோ வா பஹிர்-ஜானு- கரோபிவா !
முக்தாங்குஷ்ட - கனிஷ்டாப்யாம் த்ரி: பிபேத் ப்ரம்ம- தீர்த்தத: !
- ஸூத்ரம்.
கைகள் முழந்தாளுக்கிடையில் அடங்கியிருக்கும்படி குந்திட்டு உட்கார்ந்து செய்ய வேண்டும்.
சுண்டு
விரலையும், கட்டை விரலையும் விட்டு மற்ற விரல்களைச் சற்று வளைத்தால் ஏற்ப்படும்
உள்ளங்கைக் குழியில் சிறுது சிறிதாகத் தீர்த்தத்தை ஏந்தி உட்கொள்ள வேண்டும்.
"மஹாவியாதி -ப்ரசமனி-நாமத்ரயீ வித்யா !!"
அச்சுதானந்த-கோவிந்த -நாமோச்சாரண-பேஷஜாத் ! நச்யந்தி ஸகல ரோகா : ஸத்யம் ஸத்யம் வஹாமயஹம் !!
-போதாயன ஸூத்ரம்.
அச்யுதாய நம:
அனந்தாய நம:
கோவிந்தாய நம:
என்னும் மூன்று மந்திரங்களும் உடலிலும் உள்ளத்திலும் உறையும் எல்லா வியாதிகளயும் போக்கவல்லது.
இதற்கு நாம - த்ரயீ வித்யா என்று பெயர்.
இந்த மந்திரங்களுடன் ஆசமணம் செய்யவேண்டும்.
"த்ரிராசாமேத் ! த்வி: பரிம்ருஜய ஸக்ரு - துபஸ்ப்ருச்ய !"
- ஸூத்ரம்.
பவித்ரம் அணிந்திருந்தால் அதை கழற்றி வலது காதில் வைத்துக்கொண்டு ஆசமனம் செய்துவிட்டு பின் அதை அணிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு பின் கேசவா, நாராயணா என்ற 12 நாமாக்களால் கண் காது முதலிய உறுப்புக்களை தொட்டு அனைத்தையும் பரமாத்மாவின் பணிக்கு உரியனவாக்க வேண்டும். ஐந்து இந்திரியங்களும் உள்முகப்பட்டால் ஆனந்தம் தானே உதிக்கும்.
அங்குஷ்டோ$க்னீரிதி-க்யாத: ப்ரோக்தா வாயு: ப்ரதேசினி ! அநாமிகா ததா ஸூர்ய: கனிஷ்டா மகவா ஸ்ம்ருதா!! ப்ராஜபதிர் மத்யமா து ஜ்ஞேயா சுத்திமபீப்ஸத: !!
- ஸூத்ரம்
கட்டை விரலும், வாயும்,
அக்னியின் ஸ்தானம் ஆகையால், "கேசவா, நாராயணா "என்று கட்டை விரலால் வலது இடது கன்னங்களையும்,
பவித்ர விரலும் கண்களும் சூரியனுடைய ஸ்தானமாகையால் "மாதவா ,கோவிந்தா" என்று பவித்ர விரலால் கண்களையும்
ஆள்காட்டி விரலும், நாசியும், வாயுவின் ஸ்தானமாகையால் "விஷ்ணு :,மதுசூதனா" என்று ஆள்காட்டிவிரலால் நாசித் துவாரங்களையும்,
சுண்டு விரலும் காதுகளும் இந்திரனுடைய ஸ்தானமாகையால் "திரிவிக்ரம ,வாமனா" என்று சுண்டுவிரலால் காதுகளையும்,
நடுவிரலும் தோள்களும் பிரஜாபதியின் ஸ்தானமாகையால் " ஸ்ரீதரா, ஹ்ருஷிகேசா" என்று நடு விரலால் தோள்களையும்,
"பத்மநாபா, தாமோதரா" என்று பரமாத்மாவின் ஸ்தானமாகையால் ஹ்ருதயத்திலும் உச்சந்தலையிலும் முறையே தொட்டு கொள்ள வேண்டும்.
இந்த மந்திரங்கள் ஆந்திர சம்பிரதாயத்துக்கும் ரிக்வேதிகளுக்கும் வேறுபடும்.
தொடரும் ...,..
#Sathya001
#அர்த்தமுள்ள சந்தியாவந்தனம்
_________________________
தொடர்- 7
___________________
கணபதி தியானம் :-
"சுக்லாம் பரதரம்" என்று தொடங்கும் மந்திரத்தை சொல்லி மகா கணபதியை தியானித்து சிரசில் உள்ள அமிர்தம் எல்லா நாடிகளிலும் இறங்கி பாய்வதாக எண்ணி சிரத்தின் இரு புறமும் முஷ்டிகளால் ஐந்து முறை மெதுவாக குட்டிக் கொள்ளவேண்டும். தலையில் குட்டிக்கொள்வது கணபதி ஆராதனையில் விசேஷமான அம்சம்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்நோப சாந்தயே !!
எங்கும் நிறைந்தவரும் அன்பர்க்கு உகந்த வடிவம் ஏற்பவரும் வெண்மையான ஆடை உடுத்தியவரும் நிலவு போன்ற ஒளியுள்ளவரும் நான்கு கைகளுள்ளவரும் ஆனந்தம் பொங்கும் முகமண்டலத்தை உடையவரும் ஆகிய கணபதியை எல்லா இடையூறுகளும் விலகுவதற்காக த்யானம் செய்யவேண்டும்.
