தர்ம சாஸ்திரம்





ஸ்ராத்த காண்டம்-1

________________________


 

நாராயணம், பத்மபுவம்  வசிஷ்டம் ! சக்திஞ்ச தத்புத்ரம்  பராசரஞ்ச ! வியாசம்  ஸுகம்  கெளடபதம் மஹாந்தம் ! கோவிந்த யோகீந்த்ர மதாஸ்ய சிஷ்யம்  ! ஶீ சங்கராச்சார்ய மதாச்ய பத்மபாதஞ்ச ஹஸ்தாமலகஞ்ச சிஷ்யம்  ! தம் தோடகம் வார்த்திக காரமன்யாம் அஸ்மத்  குரும்  சந்தத  மானதோஸ்மி !!.

எல்லோருக்கும் நமஸ்காரங்கள் .

"ஜந்தூனாம் நர துர்லபம்" என்பது ஆன்றோர் வாக்கு.இந்த மனித பிறவி தானும் பூரணமாகி  தன்னை சார்ந்தவைகளையும் பூர்ணமாக ஆக்கவல்லது. இதற்கு வழிவகுக்க   நமக்கு கிடைத்த அற்புதமான பொக்கிஷம்  வேதங்கள். இந்த வேதங்களின் துணையுடன் இந்த ப்ரக்ருதியை பூர்ணத்வம் பெற ப்ரக்ருதி ஸ்வரூபமான அஸ்வத்தை(குதிரையை) கொண்டு செய்யப்படும் மஹாயக்ஞம் அஸ்வமேத யக்ஞம். இதைசெய்வதால் ப்ரக்ருதியை ஆதாரமான  வசு , ருத்ர ஆதித்யர்கள் சந்தோஷமடைந்து செய்தவனுக்கு இந்திரனுக்கு சமமான பதவியை வழங்குகிறார்கள். இதேபோல் ஒருவர் இறந்த பிறகு 12 நாட்கள் க்ருத்யத்தால் அவருடைய ப்ரேத ஸ்வரூபம் விடுத்து  ஸபிண்டிகரணத்தால் பித்ருவாக  பூர்ணத்துவம் பெற்று  அவர்களை வசு , ருத்ர ஆதித்யர்கள் ஸ்வரூபமாகவே மாற்றும் இந்த பித்ரு ஸம்ஸ்காரம்  "பித்ருமேதம்" என அழைக்கப்படுகிறது. அதனாலயே பித்ருமேதம் எனப்படும் பித்ருயக்ஞம்  அச்வமேத மஹாயக்ஞத்துக்கு நிகராக சொல்லப்படுகிறது. பித்ருக்களும் வசு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபமாதலால் அவர்களை போலவே எல்லா வரங்களையும்,  தர வல்லவர்களாக  இருக்கறார்கள். தேவகர்மாவைப்போல மிகவும் கடினமான யோகம், தவம், மந்திர சித்தி போன்ற ப்ரயத்தனங்கள் இந்த பித்ரு யக்ஞத்தில் இல்லை. அவரவர்களுடைய ஸூத்ரத்திற்கு  ஏற்ப மிகவும் ஸ்ரத்தையுடன் செய்தால்  தெய்வ யக்ஞ பலனை இந்த பித்ரு யக்ஞத்தில் அடைந்துவிடலாம். நம் முன்னோர்கள் இதற்கு உண்டான வழியை தர்ம சாஸ்திரமாக வகுத்து குடுத்திருக்கிறார்கள்.

 இங்கு  தரப்பட்டுள்ள தகவல்கள் என்னுடைய சொந்த எண்ணங்களோ, கருத்தோ அல்ல. தர்ம சாஸ்திரம் ஸ்ராத்த  காண்டத்தில் தொகுக்கப்பட்டுள்ள தகவல்களைதான்  இங்கு பரிமாறபட்டுள்ளது.இந்த தகவல்கள் அடுத்த தலைமுறை ,atleast அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இங்கு பதிவிடப்படுகிறது..

"ஸ்ராத்தம்" என்னும் பித்ரு கர்மா மிகவும் ஸ்ரத்தயா பண்ணனும்கறதால இந்த பெயர் பெற்றது. 
 இது ஒவ்வொரு வேத சாகைக்கும், ஸூத்ரத்துக்கும் மாறுபட்டாலும் சில விதிகள் எல்லா ஸூத்ரங்களுக்கும் பொதுவானதாக. தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

A)ஸ்ராத்த காலம்:-

1)ஒவ்வொருவருக்கும் அவர் இறந்துபோன மாதத்தில், பக்ஷத்தில்,திதியில் வருஷந்தோரும் ப்ரத்யாப்திக( பிரதி ஆப்திகம்) ஸ்ராத்தம் செய்யவேண்டும்.

2)ஒரு திதி இரண்டு நாள் வ்யாபித்திருந்தால் ,பிற்பகல் வ்யாபித்திருக்கும் நாளில் செய்ய வேண்டும்.

3)இரண்டு நாளும் பிற்பகல் வ்யாபித்திருந்தால் அதிக வ்யாப்தி உள்ள நாளில் செய்யவேண்டும். 

4)இரண்டு திதிகளும்  சமமாக இருந்தால் முன்தினத்தில் செய்யவேண்டும்.

5)ஒரு மாதத்தில் இரண்டு திதிகள் வந்தால் பின்வரும் திதியில் ஸ்ராத்தம் செய்யவேண்டும்.

6) பின் வரும் திதியில் ஸங்க்ரமனமாக (மாசப்பிறப்பு) இருந்தாலும், இரண்டு திதியிலும் தோஷம் இருந்தாலும் முன்வரும் திதியில் செய்யவேண்டும்.

