ஸெளந்தர்யலஹரி 42--50
அழகின் ஆனந்த அலைகள் ஸெளந்தர்யலஹரி 42 ____________________________________ .கிரீட வர்ணனை கதைர் மாணிக்யத்வம் ககனமணிபி: ஸாந்த்ர கடிதம் கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய: ஸ நீடேயச்சாயா ச்சுரண ஶபலம் சந்த்ர ஶகலம் தனு: ஶௌனாஸீரம் கிமிதி ந நிபத்னாதி திஷணாம் !! இமயமலையின் பெண்ணே ! மாணிக்கங்களாக உன் சேவையின் பொருட்டு உருவடைந்துள்ள பன்னிரண்டு ஆதித்தியர்களால் நெருக்கமாக இழைக்கப்பட்ட உன்னுடைய தங்கக் கிரீடத்தை எவன் வர்ணிக்கப் புகுகிறானோ அவன் கிரீடகோளத்தில் உள்ள மாணிக்கங்களின் காந்தியால் விசித்திரவர்ணம் உள்ளதாகத் தோன்றும் சந்திரகலையை இந்திரனுடைய வில் என்ற கருத்தை வர்ணனையில் எப்படிப் புருத்தாமல் இருக்க முடியும் ? பன்னிரெண்டு ஆதித்யர்கள் :- 1) அம்சமான் ,2)தாதா 3) சவிதா 4) அரியமான் 5)விஸ்வான் 6)பகன் 7)பர்ஜன் 8) துவஷ்டா 9) மித்திரன் 10)விஷ்ணு ,11) வருணன் 12 பூஷா கைலாஸத்தில் ஆசார்யாளுக்கு ஈச்வரன் தந்த பஞ்ச லிங்கங்களுக்கு சந்திரமௌளீச்வரர் என்றே பெயர். ஈஸ்வரன் தன் தலையில் சந்திரனை அணிந்திருப்பது போல அம்பாளும் அணிந்திருக்கிறாள். சந்திரமௌளீச்வரர் ஈச்வர ஸ்வரூபம் என்பதுபோல இந்த ஸ்தோத்திர