பிராணாயாமம் :-
__________________
அஷ்டாங்க யோகத்தில் இதனை பதஞ்சலி முனிவர் நான்காவது அத்யாயத்தில் அமைத்துள்ளார். மனித உடல் செம்மையாக இயங்க மனித உடலில் 108 இடங்களில்
உயிர்க்காற்று நின்று இயங்குகின்றது இதுவே உயிர்நிலை ஓட்டம் என அழைக்கப்படுகிறது மனித உடலில் உள்ள 10 வாயுக்கள் மேற்சொன்ன 108 மையங்களில் உள்ள உயிர்க்காற்றை இயக்குவதாக சித்தர்கள் கண்டு பிடித்துள்ளனர். சித்தர்களின் கணக்குப்படி முன்சொன்ன 108 இடங்களில் உள்ள அகப்பிராணனை இந்த தச வாயுக்களும் எவ்வாறு இயக்குகின்றது என்பதே பிராணாயாமத்தின் உட்பொருள்.
சுவாசத்திற்கும் மனித ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 12 அங்குலம் சுவாசம் உள்ளே செலுத்தி 4 அங்குலம் வெளியே விட்டு மிதமுள்ள 8 அங்குலம்
உள்ளே உலவச் செய்தால் 120 ஆண்டுகள் ஒரு மனிதன் வாழ முடியும் என்பது சித்தர்கள் கண்டறிந்த உண்மை. எனவே தான் பிராணாயாமத்தை நம் முன்னோர்கள்
முறையாகப் பழகி வந்துள்ளனர்.
இடது நாசியில் சுவாசம் நடக்கும் போது தாயின் உயிர்த்தன்மையின் செயல்பாடுகள் இயக்கத்துக்கு வரும் . எனவே இட நாடியின் சுவாசத்தை தாய் நாடி எனவும், பெண் நாடி எனவும், சந்திர நாடி எனவும், சந்திரகலை எனவும் அழைக்கப்படுகறது.
வலது நாசியில் சுவாசம் நடக்கும்போது தந்தையின் உயிர்ப்புத்தன்மையின் செயல்பாடுகள் நிகழும்.
எனவே இதை ஆண்நாடி எனவும், தந்தை நாடி எனவும், பிங்கலை எனவும், சூரிய நாடி எனவும், சூரியகலை எனவும் அழைக்கப்படுகிறது.
, இரு நாசிகளிலும் சுவாசம் சமமாக ஓடும் போது இறை நாடி எனவும், அலி நாடி எனவும், நடு நாடி எனவும் அழைக்கப்படுகிறது.
பிராணாயாமத்தில் மூன்று வகை செயல்பாடுகள் உண்டு.
ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் மடக்கி கட்டை விரல் பவித்திர விரல்களால் மூக்கை இருபுறமும் தொட்டுக்கொண்டு வலப்புறம் அழுத்தி இடதுபக்கம் மெதுவாக மூச்சை இழுத்து பின் இருபுறமும் அழுத்தி மூச்சை நிறுத்தி முடிவில் வலது பக்கம் மெதுவாக மூச்சை விட வேண்டும்.
இதில்
இழுப்பது பூரகம்
நிறுத்துவதே கும்பகம்
விடுவது ரேசகம்.
பூரக கும்பக ரே சக மூன்றும் சேர்ந்தது ஒரு பிராணாயாமம். இதன் கால அளவு 1:3:2 என்ற விகிதத்தில் இருத்தல் சிறந்தது.
"ஓம் பூ: ஓம் புவ: ஓ৺ம் சுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓ৺ம் சத்யம்
ஓம் தத்சவிதுர்வரேண்யம் | பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: பரசொதயாத் ॥"
என்ற மந்திரத்தை ஸ்மரித்துக் கொண்டு பிராணாயாமம் செய்ய வேண்டும்.
ஓங்காரமே பூலோகம், ஓங்காரமே புவர்லோகம், ஓங்காரமே சுவர்லோகம், ஓங்காரமே மஹர்லோகம், ஓங்காரமே ஜனலோகம், ஓங்காரமே தபோலோகம், ஓங்காரமே சத்தியலோகம், ஓங்கார பொருளான எந்தப் பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதி ஸ்வரூபத்தை த்யானிப்போம். ஓங்காரமே ஜலமும் ஒளியும் ரசம் பொருந்திய அனைத்தையளிக்கும் பூமியும், உயிருக்கு ஆதாரமான வாயுவும், எங்கும் பரந்த ஆகாசமும், பூ: புவ: சுவ: என்ற வ்யாஹ்ருதீகள் குறிப்பிடும் மனம் புத்தி அஹங்காரம் என்ற தத்துவங்களும்
தொடரும்.......
#Sathya001
#அர்த்தமுள்ள சந்தியாவந்தனம்
_______________________
தொடர்-8
____________
சங்கல்பம்:-
பிராணாயாமத்திற்கு பிறகு ஸங்கல்பம் செய்து தான் எந்தக் கர்மத்தையும் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஸங்கல்பத்தில் இடது கை கீழும் வலது கை மேலுமாக வலது தொடை மீது வைத்துக் கொள்ள வேண்டும்.
"ஸங்கல்போ வாவ மனசோ பூயான் யதாவை ஸங்கல்பயதே அத மனஸ்யதி,அதவாசமீரயதி, தாமுநாம்னீரயதி, நாம்னி மந்த்ரா ஏகம் பவதி, மந்த்ரேஷு கர்மாணி ,
--- உபநிஷத்சங்கல்பம் மனதிலும் பெரியது. எப்போது ஒருவன் சங்கல்பிக்கிறானோ அப்போது தெளிவாக சிந்தித்து தீர்மானிக்கிறான். தீர்மானத்தை பேச ஆரம்பிக்கிறான், பேச்சு பெயர் வடிவாகிறது , பெயர் வடிவில் மந்திரங்கள் ஒடுங்குகின்றன. மந்திரங்களில் கருமங்கள் ஒடுங்குகின்றன.