7) ஒரு மாதத்தில் ஒரே திதியானால் எந்த தோஷமிருந்தாலும் அந்த திதியில்தான் செய்யவேண்டும். 

8) ஒரு மாதத்தில் திதியே இல்லாவிட்டால் முந்தைய மாதத்தில் சாந்திரமானப்படி சுத்தமான திதியில் செய்யவேண்டும். முந்தைய மாதத்தில் சாந்திரமானப்படி இல்லாவிட்டால் அடுத்த மாதம் ஸ்ராத்தம் செய்யலாம்
.
பொதுவாக ஸ்ராத்தம் மாத்யானிக காலத்தில் சங்கல்பிக்கப்படுகிறது

B) த்ரிபுருஷ உத்தேசமும், ஏகபுருஷ உத்தேசமும்:-

1)த்ரிபுருஷ உத்தேசம் அதாவது பார்வணவிதானம்:-  பிதா, மாதா, பிதாமஹர், பிதாமஹீ, ப்ரபிதாமஹர், ப்ரபிதாமஹீ, மாதாமஹர், மாதாமஹீ, பத்னி , பித்ருவ்யர்( பிதாவின் சகோதரர்) , தமயன், ஜனகபிதா, ஜனகமாதா இவர்களுக்கு ஸ்ராத்தம் பார்வணவிதானமாக அதாவது  பித்ரு ஸ்தானத்தில் ஒருவரும், விஸ்வேதேவர் 
 ஸ்தானத்தில் ஒருவரும், ஸாக்ஷிபூதமாக ஶீ மஹாவிஷ்ணு ஸ்தானத்தில் ஒருவருமாக மூன்று புருஷ உத்தேசமாக செய்யவேண்டும்

 2) ஏக புருஷ உத்தேசம்:-- மேலே சொல்லப்படாத மற்றவர்களுக்கு  ஏகோதிஷ்டமாக அதாவது ஒருவரைமட்டும் உத்தேசித்து ஸ்ராத்தம் செய்யவேண்டும்.

3) ஸ்த்ரீகள் தனியாக செய்யும் ஸ்ராத்தங்களில், மாமனார் ,மாமியார் ,தாய் , தந்தை, கணவன், பிதாமஹர், பிதாமஹீ இவர்கள் ஸ்ராத்தம் மட்டுமே பார்வண விதானத்தில் செய்யலாம் . மற்றவர்களுக்கு ஏக புருஷ உத்தேசம்தான்.


ஸ்ராத்தகாண்டம்-2


புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே ஶயனம் |
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்றுபயா‌உபாரே பாஹி முராரே ||

ஆதி சங்கரர் திரும்பி திரும்பி ஜனனமும் , மரணமும் சம்பவித்து  உழலும் இந்த சம்சார கடலிலிருந்து விடுபட முராரி  என்னும் மஹாவிஷ்ணுவை துதித்து  சரணடைவதுதான் வழி எனக் கூறுகிறார். நம் வர்க்கத்தில் உதித்த பித்ருக்களை இந்த பித்ரு யக்ஞம் மூலமாக கடையேற்றி பரமபதம் எய்துவது சாத்தியமாகிறது. இது எப்படி என்று பார்ப்போம்.  ஸ்ராத்த கர்மாவில் நம் வர்க்கத்தின் முதல் 3 தலைமுறைகளில் பிதா வசு ஸ்வரூபமாகவும் பிதாமஹர்  ருத்ர ஸ்வரூபமாகவும்   , பிரபிதாமஹர் ஆதித்ய ஸ்வரூபமாகவும், வரிக்கப்படுகிறார்கள்.  இந்த தலைமுறையில் பிதாவின் புத்ரன்  மரணத்துக்குப் பின் பித்ரு லோகம் அடையும்போது,  புத்ரன்,வசுவாகவும், பிதா ,பிதாமஹராகி ருத்ரனாகவும், பிதாமஹர் , பிரபிதாமஹராகி ஆதித்யனாகவும் ஆகிறார்கள் . ஏற்கனவே ஆதி்த்யனாக இருந்த பிரபிதாமஹர் நாம் செய்யும் ஸ்ராத்தத்தின் பலனாக பித்ருலோகம்விட்டு  மஹாவிஷ்ணுவின்  பரமபதம் அடைகிறார். இப்படி ஒரு ஜீவன மோக்ஷத்திற்கு வழிவகுப்பதால் இந்த பித்ரு யக்ஞம் மஹாபுண்ய கர்மாவாக கருதப்படுகிறது

ஸ்ராத்தம் செய்ய உகந்த இடம்

ஸ்ராத்தத்துக்கு தன் சொந்த க்ருஹம் மிகவும் விஷேஷம். அப்படி  செய்யமுடியாத பக்ஷத்தில் , தமயன், மாமனார், அம்மான், மற்றும் யோனி சம்பந்தமான உறவுகள் , தனது மித்திரன், புண்யநதிதீரம் போன்ற இடங்களில் செய்யலாம். கோவில்களிலும் , ஆசார்யன் சன்னிதியிலும் , செய்யக்கூடாது.  மணி ஓசை, இரும்பு ,விபூதி, திலகம்,ருத்ராக்ஷ மாலை, முத்திரை இவை களைக் கண்டால் பித்ருக்கள் ஆசை ஒழிந்து  ஓடி விடுகிறார்கள்.  மேற் கூரை இல்லாத ஸ்தலங்களில்  ஸ்ராத்தம் செய்யலாகாது.
ஸ்ராத்தம் எந்த இடத்தில் சங்கல்பித்தாலும் அந்த இடத்தை  ஸ்ராத்தபூமியான கயை  யாக பாவிக்கவேண்டும். ஸ்ராத்த ஸம்ரக்ஷக ஜனார்த்தனனையும் எழுந்தருள  ப்ராத்திக்கவேண்டும். இதை ஸ்ராத்த மந்த்ரங்களில் ". ஸ்ராத்த பூமிம்  கயா த்யாத்வா  !. த்யாத்வா தேவம் ஜனார்த்தனம்" என்ற வசனத்தில்  காணலாம்.

