தர்ம சாஸ்திரம்
ஸ்ராத்த காண்டம்-1 ________________________ நாராயணம், பத்மபுவம் வசிஷ்டம் ! சக்திஞ்ச தத்புத்ரம் பராசரஞ்ச ! வியாசம் ஸுகம் கெளடபதம் மஹாந்தம் ! கோவிந்த யோகீந்த்ர மதாஸ்ய சிஷ்யம் ! ஶீ சங்கராச்சார்ய மதாச்ய பத்மபாதஞ்ச ஹஸ்தாமலகஞ்ச சிஷ்யம் ! தம் தோடகம் வார்த்திக காரமன்யாம் அஸ்மத் குரும் சந்தத மானதோஸ்மி !!. எல்லோருக்கும் நமஸ்காரங்கள் . "ஜந்தூனாம் நர துர்லபம்" என்பது ஆன்றோர் வாக்கு.இந்த மனித பிறவி தானும் பூரணமாகி தன்னை சார்ந்தவைகளையும் பூர்ணமாக ஆக்கவல்லது. இதற்கு வழிவகுக்க நமக்கு கிடைத்த அற்புதமான பொக்கிஷம் வேதங்கள். இந்த வேதங்களின் துணையுடன் இந்த ப்ரக்ருதியை பூர்ணத்வம் பெற ப்ரக்ருதி ஸ்வரூபமான அஸ்வத்தை(குதிரையை) கொண்டு செய்யப்படும் மஹாயக்ஞம் அஸ்வமேத யக்ஞம். இதைசெய்வதால் ப்ரக்ருதியை ஆதாரமான வசு , ருத்ர ஆதித்யர்கள் சந்தோஷமடைந்து செய்தவனுக்கு இந்திரனுக்கு சமமான பதவியை வழங்குகிறார்கள். இதேபோல் ஒருவர் இறந்த பிறகு 12 நாட்கள் க்ருத்யத்தால் அவருடைய ப்ரேத ஸ்வரூபம் விடுத்து ஸபிண்டிகரணத்தால் பித்ருவாக பூர்ணத்துவம் பெற்று அவர்களை வசு , ருத்ர ஆதித்யர்க