யஜுர் வேதம் :-
மமோபாத்த ஸமஸ்த்த துரித க்ஷய த்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத சந்த்யாமுபாசிஷ்யே ||
(மாத்யானிகம் கரிஷ்யே ||) (சாயம் சந்த்யாமுபாசிஷ்யே ||
பொழிப்புரை: என்னால் செய்யப்பட்ட பாவங்களை நசிக்க செய்வதன் மூலம் ஈஸ்வரனின் அருளுக்கு பாத்திரமாகும் பொருட்டு காலையில் (நடுப்பகலில்; மாலையில்) சந்த்யா தேவியை உபாசிக்க ஆரம்பிக்கிறேன் ..
வைஷ்ணவ சம்பிரதாயம் :-
மமோபாத்த ஸமஸ்த (ஸ்ரீபகவதாக்ஞயா பகவத் கைங்கர்யம் என்று தென்கலையாரும், ஸ்ரீபகவதாக்ஞயயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம் என்று வடகலையாரும்) துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் (காலையில்) ப்ராதஸ்ஸந்த்யாம் உபாஸிஷ்யே என்றும் (மத்தியானத்தில்) மாத்யாஹ்னிகம் கரிஷ்யே என்றும் (சாயங்காலத்தில்) ஸாயம் ஸந்த்யாம் உபாஸிஷ்யே, என்றும் சங்கல்பம் செய்த பின் ஓம் என்று பவித்ரவிரலால் ஜலத்தில் எழுதி ஸ்ரீ கேசவாய நம: என்று நெற்றியில் திலகம் இட்டுக் கொள்ளவும்.
#அர்த்தமுள்ள ஸந்தியாவந்தனம்
_________________________
தொடர்-9
________________
மார்ஜனம் :-
இது 5 வகை ஸ்நானங்களில் உயர்ந்த மந்த்ரபூர்வமான
ப்ரம்ம ஸ்நானமாகும்.
"வாங்மன: காயஜான் தோஷான் நவைதான் நவபிர் தஹேத்"
- ஸுத்ரம்
"ஓம்" என்று பவித்ர விரலால் தீர்த்தத்தில் எழுதி" ஸ்ரீ கேசவாய நமஹ" என்று புருவமத்தியில் தொட வேண்டும். முதல் ஏழு மந்திரங்களால் சிரசில் பவித்ர விரலால் புரோக்ஷித்து கொண்டு எட்டாவது மந்திரத்தால் பாதங்களை தொட்டு, ஒன்பதாவது மந்திரத்தால் மறுபடி சிரசில் புரோக்ஷித்து கொள்ள வேண்டும்.
பின்னர் "ஓம் பூர்புவஸ் ஸுவ: " என்ற வியாஹ்ருதிகளால் தலையை சுற்றி பரிசேஷனம் செய்ய வேண்டும்.
பௌதிக சாஸ்திரத்தினால் ஏற்படும் அறிவை மட்டும் கொண்டு பார்ப்பவனுக்கு இயற்கை பொருள்களிலும், நிகழ்ச்சிகளிலும், ஆத்ம ஞானி க்கு புறப்படும் உள்ளொளி விளங்காது. ஒவ்வொரு பொருளுக்கும், "அதிபூதம் "அத்யாத்மம் "அதிதைவம் என்று மூன்று நிலைகள் உண்டு. ஜலம் உடலை சுத்தப்படுத்துவது மட்டுமன்றி உள்ளத்தையும் புனிதமாக்குவது ஆகும். பூமி உடலை தாங்குவது மட்டுமன்றி மனதிற்கும் உவகையூட்டுவது. அதில் உள்ளது பௌதிக சக்தி மட்டுமல்ல ஆன்ம சக்தியும்தான். இதை அறியும் வரை உலகம் மனிதனுக்கு சிறை போன்று இருக்கும். வானிலும், மண்ணிலும், நீரிலும், ஒளியிலும், காற்றிலும் ,கனவிலும், கலந்து உரையும் பரம்பொருளை காண்பதே மார்ஜனம்.
ப்ரயோகம்:-
ஓம் ஸ்ரீ கேசவாய நம:.
ப்ரோக்ஷண மந்திரம் : ஆபோஹிஷ்டா மயோ புவ: தாந ஊர்ஜே ததாதன, மஹேரணாய சக்ஷஸே, யோவ : சிவதமோ ரஸ: தஸ்ய பாஜயத - இஹந உசதீரிவ - மாதர: தஸ்மா அரங்கமாமவ: யஸ்ய க்ஷயாய ஜின்வத
அபோஜநயதாசன :
இதுவரை சொல்லி ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொண்டு
"ஓம் பூர்புவஸ்ஸுவ:"
என்ற வியாஹ்ருதிகளை சொல்லி ஜலத்தைக் கையில் எடுத்து சிரஸை சுற்றிக் கொள்ளவும்.
பொழிப்புரை:
ஓம் ஸ்ரீ கேசவனுக்கு நமஸ்காரம்.
ஜல தேவதைகளாகிய நீங்கள் உயர்ந்த சுகத்துக்கு காரணமாக இருக்கிறீர்கள் என்பது பிரசித்தம். அப்படிப்பட்ட நீங்கள் எங்களுக்கு மகிமை பொருந்தியதும் ரமநீயமானதுமான ஞான திரிஷ்டியின் பொருட்டு போஷனையை அளியுங்கள். உங்களிடம் எந்த பரம மங்களமான பேரின்ப ரசம் உள்ளதோ அதற்கு இங்கேயே எங்களை நீங்கள், அன்பு சுரக்கும் அன்னையை போல் உரியவர்களாக்குங்கள். எந்த ரசத்தை நிலையாக வழங்கும் பொருட்டு நீங்கள் இன்ப வடிவாய் விளங்குகிரீர்களோ அந்த ரசத்திற்காக உங்களை மிகவும் ஆர்வத்துடன் நாடுகின்றோம். ஜல தேவதைகளாகிய நீங்கள் எங்களை ஞானத்தால் புனிதமான புனர்ஜன்மமடைந்து விளங்கும்படியும் அருள்வீர்களாக.