ஸ்தல  சுத்தி :-
  
ஸ்ராத்தம் செய்யும் இடத்தை பசுங்  கோமயத்தால் மெழுகி  சுத்தம் செய்யவேண்டும். எள்ளை  எல்லா இடங்களிலேயும் இறைக்கவேண்டும் . அந்த எள்ளையே ஸ்ராத்தம் செய்யும் இடத்தில் கட்டி வைக்கவேண்டும். எள்ளும்,  தர்ப்பையும் ஸ்வேத  வராக மூர்த்தியின்  உடலில் இருந்து உதிர்ந்ததால்  மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. அசுரர்களால் கெடுக்கப்பட்ட  ஸர்வமும் எள்ளினாலும், தீர்த்தினாலும் சுத்தியடைகிறது.

ஸ்ராத்தத்தில் க்ருச்சிர தர்மம் ( தயாராகுதல்):-

1)ஸ்ராத்த தினத்துக்கு ஒரு மாதம் அல்லது ஒரு பக்ஷம்( 15 நாள்) பரா அன்னம்,உச்சிஷ்ட அன்னம்,  க்ஷவரம், இவை கூடாது. தவிர்க்க முடியாத விஷயத்தில்  ஸ்ராத்த தினம் முதல்நாள் மற்றும் மறுநாள் இம்மூன்று நாட்களிலாவது பரா அன்னம், உச்சிஷ்ட அன்னம் இவைகளை கைவிடவேண்டும். ஒரு பொழுது மட்டும் ஆஹாரம்  நிமித்தம் கொள்ளவேண்டும் . தன்னுடைய ஆத்ம மித்ரன், ஆசார்யன், அம்மான், சகோதரி, மாமனார் ,மாமியார் , இவர்களின் அன்னம் பரா அன்னமாகாது.
2)ஸ்ராத்தத்துக்கு முந்தைய நாளும் ,ஸ்ராத்த தினத்திலும் கர்த்தா  குச்சியினால் பல் துலக்கக்கூடாது . 3)தரையில் படுத்து உறங்குவதும் , ப்ரம்மசர்யத்துடனும் கழிக்கவேண்டும். அப்படியில்லாதவன் நரகம் சென்றடைவான்.

ஹோமத்துடன்  செய்ய வேண்டிய ஸ்ராத்தங்கள்:-

பிதா,  மாதா, ஸபத்னிமாதா, பிதாமஹர், பிதாமஹீ, பிரபிதாமஹர்,  பிரபிதாமஹி, ஸீமந்த ஐேஷ்டர், மாதாமஹர், மாதாமஹி, பித்ருவ்யர்( தந்தையின் சகோதரன்),  ஜனகபிதா, ஜனக  மாதா, இவர்களுக்கு மட்டும்தான் ஹோமத்துடன் ஸ்ராத்தம்.  மற்றவர்களுக்கு இல்லை.
ஸ்த்ரீகள்  தனியாக செய்யும் ஸ்ராத்தங்கள் எதற்கும் ஹோமம் இல்லை. இந்த சங்கல்ப ஸ்ராத்ததில் ஆவாஹனம், ஹோமம், அர்க்கியம், விகிரம்  ,பிண்டப்ரதானம் இவைகள் எதுவும் இல்லை.





ஸ்ராத்தகாண்டம்-3


ஸ்ராத்தத்தின் வகைகள்:-

1) அன்ன ஸ்ராத்தம்:-

சமயல்செய்த அன்னமும், மற்ற பதார்த்தமும் கொண்டு செய்வது,

2)ஆம ஸ்ராத்தம்:-

 சமயல் செய்யாத அரிசி, காய்கறி  முதலிய திரவ்யங்களை  கொண்டு செய்வது.

3) ஹிரண்ய ஸ்ராத்தம்:-

உபகாரமாக  பணத்தை மட்டும்  தானமாக கொடுத்துச் செய்வது.

 4) நித்ய ஸ்ராத்தம்:- பிரதி வருஷம் செய்யும் ஆப்திக  ஸ்ராத்தம்.

5) நைமித்திய ஸ்ராத்தம்:-
நைமித்திகம் என்பது க்ரஹணம், அர்த்தோதயம், மஹோதயம் போன்ற காலங்களில் செய்வது.

ஸ்ராத்த தேவதைகள்:-

 
1) விஸ்வேதேவர்கள்:
  
இஷ்டி ஸ்ராத்தத்தில்(யாகத்துக்கு அங்கமான) " க்ரது-தகஷர்" என்றும்
நாந்தீ  ஸ்ராத்தத்தில்  ஸத்ய- வஸு என்றும்,
மஹாலய ஸ்ராத்தத்தில்
"துரி-ரோசன" என்றும்
பார்வண ஸ்ராத்தத்தில்
"புரூரவ- ஆர்த்ரவ" என்றும்,
நைமித்திக ஸ்ராத்தத்தில் ( ஸபிண்டிகரணத்தில்)"கால- காம" என்றும்,
ஸந்நியாசிகளின் ஸ்ராத்தத்தில் "ஸாது-குரு " என்றும் 
விஸ்வேதேவர்கள் அழைக்கப்படுகிறார்கள்

2) பித்ரு தேவர்கள் :-

அவரவர் வர்க்கத்தில் பிதாவை  வஸுவாகவும், பிதாமஹரை ருத்ரனாகவும், ப்ரபிதாமஹரை ஆதித்யனாகவும் அழைக்கவேண்டும்.  மாதா மற்றும் பிதா ஜீவித்திருப்பதற்கு  ஏற்ப 
அடுத்த மூன்று தலைமுறையை வஸு, ருத்ர, ஆதித்யராக கொள்ளவேண்டும்.

