Posts

Showing posts from January, 2024

ஸெளந்தர்யலஹரி 51-----60

Image
  அழகின் ஆனந்த அலைகள்  #ஸெளந்தர்யலஹரி-51 ____________________________________ சிவே ச்ருங்காரார்த்ரா ததிதரஜநே குத்ஸநபரா ஸரோஷா கங்காயாம் கிரிச சரிதே விஸ்மயவதீ ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ ஸெளபாக்ய ஜனனீ ஸகீக்ஷு ஸ்மேரா தே மயி ஜனனீ த்ருஷ்டி: ஸகருணா இந்த ஸ்லோகத்தின் நவரசங்களும் அம்பிகையின் கண்களில் தெரிவதாகச் சொல்லியிருக்கிறார்.  எப்போது எந்த ரசம் தெரியும் என்றும் கோடிட்டுக் காட்டுகிறார்.  பரமசிவனிடத்தில் சிருங்கார ரஸமும், மற்றவரிடத்தே பீபத்ஸ ரஸம் (வெறுப்பு), கங்கையிடத்து ரெளத்ரமும், ஈசனின் லீலைகளால் அத்புத ரஸமும், அவரது சர்பங்களால் பயமும், தாமரை போன்ற சிவந்த கண்கள் வீரத்தையும், தோழிகளிடத்து ஹாஸ்யமும், பக்தர்களிடத்து கருணையும் தெரிகிறதாம்.  அன்னை சாந்தமாக இருக்கையில் கண்களில் மாறுபாடு தெரிவதில்லை என்பதால் நவரசஸங்களில் அது பற்றி ஏதும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. லலிதா சஹஸ்ரநாமாக்கள்: ச்ருங்கார  ரஸ  ஸம்பூர்ணா அவ்யாஜ  கருணாமூர்த்தி தரஸ்மேர     முகாம்புஜா வந்தாரு  ஜந  வத்ஸலா ரமணலம்படா ஸாந்த்ரகருணா என்றெல்லாம் சொல்வதை காணலாம்.  #Sathya001 ******************** அழகின் ஆனந்த அலைகள் #ஸெளந்தர்யலஹரி-52