ரிக் வேதிகளக்கும், இதுவே புரோக்ஷன மந்திரம். சாம வேதி களுக்கும் காலையிலும் மாலையிலும் இதுவே மந்திரம்.
#Sathya001
அர்த்தமுள்ள ஸந்தியாவந்தனம்
தொடர்-11
_________________________
1)ப்ராசனம் :- காலை
வியாக்யாணம் :--
"இதஞ்ச கர்ம பூதம் ,மாஞ்சா-ஹங்கார ரூபம் கர்த்தாரம் ,ஸ்வயம் ப்ரகாசே வஸ்துனி ,அஹம் அஹங்காராதிஷ்டான- சித்ரூப: ஜுஹோமி தத்ஸர்வம் பஸ்மீகரோமி !!"
பிரயோகம் :-
வலது உள்ளங்கையில் உளுந்து மூழ்கும் அளவு ஜலத்தை எடுத்துக் கொண்டு, மந்திரத்தை ஜபித்து பின் அதை உட்கொள்ள வேண்டும்.
ஸூர்யஸ்ச மா மன்யுஸ்ச மன்யுபதயஸ்ச மன்யுக்ருதேப்ய: | பாபேப்யோ ரக்ஷன்தாம் | யத்ராத்ர்யா பாபா-மகார்ஷம் | மனஸா வாசா ஹஸ்தாப்யாம் | பத்ப்யா-முதரேண சிஸ்நா | ராத்ரிஸ்ததவலும்பது | யத்கிஞ்ச துரிதம் மயி | இதமஹம் மாமம்ருதயோநவ் | ஸூர்யே ஜ்யோதிஷி ஜுஹோமி ச்வாஹா |
பொழிப்புரை:--
ஸூர்ய தேவனே! கோபத்தில் அபிமானம் வைக்கும் தேவனே! கோபத்தை ஆளும் தெய்வங்களே! கோபத்தினால், என்னால் செய்யப்பட்ட பாவங்களிலிருந்து என்னை காப்பாற்றுங்கள். எந்தப் பாவங்களை நான் ராத்திரி வேளையில் மனத்தாலோ வாக்காலோ கைகளாலோ கால்களாலோ வயிற்றாலோ ஆண்குறியாலோ செய்திருக்கிறேனோ அவற்றை இரவில் அபிமானம் உள்ள தேவர் நாசமாக்கட்டும் . இங்ஙனம் பாவம் நீங்கிய என்னை நான் மோக்ஷத்திற்கு காரணமாகிய சூரிய வடிவமான பரஞ்யோதியில் ஹோமம் செய்கின்றேன். இந்த ஹோமம் நன்கு அனுஷ்டிக்கப்பட்டதாக வேண்டும்.
#Sathya001
அர்த்தமுள்ள ஸந்தியாவந்தனம்.
தொடர்-10
_____________________________
ப்ராசனம் :- மாத்யானிஹம்
வியாக்யாணம் --
ப்ருதிவீம்- அஸ்மத் சரீரம் வா , கார்ய -காரணயோ -ரபேதாத் ப்ரஹ்மண -வேதஸ்ய பதி: பாலக: ,வேதபுருஷ: அதவா ஆசாரிய: !ப்ரஹ்ம பூதா- நித்ய பூதம் ப்ரஹ்மா !!
ரிஷி -,சந்தஸ் -தேவதை :-
ஆப புனந்து இத்யனுவாகஸ்ய ! ஆப ரிஷி:! அனுஷ்டுப் சந்த: !
ப்ரஹ்மணஸ்பதிர் தேவதா !
ஆத்ம ஸுத்யர்த்தே அபாம் ப்ராசனே விநியோக: !!
பிரயோகம்:---
ஆப: புனந்து - ப்ருதிவீம் ப்ருதீவி பூதா புனாதுமாம், புனந்து ப்ரஹ்மணஸ்பதி: ப்ரஹ்மபூதாபுனாதுமாம், யதுச் சிஷ்டம் அபோஜ்யம்-யத்வாதுச்சரிதம் மம, ஸர்வம் புனந்து மாமாப: அஸதாம்ச - ப்ரதிக்ரஹம் ஸ்வாஹா -
ஜல தேவதை தனக்கு உறைவிடம் ஆகிய பூமியை புனிதம் ஆக்கட்டும். அங்கனம் புனிதமாக்கப்பட்ட பூமி என்னை புனிதம் ஆக்கட்டும். அது வேதத்திற்கு உறைவிடம் ஆகிய ஆச்சாரியனையும் புனிதம் ஆக்கட்டும். என்றும் புனிதமாய் உள்ள வேதம் என்னை புனிதம் ஆக்கட்டும். பிறர் உண்ட மிச்சமும் புசிக்க தகாததுமான எது என்னால் புசிக்க பட்டதோ அல்லது என்னுடைய எந்த துர்நடத்தை உண்டோ மேலும் கெட்டவர்களிடம் இருந்து ஏற்றுக்கொண்டது எது உண்டோ அவை எல்லாவற்றிலிருந்தும் என்னை ஜல தேவதை புனிதமாக்கட்டும் என்று பிரார்த்தனை செய்து புனிதமான என்னை பரமாத்ம ஜோதியில் ஹோமம் செய்கிறேன்.
தொடரும்......
#Sathya001
அர்த்தமுள்ள ஸந்தியாவந்தனம்.
தொடர்-10
_____________________________
ப்ராசனம் :- மாத்யானிஹம்
வியாக்யாணம் --
ப்ருதிவீம்- அஸ்மத் சரீரம் வா , கார்ய -காரணயோ -ரபேதாத் ப்ரஹ்மண -வேதஸ்ய பதி: பாலக: ,வேதபுருஷ: அதவா ஆசாரிய: !ப்ரஹ்ம பூதா- நித்ய பூதம் ப்ரஹ்மா !!