3) ஸ்ராத்த ஸமரக்ஷக ஶீ மஹாவிஷ்ணு:-
  
அதிகமான ஸூத்ரங்களில் மஹாவிஷ்ணு ஸ்தானத்தில் பிராம்மணாளை வரிக்காமல் தேவ கர்மாவில்  செய்வதுபோல்  அந்த ஸ்தானத்தில் இருப்பதாக பாவித்து ஸ்ராத்தத்தில் செய்வது வழக்கத்தில் உள்ளது. சில ஸம்ப்ரதாயங்களில்  
மஹாவிஷ்ணுவை ஸ்ராத்த தேவதையாக  எடுத்துக்கொள்வதில்லை.  ஆனால் அவர் நம் செய்யும் கர்மாவுக்கு சாக்ஷி பூதம் என்பதால், 
மஹாவிஷ்ணுவையும் தேவதையாக வரிப்பதுதான் உசிதம் என கருதப்படுகிறது.

ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்ராத்தம்:--

1)மாதா ,பிதா இவர்கள் ஸ்ராத்தம் ஒரே திதியில் சேர்ந்து வந்தாலும் திதித்வயத்தால் ஒரே நாளில்  வந்தாலும், தீட்டு போகும் நாளில் சேர்ந்து வந்தாலும் , பிதா ஸ்ராத்தத்தை முந்தியும், மாதா ஸ்ராத்தத்தை பிந்தியும் ஒரே சமயலில்  செய்யவேண்டும்.

2) பிதா மற்றும் ஸபத்னிமாதா ஸ்ராத்தம் சேர்ந்து வந்தால் பிதா ஸ்ராத்தத்தை முந்தியும், ஸபத்னிமாதா ஸ்ராத்தத்தை பிந்தியும்
வேறு சமயல் செய்து செய்யவேண்டும்.
 
3)ஆப்தீகமும் மாசிகமும்  
ஒன்று சேர்ந்தால் ஆப்திகம் அதாவது வருஷ  ஸ்ராத்தம் முந்தி செய்யவேண்டும்

4) மறித்த தாய்க்கோ, தந்தைக்கோ க்ருத்யம் செய்துகொண்டிருக்கும்போது ஏற்கனவே மறித்த  தாய்க்கோ, தந்தைக்கோ செய்ய முடியாமல் நின்றுபோன  
  ஸ்ராத்தத்தை ஸபிண்டீகரனத்துக்கு பிறகு செய்யவேண்டும்.

5) மாதா, பிதா ஸபிண்டீகரனத்துக்கு முன் அன்னியர்களின்
 ஸ்ராத்தத்தை செய்யக்கூடாது. ஆனால் அன்னியர்களின் ஸபிண்டீகரனத்துக்கு முன்பு மாதா, பிதா ஸ்ராத்தத்தை செய்யவேண்டும்.

6) ஒரே நாளில் ஒரே பித்ருக்களை உத்தேசித்து இரண்டு ஸ்ராத்தம் செய்யக்கூடாது..

7) நைமித்திகமும், நித்யமும்  சேர்ந்து வந்தால் நைமித்திகத்தை மட்டும் செய்தால் நித்யமும்  செய்ததாகிவிடும்.

8) பார்வண ஸ்ராத்தமும் ஏகோதிஷ்டமும் சேர்ந்து வந்தால் பார்வணம் முந்தியும், ஏகோதிஷ்டம் பிந்தியும் வெவ்வேறு சமயலில்  செய்யவேண்டும்.

9)ஸ்த்ரீகள்  தனியாக செய்யும் ஸ்ராத்தம் ரஜஸ் காலத்தில் மறைக்கப்பட்டால்  ஸ்நானம் செய்த மறுநாள் செய்யவேண்டும்

10)ஸ்ராத்தம் தீட்டினால் நின்றுபோனால் தீட்டு போகும் நாளில் 
செய்யவேண்டும்.

11)மறதியாலோ, வேறு காரணங்களினாலோ  விட்டுப்போன ஸ்ராத்தத்தை க்ருஷ்னபக்ஷ ஏகாதசியிலாவது, அமாவாசையிலாவது கிருச்சரம் செய்துக் கொண்டு பிறகு செய்யவேண்டும்.