ரிஷி -,சந்தஸ் -தேவதை :-
ஆப புனந்து இத்யனுவாகஸ்ய ! ஆப ரிஷி:! அனுஷ்டுப் சந்த: !
ப்ரஹ்மணஸ்பதிர் தேவதா !
ஆத்ம ஸுத்யர்த்தே அபாம் ப்ராசனே விநியோக: !!
பிரயோகம்:---
ஆப: புனந்து - ப்ருதிவீம் ப்ருதீவி பூதா புனாதுமாம், புனந்து ப்ரஹ்மணஸ்பதி: ப்ரஹ்மபூதாபுனாதுமாம், யதுச் சிஷ்டம் அபோஜ்யம்-யத்வாதுச்சரிதம் மம, ஸர்வம் புனந்து மாமாப: அஸதாம்ச - ப்ரதிக்ரஹம் ஸ்வாஹா -
ஜல தேவதை தனக்கு உறைவிடம் ஆகிய பூமியை புனிதம் ஆக்கட்டும். அங்கனம் புனிதமாக்கப்பட்ட பூமி என்னை புனிதம் ஆக்கட்டும். அது வேதத்திற்கு உறைவிடம் ஆகிய ஆச்சாரியனையும் புனிதம் ஆக்கட்டும். என்றும் புனிதமாய் உள்ள வேதம் என்னை புனிதம் ஆக்கட்டும். பிறர் உண்ட மிச்சமும் புசிக்க தகாததுமான எது என்னால் புசிக்க பட்டதோ அல்லது என்னுடைய எந்த துர்நடத்தை உண்டோ மேலும் கெட்டவர்களிடம் இருந்து ஏற்றுக்கொண்டது எது உண்டோ அவை எல்லாவற்றிலிருந்தும் என்னை ஜல தேவதை புனிதமாக்கட்டும் என்று பிரார்த்தனை செய்து புனிதமான என்னை பரமாத்ம ஜோதியில் ஹோமம் செய்கிறேன்.
தொடரும்......
#Sathya001
அர்த்தமுள்ள ஸந்தியாவந்தனம்
தொடர்-12
__________________________
ப்ராசனம்- மாலை
________________________
வியாக்யாணம்:-
மன்னசீலம் அந்த:கரணம் ஸர்வ ப்ரவ்ருத்தி -நிவிருத்தி -ஹேது:
க்ரோத இத்யுகே !
ப்ரயோகம் :-
உளளங்கையில் தீர்த்தத்தை ஏந்தி மந்திரத்தை வகித்த பின் உட்கொள்ள வேண்டும் .
ரிஷி சந்தஸ்-தேவதை --
அக்னிசேத்யனுவாகஸ்ய! ஸூர்யோ ரிஷி:
தேவீ -காயத்ரி சந்த:
அக்னி ர் தேவதா :
ஆத்ம ஸுத்யர்த்தே அபாம் ப்ராசனே
விநியோக: !!
அக்நிச்ச மாமந்யுச்ச மன்யுபதயச்ச மன்யு-க்ருதேப்ய: பாபேப்யோ ரக்ஷந்தாம், யதஹ்னா பாபமகார்ஷம், மனஸா வாசா ஹஸ்தாப்யாம், பத்ப்யா-முதரேண சிச்னா, அஹஸ்ததவலும் பது, யத்கிஞ்ச துரிதம்மயி, இதமஹம் மா மம்ருத யோநெள ஸத்யே ஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா !!
---- தைத்ரிய ஆரண்யகம் (10.31)
அக்னியும், அனைவரையும் அடிமை கொள்ளும் கோபமும், கோபத்தை ஆளும் தெய்வ சக்திகளும், கோபத்தினால் செய்யப்பட்ட பாவங்களிலிருந்து என்னை காப்பாற்றட்டும். பகலில் மனத்தாலும், வாக்காலும், கைகளாலும், கால்களாலும், வயிற்றாலும் ஆண்குறியாலும், எந்தப் பாவத்தை செய்தேனோ, இன்னும் என்னிடத்தில் என்ன பாவம் உண்டோ, அதையும் பகலின் அதிதேவதை நீக்கி அருள வேண்டும். இங்கனம் பாபம் நீங்கிய என்னை நான் மோட்சத்திற்கு காரணமாகிய முக்காலத்திலும் சத்தியமாய் விளங்கும் பரஞ்சோதியில் ஹோமம் செய்கிறேன். இந்த ஹோமம் நன்கு அனுஷ்டிக்க பட்டதாக ஆக வேண்டும்.
தொடர்வோம்.........
#Sathya001
#அர்த்தமுள்ள ஸந்தியாவந்தனம்
தொடர்-13
______________________________
புனர்மார்ஜனம் :-
ப்ரயோகம்- முதலில் ததிக்ராவ்ண்ண மந்திரங்களாலும் ,பின்னர் ஆபோஹிஷ்டா " தொடங்கி 7 மந்திரங்களாலும் பவித்ர விரலால் ப்ரோக்ஷித்து கொண்டு, "யஸ்ய க்ஷயாய ஜிந்வத: என்ற மந்திரத்தால் பாதங்களை தொட்டு
ஆபோ ஜநயதா ச ந:" என்ற மந்திரத்தால் ஆத்ம பரிஷேஷனம் செய்து கொள்ள வேண்டும்.
"ததிக்ராவ்ண இதி மந்த்ரஸ்ய வாமதேவ ரிஷி: அனுஷ்டுப் ச்சந்த:
ததிக்ராவா தேவதா ப்ரோக்ஷணே வினியோக:"
ததிக்ராவ்ண்ண மந்திரத்திற்கு வாமதேவர் ரிஷி. அனுஷ்டுப் சந்தஸ்.