ஸ்ராத்தகாண்டம்-4


ஸ்ராத்தத்தில் நிமிந்த்ரத்துக்கு(ப்ராம்மனார்த்தம்) யோக்யதையானவர்கள்:-  

1)ஸ்ராத்தத்தில் சமான கோத்ரர்கள் நிமிந்த்ரத்துக்கு யோக்யதையில்லாதவர்கள். ஆனால் ஸோதகும்ப ஸ்ராத்தத்துக்கு பாதகமில்லை.
2) யோனி சம்பந்தம்,கோத்ரசம்பந்தம், மந்த்ர  சம்பந்தம் இவைகள் உள்ளவரை நிமிந்த்ரம் சொல்லக்கூடாது.
3) அனுகல்பமாக பாட்டன்,அம்மான், மாமனார், தெளஹித்ரன்,மருமான், மாப்பிள்ளை, இவர்களை நிமிந்த்ரம் சொல்லலாம்.
4) பெரிய வேதவித்தாயிருந்தாலும், எதிரி  கூடாது.
5)நிமிந்த்ரத்தில்  வயதில் மூத்தவர் விஸ்வேதேவர் ஸ்தானத்தில் வரிக்கவேண்டும் . 
6) வரிக்கப்பட்டவரன் பிறகு மாட்டேன் என்று சொன்னாலும், வரிக்கப்பட்டவனை வேண்டாம் என்று ஒதுக்கிணாலும் சொன்னவர்க்கு ப்ரம்மஹத்யா  தோஷத்தை அடைவர்.
7) ப்ராம்மணர்கள்  ஸ்ராத்தம் முடியும் வரை ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்ளக்கூடாது .
8) நிமிந்த்ரம் சாப்பிடும்போது அமைதியாக எந்த குறையும் சொல்லாமல் சாப்பிட வேண்டும்.
9) விஸ்வேதேவ  ப்ராம்மணர், பித்ருவான ப்ராம்மணருக்கு பிறகு கை ஆரம்ப வேண்டும். ஆசமனமும் அப்படியே. 
10) நிமிந்த்ரம் சாப்பிடுபவர் வேதவித்தாயிருந்தால்  சிலாக்கியம், ரோகியையும்,  அங்கஹீனனையும் வரிக்கக்கூடாது. 
11) ப்ராம்மணர் அல்லாத வர்ணத்தினரை நிமிந்த்ரத்துக்கு வரிக்கக்கூடாது. 
12) நிமிந்த்ரம் சாப்பிட்டவர் 10 தடவை காயத்ரி மந்திரத்தால் ஆசமனம் செய்த பிறகுதான் ஸந்தியாவந்தனம்  செய்யவேண்டும். ஒளபாசனத்தை மற்றவர் கொண்டு செய்விக்கவேண்டும். 
13) நிமிந்த்ரம் சாப்பிட்டவர்களும், கர்த்தாவும் அன்றைய தினம் ,வழிநடத்தல்,மறுபடியும் ஆஹாரம் செய்தல், வைதீக கர்மம் 
செய்தல், ஸ்த்ரீ ஸம்போகம், தானம் வாங்குதல், தானம் கொடுத்தல் ,ஒளபாசனம் செய்தல், அத்யயனம் செய்தல் இவற்றை  விலக்கவேண்டும் . மறுதினமும்  எந்த வைதீக கர்மாவிலும்  ஈடுபடக்  கூடாது. 
14) நிமிந்த்ரம் சாப்பிட்டவர்கள் அன்றைய தினம் கர்த்தாவுடனே இரவை  கழிக்கவேண்டும். மறுநாள் சூர்யொதயத்துக்கு  முன் எழுந்து பரேஹி தரப்பணம்  முடிந்தபிறகு அல்லது மறுநாள் போஜனம் செய்வித்தப் பிறகு செல்லவேண்டும்.
15) நிமிந்த்ரம் சாப்பிட்டவர்கள் ப்ராயச்சித்தமாக குறைந்தபக்ஷம் 1000 காயத்ரியாவது ஜபிக்கவேண்டும்.

ஸ்ராத்த த்ரவ்யங்கள்  :-

1)ஸ்ராத்தத்தில் வஸ்திரம்  கொடுக்க வசதி இல்லாதவர் குறைந்த பகஷம்,  ப்ரம்மணர்களுக்கு யக்ஞோபவீதமாவது குடுக்கவேண்டும்.  உபவீதம்  கொடுக்கப்படாத ஸ்ராத்தம் நிஷ்பலன்.

2) ஸ்ராத்த சமயல் பசு நெய்யினால் செய்வது அதி உத்தமம்.  சமயலில் எள் சேர்ப்பதால் எண்ணெயும் சேர்க்கலாம் என்பது சிலர் கருத்து.

3) ஸ்ராத்த போஜனத்துக்கு உபயோகிக்கப்படும் வாழை இலையானது  தண்டத்துடன்  இருக்கவேண்டும். இடதுபக்கம்  நுணி  நீண்டு இருக்கவேண்டும். வலதுபக்கம் நுணி இருந்தால் பித்ருக்கள் ஆசையற்று ஓடிவிடுவர்.இலைகளின் அடி நுணியை  நறுக்கக்கூடாது. இலைகளின் நரம்பையும் கிழிக்கக்கூடாது .

4) ஸ்ராத்தத்தில் விலக்கவேண்டியவை:-
வரகு, காராமணி, கொள், துவரை,கடலை, முருங்கை, பூசனி, சுரைக்காய், மாதுளை, விளா, பெருங்காயம் மற்றும் நவீளகாலத்து  காய்கறிகள்.
இவைகள் விலக்க சொல்லப்பட்டாலும்,  
ஸ்ராத்த ஸங்கல்பத்தில், " ததர்த்தம்  மயா ஸம்பாதிதா: பக்வா: பச்யமானா: தேசகால  பாத்ராதயச்ச ஸர்வே ஸ்ராத்தார்ஹா: ஸந்த்விதி  பவந்தோ அனுக்ருஹ்ணந்து ! " என்ற வசனப்படி  அந்தந்த காலத்தில் , அந்தந்த தேசத்தில் சம்பாதித்த காய்கறிகளையும், பழங்களையும் , பொருள்களையும் கொண்டு ஸ்ராத்தத்தை அணுஷ்டிக்கவேண்டும்.
இப்பவும் கயாஸ்ராத்தத்தில் கத்திரிக்காயும், உருளையும்  உபயோகப்படுத்துவதை பார்க்கலாம்.




ஸ்ராத்தகாண்டம்-5


பித்ரு தேவர்கள் ப்ரார்த்தனை:- 


ஆதி வ்யாதி- ஹரம்  ந்ரூணாம் ம்ருத்யு  தாரித்ர்ய -நாசனம் !  ஶீ புஷ்டி  கீர்த்திதம்  வந்தே விப்ர- ஶீ பாத - பங்கஜம் !! விப்ரெளக தரசனாத்  சத்ய:  க்ஷீயந்தே பாபராசய: ! வந்தனாத்  மங்களாவாப்தி: அர்ச்சனாத்  அச்யுதம்  பதம் !!