ததி க்ராவா என்பது தேவதை. ப்ரோக்ஷணத்தால் இந்த மந்திரம் வினியோகிக்கப் படுகிறது.
"ததிக்ராவிண்ணோ அகாரிஷம் | ஜிஷ்ணோரஶ்வஸ்ய வாஜிந: |
ஸுரபிநோ முகாகரத் ப்ரண ஆயூகும்ஷி தாரிஷத் |"
--------தைத்ரிய ஸம்ஹிதை.
ஜயசீலரும், ஜகத்வ்யாபியும், அன்னமுள்லவரும் ஆகிய ததிக்ராவா எனும் தேவதைக்கு ஸ்திதிகளைச் செய்கிறோம். அவர் எங்கள் முகத்தை வாஸனையுள்ளதாக செய்யட்டும். வாழ்க்கையும் உபத்ரவமில்லாமல் நடத்தப் படட்டும். தீர்க்காயுஸ் உள்ளதாகச் செய்யட்டும்.
"ஆபோஹிஷ்டா மயோ புவ: | தாந ஊர்ஜே ததாதந | மஹேரணாய சக்ஷஸே | யோ வ: ஶிவதமோ ரஸ: | தஸ்ய பாஜயதேஹ ந: | உஶதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாமவ: |
யஸ்ய க்ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:"
(ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:)
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:)
ஓ ஜலதேவதையே ! தாங்கள் இன்பத்தைத் தருவதாக இருக்கிறீர். அப்படி இன்பம் தரும் நீர் எங்களுக்கு அதிகமாகவும் ப்ரகாஸமாகவும் இருக்கின்ற அறிவு உண்டாவதற்காக அன்ன ரஸத்தை அளியும். ! உம்மிடம் எந்த ரஸம் மிகச்சிறந்ததாக இருக்கிறதோ அந்த ரஸத்தை அன்புள்ள தாய் மகனுக்கு அளிப்பதுபோல் எங்களுக்கு அளியும். அந்த ரஸமானது ஸ்திரமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அந்த ரஸத்தைப் பெறுவதற்காக உங்களை விரைவாக வந்தடைகிறோம். ஓ ஜலதேவதையே ! எங்களை நல்ல பிறப்புள்ளவர்களாகச் செய்யும். !
தொடர்வோம்
Sathya001
#அர்த்தமுள்ள ஸந்தியாவந்தனம்
தொடரி-14
_____________________________
புனர்மார்ஜநம்: (இது ஆந்திர பந்ததி)
உத்தரணியால் ஜலம் எடுத்து உள்ளங்கையில் வைத்து ஒவ்வொரு மந்திரத்தையும் ஜபித்து, தலையில் தனித்தனியே மூன்று முறை ஜலத்தால் ப்ரோக்ஷித்துக் கொள்ளவும்.
ஹிரண்யவர்ணா: ஶுசய: பாவகா யாஸுஜாத: கஶ்யபோ யாஸ்விந்த்ர: | அக்நிம்யா கர்ப்பம், ததிரே விரூபா: தாநஆப: ஶக்குஸ்யோநா பவந்து | 1
யாஸாகும்ராஜா வருணோ யாதிமத்யே ஸத்யாந்ருதே அவபஶ்யஞ்ஜநாநாம் | மதுஶ்ஶுத | ஶுசயோ யா : பாவகாஸ்தாந ஆப: ஶக்குஸ்யோநா பவந்து | 2
யாஸாந்தேவா திவிக்ருண்வந்தி பக்ஷம்யா : அந்தரிக்ஷே பஹுதாபவந்தி | யா: ப்ருதிவீம் பயஸோந்தந்தி ஶுக்ராஸ் தானஆப: ஶக்குஸ்யோநா பவந்து |3
கையில் தீர்த்த்த்தை எடுத்துக் கொண்டு இந்த மந்திரத்தைச் சொல்லி நீரை முகர்ந்து கீழே விட்டுவிடவும் :
ஶிவே நமா சக்ஷுஷா பஶ்யதாபஶ் ஶிவயா தநுவோ பஸ்ப்ர்ஶத த்வசம் மே ஸர்வாகும் அக்நீகும் ரப்ஸுஷதோ ஹுவேவோமயிவர்சோ பலமோஜோ நிதத்த 4
• அகமர்ஷணம்:
ஜலத்தைக் கையிலெடுத்து இம்மந்திரத்தைச் சொல்லி முகர்ந்து கீழே விடவேண்டும்.
த்ருபதாதிவ முஞ்சது | த்ருபதாதிவேந் முமுசா ந: | ஸ்விந்ஹஸ்நாத்வீ மலாதிவ பூதம் பவித்ரேணவாஜ்யம் ஆபஶ்ஶுந்தந்து மைநஸ:
கட்டுமரத்தில் இருந்து விடுபடுவது போல் என்னை ஸகலவிதமான பாபங்களில் இருந்தும் விடுவிக்கட்டும். கட்டுமரத்திலிருந்து விடுபட்டவன் போலும், வியர்வையுள்ளவன் ஸ்நாநம் செய்து அழுக்கிலிருந்து விடுபட்டவன் போலும், ஸம்ஸ்காரத்தால் அசுத்தத்தில் இருந்து நீங்கிய நெய்போலும், என்னை ஜலதேவதை பாபங்களிலிருந்து ஶுத்தனாகச் செய்யட்டும்.
ஆசமனம் : கேஶவ முதல் ஸ்ரீகிருஷ்ணா வரை
ரிக்வேதிகள்:-
புனர்மார்ஜனத்தில் பின் வரும் மந்திரங்களையும் சேர்த்துகொள்ளப்படுகிறது.
.