ஸ்ராத்தாங்க சமயல் :-

1)ஸ்ராத்தாங்க சமயல் த்ரிபுருஷ உத்தேசமாக செய்யப்படும் பார்வணவிதான ஸ்ராத்தங்களில்தான் அனுசரிக்கப்படுகிறது. 
2) ஸ்த்ரீகள் தனியாக செய்யும் ஸ்ராத்தங்களிலும்,  பில் வாங்கி செய்யும் சங்கல்ப ஸ்ராத்தங்களிலும், ஏகோத்யேசமாக செய்யும் ஸ்ராத்தங்களிலும் ,ஹோமம் பிண்டப்ரதானம், விகிரான்னம், இவைகள் இல்லை. காக்கைக்கு மாத்திரம் அன்னம் உண்டு.
3) ஸ்ராத்த சமயல் கர்த்தாவின் பத்னியால் ஒளபாசனாக்னியில் செய்யப்படவேண்டும்.  தகுதியுள்ள மற்ற பந்துக்களுடன்  சேர்ந்து சமைக்கும் பக்ஷத்தில் அன்னமும், வாழைக்காய் கறியும், பாயசமும் பத்னியால் சமைக்கப்படவேண்டும்.
4) நன்றாக ஸ்நானம் செய்த பிறகு , சமயல் செய்ய யோக்யமானதும்,பரிசுத்தமான தங்கம், வெள்ளி ,போன்ற உலோகத்தினாலான பாத்திரங்களினாலும், புதிய மண் பாத்திரத்தினாலும் அன்னம் முதலியவை தயார் செய்யவேண்டும். செப்புப்பாத்திரம், இரும்பு பாத்திரம், உடைந்தது, ஏற்கனவே உபயோகப்படுத்திய மண் பாத்திரம் இவை ஆகாது. செப்பும், இரும்பு பாத்திரங்களை கண்ட வுடன் பித்ருக்கள் ஓடி விடுவார்கள்.
5)ஸ்ராத்த சமயல் நெய்யில் செய்வது உசிதம். எவ்விஷயத்திலும் எண்ணெய் சொல்லப்படவில்லை. சமயலில் எள்ளும் , சிலர் வழக்கத்தில் தேங்காயும்  சேர்ப்பதால்
சிலர் நல்லெண்ணெயும், தேங்காயெண்ணையும்  சேர்ப்பதாக தெரிகிறது. 
6) ஸ்ராத்த ஸங்கல்பத்தில், " ததர்த்தம்  மயா ஸம்பாதிதா: பக்வா: பச்யமானா: தேசகால  பாத்ராதயச்ச ஸர்வே ஸ்ராத்தார்ஹா: ஸந்த்விதி  பவந்தோ அனுக்ருஹ்ணந்து ! " என்ற வசனப்படி  அந்தந்த காலத்தில் , அந்தந்த தேசத்தில் சம்பாதித்த காய்கறிகளையும், பழங்களையும் , பொருள்களையும் கொண்டு ஸ்ராத்தத்தை அணுஷ்டிக்கவேண்டும்.
7) பெரும்பாலும், ஸபிண்டிகரணத்தில் செய்த சமயலயே ஶ்ராத்தத்துக்கும் பின்பற்றுகிறார்கள். ஆனாலும் அவா அவா குல வழக்கத்தை அனுசரித்து சமயல் செய்ய வேண்டும்.
8) சமயல் செய்யும் இடத்தை கோமயத்தால் நன்றாக மெழுகி  சுத்தம் செய்யவேண்டும். எள்ளை எல்லா இடங்களிலும் இறைக்க வேண்டும்.

ப்ராம்மண போஜனம் :- 

1) ஸ்ராத்த போஜனத்துக்கு உபயோகிக்கப்படும் வாழை இலையானது  தண்டத்துடன்  இருக்கவேண்டும். இடதுபக்கம்  நுணி  நீண்டு இருக்கவேண்டும். வலதுபக்கம் நுணி இருந்தால் பித்ருக்கள் ஆசையற்று ஓடிவிடுவர்.இலைகளின் அடி நுணியை  நறுக்கக்கூடாது. இலைகளின் நரம்பையும் கிழிக்கக்கூடாது .
2) முதலில் விஸ்வேதேவருக்கும் , பிறகு பித்ரு ப்ராம்மணளுக்கும் பரிமார  வேண்டியது.

3) பருப்பு, பாயசம் , நெய் இம்மூன்றும் சாப்பிடுபவர்களின் வலது பக்கம் இருக்கவேண்டும். மற்ற பதார்த்தங்களுக்கு  நியமனம் இல்லை. பருப்பு, பாயசம், நெய், பால்,தயிர், தேன் இவைகளை தொன்னையில்  வைத்து அன்னம் வைக்கப்படுகிற பெரிய இலையில் வைக்காமல் ,தனியே பூமியில் வைக்கவேண்டும்.
4) ஸ்ராத்தத்தில் ஒரே பந்தியில்  சாப்பிடுகிற எல்லா ப்ராம்மணர்களுக்கும்  எல்லா பதார்த்தங்களையும் சரி சமமாக போடவேண்டும்.  போக்த  தக்ஷிணை அவாளோட வித்தைக்கு ஏற்ப கொடுக்கலாம்
5) விஸ்வேதேவர் மற்றும் பித்ரு ப்ராம்மணர்களுக்கு பரிமாறுதல் முதல் எல்லா உபசாரமும், தனித்தனியாக செய்யவேண்டும்.
6) எப்போதும் ஆபோஜனம் தானாகவே போட்டுக்கொள்ளக்கூடாது.  ஆபோஜனம் போட்ட பிறகு மறுபடியும்  ஜலம் போடுவது கள்ளுக்கு சமமாகும். 
7) ஸ்ராத்த போஜனத்தில்  பலி வைக்கக்கூடாது.
8) ஸ்ராத்த போஜனத்தில் ஒருவருக்கொருவர் எச்சில் பட்டுக்கொண்டு விட்டால் அந்த இலையை தொடாமல் எடுத்தெரிந்துவிட்டு , கோமயத்தால் சுத்தம் செய்து, வேறு இலையில் பரிமாறி பரிஷேஷனம் செய்து சாப்பிடவேண்டும்.
9) ஸ்ராத்த போஜன காலத்தில் ஆரம்பம் முதல் முடியும் வரை "அபிஸ்ரவனம்" பாராயணம் செய்ய வேண்டும்.
10) ஸ்ராத்தத்தில் ப்ராம்மணாள் சாப்பிட்ட இலையை  ஆசீர்வாதம், ஸ்வஸ்திவசனத்துக்கு முன்பே எடுத்துவிட வேண்டும். பிண்டப்ரதானத்துக்கு பிறகு அந்த இடத்தை சுத்தி செய்ய வேண்டும்.
11) ப்ராம்மணாள் சாப்பிட்ட இலையை பூமியில் புதைத்துவிட வேண்டும். சிலர் ஓடும் நீர்நிலைகளிலும் விடுகிறார்கள்.
12)ஹோமத்தில்  மிச்சமான நெய்யினால் பாத்ராபிகாரமும், அன்னாபிகாரமும் செய்யக்கூடாது.




ஸ்ராத்தகாண்டம்-6


ஆயாத பிதரஹ ஸோம்யா கம்பீரைஹி பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச !!

சில பொது விதிகள்( continued):-

1)மாதவிடாயிக்கு காலமான ஸ்த்ரீ சமைக்ககூடாது.  மாதவிடாய் குளித்த அன்றும் சமைக்ககூடாது

2)ஈர வஸ்திரத்துடன் சமைக்க்கூடாது. 

3)சமையல் செய்யும் போது மல ஜலம் கழிக்க நேர்ந்தால் ஸ்நானம் செய்து விட்டு சமையல் செய்ய வேண்டும். 

4)கர்பிணியும் நோயாளியும் சமையல் செய்யக்கூடாது கச்சமில்லாமலும் சிகையுள்ள விதவையும் சமையல் செய்ய கூடாது.

5)பேசிக்கொண்டோ,அழுதுக்கொண்டோ, சிரித்துக்கொண்டோ தலை மயிரை அவிழ்த்துக்கொண்டோ சமையல் செய்ய கூடாது

6)விசுவேதேவ ப்ராஹ்மணர் சாப்பிடும்போது வாந்தி எடுத்தால் இலையை எடுத்து விட்டு லெளகீகாக்னி ப்ரதிஷ்டை செய்து , அவருடைய ஸ்தானம்,நாமம், கோத்ரம் , ஆசனம் இவைகலை சொல்லி அன்னத்தால்
அக்னியில் ப்ரானாயஸ்வாஹா,முதலிய 5 ஹோமங்களை 6 ஆவர்த்தி (மொத்தம் 30 ஆவர்த்தி) ஹோமம் செய்து , பிறகு உதானாயஸ்வாஹா, ஸமாநாயஸ்வாஹா என்ற இரண்டு மந்திரங்கள் சொல்லி 2 ஆவர்த்தி ஹோமம் ( மொத்தம் 32 ஆவர்த்தி ))ஹோமங்கள் செய்து சிராத்த சேஷத்தை முடிக்க வேண்டும்..( ஆபஸ்தம்ப ஸூத்ரம்)

7)இதுவே பித்ரு ஸ்தானத்தில் உள்ளவர் வாந்தி எடுத்தால்.மறூபடியும் சிராத்தம் செய்ய வேண்டும்.
பிண்டப்ரதானத்திற்கு பிறகு வாந்தி ஏற்பட்டால் இந்திராய ஸோம என்ற ஸூக்தத்தை ஜபிக்கவும்.. (ஆபஸ்தம்ப ஸூத்ரம்)

8)வாயஸ பிண்டத்தை காக்கை மட்டும் எடுக்கும் படியாக பார்த்து கொள்ளவும் வேறூ எந்த ப்ராணீகளூம் தொடக்கூடாது. இதராளூம் பார்க்க்கூடாது..அப்படி ஏற்பட்டால் அன்றூ உபவாசம் இருந்து மறூ நாள் மறூபடியும் சிராத்தம் செய்ய வேண்டும்

9)பிண்ட ப்ரதானத்திற்கு பிறகு கர்த்தா சிராத்தான்னத்தை சாப்பிடுவதோ அல்லது முகர்வதோ சிராத்தகர்மா அங்கமாகும்..
10)துளசி எப்போது சிராதத்தில் சிரசில் தரிக்கபட்டதோ அப்போதே கர்த்தா, போக்தா; பிதா மூவரும் விஷ்ணூ லோகத்தில் சிறப்பை அடைகின்றனர் என்கிறது தர்ம சாஸ்திரம்... 

ஸ்ராத்தாங்க தர்ப்பணம்( பரேஹநி தர்ப்பணம்):- 

1)ஹோமத்துடன்  செய்கின்ற ஸ்ராத்தங்களுக்கு அங்கமாக தர்ப்பணம் உண்டு. மாதா பிதா க்களின்  ஸ்ராத்தங்களுக்கும், ஸக்ரூன் மஹாலயத்திற்கும் அங்கமாக தர்ப்பணத்தை மறுநாளில்( பரேஹநி தர்ப்பணம்) செய்யவேண்டும்.
மற்ற ஸ்ராத்தங்களில்  அன்றே செய்யவேண்டும்.