ஓம் ஸந்நோ தேவீரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே: சம்யோ ரபிஸ்ரவந்து ந:
ஈசானம் வார்யானாம் க்ஷயந்தீஸ் சர்ஷணீனாம் : ஆபோ யாசாமி பேஷ
அப்ஸுமே ஸோமோ அப்ரவீ-தந்தர் விச்வானி பேஷஜம் : அக்னிம் ச விஸ்வசம்புவம்:
ஆப : ப்ருணீத பேஷஜம் வரூதம் தனவே (த்ரிகம்பஸ்வரம்) மம: ஜ்யோக்ச ::ஸூர்யம் த்ரூசே ::
இதமாப: ப்ரவஹத யத்கிஞ்ச துரிதம் மயி:
யாதவாஹ - மபித்துத்ரோஹ யாதவாசேப உதாந்ருதம் ::
ஆபோ அத்யான்வசாரிஷம் , ரஸேன ஸமகஸ்மஹி :
பயஸ்வாநக்ன ஆகஹி தம் மா ஸமஸ்ருஜ வர்சஸ :
ஸஸ்ருஷீ : ததபஸோ , திவா நக்தம் ச ஸஸ்ருஷீ ::
வரேண்ய க்ருதா, ரஹமா தேவீ, ரவஸே ஹுவே:
புனர்மார்ஜனத்துக்கு பின் கையில் தீர்த்தம் ஏந்தி "ருதஞ்ச" என்ற மந்திரத்தால் ஜபித்து, தீர்த்தத்தை முகர்ந்து, தென்மேற்கு (நிருருதி) திசையில் விடுவது சிலர் சம்பிரதாயம் .
பிரயோகம் :-
ருதஞ்ச மந்த்ரஸ்ய"
அகமர்ஷண ரிஷி:
அனுஷ்டுப் சந்த:
பாவ வ்ருத்த பரமாத்மா தேவதா!
பாப புருஷ விசர்ஜனே விநியோக:
ஜலத்துடன் கையை மூக்கின் அருகே பிடித்து
ஓம் ரிதம் ச , ஸத்யம் சா பித்தாத் தபஸோ த்யஜாயத:
ததோ ராத்ரியஜாயத ததஸ் ஸமுத்ரோ அர்ணவ:
ஸமுத்ரா தர்ணவா ததி ஸம்வத்ஸரோ அஜாயத :
அஹோராத்ராணி விததத் விஸ்வஸ்ய மிஷதோவஸீ :
ஸூர்யா சந்த்ரமஸௌ தாதா யதாபூர்வ மகல்பயத்:
திவம் ச ப்ருதிவீம் சாந்தரிக்ஷ மதோ ஸ்வ:
அந்த ஜலத்தை இடது பக்கத்தில் போடவும்
ஆசமனம் செய்க
தொடர்வோம்.....,
#Sathya001
__________________________________________
தொடர் -18
காயத்ரி ஜபம் --
மந்திரங்களுக்கு தாய் போன்றது காயத்ரி மந்திரம் .
வேதம் தான் சகல தர்மங்களுக்கும் மூலாதாரம். காயத்ரீ என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு "
"காயந்தம் + த்ராயத + இதி "
அதாவது தன்னை துதிப்பவனை காப்பாற்றுவது" என்று பொருள்.
"காயத்ரீம் வந்தே வேத மாதரம்"
காயத்ரீ வேதத்தின் தாய். இது மிகவும் வீர்யமுள்ள மந்த்ரம்.
காயத்ரீ மந்திரத்தை பற்றி ரிக் வேத சம்ஹிதையில் (3.62.10) கூறபட்டுள்ளது.
"காயத்ரோவை பர்ண: காயத்ரா: பசவ:
தஸ்மாத் த்ரீணி த்ரீணி
பர்ணஸ்ய பலாசானி
த்ரிபதா காயத்ரி !!
இது "த்ரிபதா காயத்ரீ"
அதாவது 8 எழுத்துக்கள் கொண்ட 3 பகுதிகள் என்றும் அழைக்க படுகிறாள். தைத்ரிய ஆரண்யகத்தில்(2.10 &2.11) பிரம்ம யக்ஞம், யக்ஞோபவீதம் மற்றும் ஸந்த்யாவந்தனம் பற்றி கூறபட்டுள்ளது. ப்ரணவ மந்த்ரமும், 3 மகா வ்யாஹ்ருதியும் ( பூ:,புவ:,சுவ: ), காயத்ரீ மந்த்ரம் சொல்லும் முன் சொல்ல வேண்டும்.
உண்மையில் உபநயண காலத்தில்
மாணவன் குருவிடம் ,
"ஸாவித்ரீம் போ அனுப்ரூஹி"
என்று " ஸாவித்ரி" மந்திரத்தைதான் கோருகிறான் . ஸாவித்ரி மந்திரம் ப்ரம்மத்தை அறியும் சாதனம்தான்.ஆனால் குருவானவர்
ப்ரணவத்தையும் ,அதனுடன் "பூ: ,புவ: , ஸுவ: " என்ற மூன்று வ்யாஹ்ருதிகள் சேர்த்து ப்ரம்ம ஸ்வரூபமான காயத்ரி மந்திரத்தை உபதேசம் செய்கிறார்.
"முக்தா வித்ரும ஹேம நீல தவளச் சாயைர் முகை: த்ரீக்ஷணை:
யுக்தாம் இந்து நிபத்த ரத்ன மகுடாம் தத்வார்த்த வர்ணாத்மிகாம்
காயத்ரீம் வரதாபயாங்குச கசா: சுப்ரம் கபாலம் கதாம்
சங்கம் சக்ரமதாரவிந்த யுகளம் ஹஸ்தைர் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே"
அதாவது
முத்து, பவழம், ஸ்வர்ணம், கறுப்பு, வெளுப்பு ஆகிய வர்ணங்களுள்ள ஐந்து முகமுள்ளவளும், (ஒவ்வொரு முகத்திலும்) மூன்று கண்கள் உள்ளவளும், சந்த்ரகலையை தலைமீதணிந்தவளும், தத்வார்த்தம் உள்ளதான எழுத்து ரூபமானவளும், வரதம், அபயம், அங்குசம், பாசம், வெளுப்பான கபாலம், கதை, சங்கம், சக்ரம், இரு தாமரை வைகளிக் கரத்தில் ஏந்தியவளுமான காயத்ரியைப் பஜிக்கிறேன்
என்று ஸ்த்ரீ ரூபமாக இந்த மந்திரத்தின் தியான ஸ்லோகம் கூறினாலும் , இந்த மந்திரத்தின் பொருள் புருஷ ஸ்வரூபத்தை குறிக்கிறது. அதாவது
"எவர் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக' என்று பொருள்.
இதிலிருந்து
பூலோகம் ,புவர்லோகம், ஸுவர்லோகம் என்று மூன்று உலகத்திலும் ப்ரத்யக்ஷமான ப்ரம்மஸ்வரூபமான ஸூர்ய பகவானின் தேஜஸ் தான் காயத்ரி
என்பது புலப்படுகிறது.
மேலும் தொடர்வோம் ........
#Sathya001
___________________________________________
தொடர் -19
காயத்ரி ஜபம் (தொடர்ச்சி....)
பூ: , புவ:, ஸுவ: ஆகிய மூன்று வ்யாஹ்ருதிகள் முறையே பூலோகம், புவர்லோகம், ஸ்வர்க்கம் எனப் பொருள்படுகின்றன. இம்மூவுலகங்கள் அகத்திலும் இருக்கின்றன, புறத்திலும் இருக்கின்றன. பக்குவம் அடையாதவர்களுக்கு இந்த மூவுலகும் புறத்தில் உள்ளதாக உணர்கிறார்கள். அகத்திலேயே அம்மூன்றும் அமைந்துள்ளன என்னும் கொள்கை சிறிது பக்குவம் அடைந்தவர்களுக்கே விளங்குகிறது.
நம்மிடையே இம்மூவுலகங்களும் எப்படி அமைந்திருக்கின்றன என்று பார்ப்போம்.
ஜாக்ரத் அவஸ்தை, சொப்பன அவஸ்தை, சுஷுப்தி அவஸ்தை ஆகிய மூன்று அவஸ்தைகளும் நம்மிடத்து மாறி மாறி அமைகின்றன. மக்கள் மட்டும் அல்லாமல் பறவைகளும், விலங்குகளும் இந்த மூன்று நிலைகளை அனுபவிக்கின்றன.
நனவு அல்லது விழித்திருந்து புறவுலகோடு தொடர்புடன் வைப்பது ஜாக்ரத் அவஸ்தை. நனவு நிலையில் உடல், உள்ளம் ஆகிய இரண்டும் வேலை செய்கின்றன.
கனவு என்பது சொப்பன அவஸ்தை. கனவு நிலையில் புறவுலகோடு தொடர்பு வைப்பதில்லை. ஸ்தூல சரீரத்துக்கும் அங்கு வேலையில்லை. அகக் கரணமாகிய மனதே கற்பனையில் ஸ்தூல சரீரத்தையும், புறவுலகத்தையும், அதிலுள்ள உயிர்வகைகளையும் கற்பனை பண்ணிக் கொண்டு இருக்கிறது.
அந்நிலையில் இருக்கின்ற பொழுது அது ஜாக்ரத அவஸ்தைக்கு நிகராக இருப்பதுபோல தோன்றுகின்றது.
கனவற்ற உறக்கம் சுஷுப்தி அவஸ்தை எனப்படுகிறது. அந்த அவஸ்தையில் அகவுலகம் இல்லை; புறவுலகம் இல்லை. மனதும் செயலற்றுக் கிடக்கிறது. பிரக்ஞை மட்டும் தமோகுணத்தால் மூடப்பட்டிருப்பது போன்று தன்மயமாய் எஞ்சியிருக்கிறது.
இந்த மூன்று அவஸ்தைகளே பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம் என்று இயம்பப் பெறுகின்றன.
விழித்திருக்கின்ற பொழுது நாம் சுவாசிக்கின்றோம்; கனவு காண்கின்ற பொழுதும் சுவாசிக்கின்றோம்; கனவற்ற உறக்கத்திலும் சுவாசிக்கின்றோம். சுவாசிப்பதை நிறுத்துவதில்லை. நிறுத்தினால் ஒழிந்துபட்டுப் போவோம்.
நிர்விகல்ப சமாதியில் அதாவது அனைத்து உணர்வுகளும் ஒடுங்கும் ஒருமை நிலை இருப்பவர்கள் மட்டும் சுவாசிக்காதும், அழிந்துபட்டுப் போகாமலும் இருக்கின்றனர். மூன்று அவஸ்தைகளிலும் நிறுத்தாது நாம் சுவாசித்து வருவது போன்று மூன்று அவஸ்தைகளிலும் காயத்ரியில் அடங்கியிருக்கிற பொருளுக்கேற்ப ஸ்மரணம் செய்வோமானால் அதற்கேற்றவாறு ஆத்ம பரிபாகம் நமக்கு ஏற்படுகிறது.
அந்நிலையை எட்டுகிறவர்கள் காயத்ரீ தத்துவத்தைக் கையாண்டவர்கள் ஆகின்றனர். அந்நிலையை எட்டுவதே காயத்ரி ஜபத்தின் குறிக்கோள்.
மேலும் தொடர்வோம்........
#Sathya001
Could you tell me the continuation link pls.
ReplyDeleteThanks following the blog. Will continue shortly.
DeleteBeautifully explained
ReplyDeleteThank you 🙏
DeleteVery well explained. Pl continue with Gayathri upasthanam Surya upasthanam etc.
ReplyDelete