2)சிராத்தத்திற்கு மறூநாள் விடியர்காலையில் சுமார் 4ம்ணீக்குமேல் 5-30 மணீக்குள் உஷஹ் காலம் என்றூ பெயர் . முதல் நாள் கட்டிய சிராத்த வேஷ்டி அவிழ்காமல் அதனுடன் ஸ்நானம் செய்து மடி வேஷ்டி கட்டிக்கொண்டு சிராத்தம் செய்த அந்த ஒரு வர்கத்திற்கு மாத்திரம் தர்ப்பணம் செய்ய வேண்டும். அல்லது விடிந்த பிறகு ஸ்நானம், ஸந்தியாவந்தனம் செய்து பரேஹனி தர்ப்பணம் செய்யவும் .

3) பிதா ஜீவித்திருந்து மாத்ரு சிராத்தம் செய்வதாக இருந்தால் பரேஹனி தர்பணம் கிடையாது..

4)ஸோதகும்பம், மாசிகம் ,நாந்தி, சபிண்டீகரணம், ஊனமாசிகம், முதல் ஆப்தீகம், ஸங்கல்ப சிராத்தம் இவைகலுக்கும் பரேஹனி தர்பணம் கிடையாது..

5) தாயார், தகப்பனாருக்கு ஒரே நாளீல்சிராத்தம் செய்பவர்கள் மறுநாள் பரேஹனி தர்ப்பணத்தில் ஸங்கல்பத்தில் பித்ரு சிராத்தாங்கம், மாத்ருசிராத்தாங்கம் ச என்றூ சொல்லி ஒரே பரேஹனி தர்ப்பணம் செய்ய வேண்டும்..

6)தீபாவளீ அன்றூ பரேஹனி தர்ப்பணம் செய்ய நேரிட்டால் அன்றூ முதலில் பரேஹனி தர்ப்பணம் செய்ய வேண்டும்..பிறகு விடியுமுன் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்.. மாத்யானிகத்திற்கு பிறகு அமாவாசை தர்ப்பணம் செய்யவும்.

ஸ்ராத்ததை  கொண்டாடுதல் :-

ப்ராமணன் பிறக்கும் போதே மூன்று கடன்களுடன் பிறக்கிறான் என்று வேதம் கூறுகிரது. பிரம்மசர்ய நிலையில் வேதாத்யானம் மூலம் ரிஷிகளின் கடனையும் ,கிரஹஸ்த நிலையில் யாகம் முதலியவைகளால் தேவர் கடனையும், நல்ல ஆண் சந்ததியை அடைவதால் அவர்கள் மூலம் பித்ருக்கள் கடனையும் போக்கி கொள்கிறான்.

நம்பிக்கை இல்லை என்று செய்யாமல் விட்டால் கோடி ஜன்மங்கள் மிகவும் கீழ் நிலையை அடைகிறான் என்கிறது தர்ம சாஸ்திரம்..
ஸ்ராத்த கர்மா செய்பவன் வியாதி இல்லாதவனாய், ஆயுள் ,புத்ரன், பெளத்ர ஸந்ததியுடன் கீர்த்தி, தன, தான்ய ஸம்வ்ருத்தியுடன், புஷ்டி, பலம், ஸுகம், இதர தனங்களூடன் இங்கு வாழ்ந்து, பரலோகத்திலும் உயர்ந்த ஸ்திதி அடைவான்
அவர்கள் இறந்த  மாத, திதியில் .சிராத்தம் செய்யாவிடில் இறந்தவர்கள் ஆத்மா கஷ்டப்படும். கஷ்டத்தினால் பெருமூச்சு விட்டாலே நம் குடும்பத்திற்கு கஷ்டம் ஏற்படும். சந்ததி வ்ருத்தியாகாது.

இவர்களை ரக்ஷிக்கும் விச்வேதேவர்கள் சாபம் கொடுப்பார்கள். தக்ஷ ப்ரஜாபதியின் பெண், விச்வா என்றவளூக்கு பிறந்த புத்ரர்கள் தான் விச்வே தேவர்கள் இவர்கள் சிராத்தத்தை எப்போதும் ரக்ஷிக்க ப்ரமாவினால் அனுப்ப பட்டவர்கள்.

ஹோமத்தால் தேவர்களும், ஸ்வர்க்கத்தில் உள்ளவர்கள் ப்ராம்மண  போஜனத்தாலும், யமலோகத்தில் உள்ளவர்கள், பிண்டப்ரதானத்தாலும், பேய் பிசாசுகள் உச்சிஷ்டத்தாலும், நரகத்தில் உள்ளவர்கள் விகிரான்னித்தாலும், தெரியாதவர்கள் காக்கைக்கு வைக்கும் பிண்டத்தினாலும் பயன்பெறுவார்கள். இப்படி ஸ்ராத்தத்தின் அங்கங்கள் ஏழும் பயன்பெறுவதால்  இது ஒரு யக்ஞ மாகவே கருதப்படுகிறது. நாமும் இந்த பித்ரு யக்ஞம் எனும் ஸ்ராத்தத்தை கடைபிடித்து எல்லா வளமும் பெறுவோமாக. !!

ஆதிவ்யாதி ஹரம் ந்ருநாம் ம்ருத்யு தாரித்ரிய நாசனம். 
ஶ்ரீ புஷ்டி கீர்த்திதம் வந்தே விப்ர ஶ்ரீ பாத பங்கஜம். விப்ரெளத தர்சனாத்
ஸத்ய க்ஷீயந்தே பாபராசயஹ .வந்தனாத் மங்களா வாப்திஹி அர்சனாத் அச்யுதம் பதம்.

Sathya001

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼


Comments

Post a Comment

Popular posts from this blog

ஸ்ரீ ருத்ரம்

அர்த்தமுள்ள ஸந்தியாவந்தனம்: