Posts

Showing posts from May, 2019

ப்ரஹ்மோபநிஷத்

Image
உபநிஷத்துகள் வரிசையில் 11 வது ப்ரஹ்மோபநிஷத். இதில் ப்ரஹ்ம ஞானமும் முக்தனாகும் உபாயமும் ப்ரகடனப் படுத்தப்பட்டுள்ளது. நாம் பூணூல் மாற்றிக்கொள்ளும்போது சொல்லப்படும் யக்ஞோபவீத தாரண மந்திரம் இதிலிருந்து எடுக்கப்பட்டதுதான் சாந்தி பாடம் - _______________ ஓம் ஸஹநாவவது ! ஸஹநெள புநக்து ! ஸஹவீர்யம் கரவாவஹை ! தேஜஸ்விநாவதீதமஸ்து  ! மா வித்விஷாவஹை ! ஓம் சாந்தி: !சாந்தி : !சாந்தி : ! உபநிஷத் 1) அதாஸ்ய புருஷஸ்ய சத்வாரி ஸ்தாநாநி பவந்தி நாபிர்ஹ்ரு’தயம் கண்டம் பூர்தேதி । தத்ர சதுஷ்பாத³ம் ப்³ரஹ்ம விபாதி । ஜாகரிதம் ஸ்வப்நம் ஸுஷுப்தம் துரீயமிதி । ஜாகரிதே ப்³ரஹ்மா ஸ்வப்நே விஷ்ணு: ஸுஷுப்தௌ ருத்ரஸ்துரீயம் பரமாக்ஷரம் ஆதித்யஶ்ச விஷ்ணுஶ்சேஶ்வரஶ்ச ஸ புருஷ: ஸ ப்ராண: ஸ ஜீவ: ஸோऽக்நி: ஸேஶ்வரஶ்ச ஜாக்ரத்தேஷம் மத்யே யத்பரம் ப்ரஹ்ம விபாதி !" உடலில் உறையும் இந்த புருஷனுக்கு முக்கியமான இடங்கள் நான்கு ஆகும். அவை தொப்புள் இதயம் கழுத்து மற்றும் தலை உச்சி. இவற்றில் நான்கு பாதம் உடைய பிரம்மம் பிரகாசிக்கிறது . விழிப்பில் பிரம்மா, கனவில் விஷ்ணு, உறக்கத்தில் ருத்ரன், அதற்கு அப்பால் நான்காவது துரியத்தில் அ

ஷண்ணவதி ஸ்ராத்தங்கள்

இதை ஷண்ணவதி தர்ப்பணம் என்று சொல்வதைவிட ஸ்ராத்தம் என்று சொல்வதே பொருத்தம். ஏனென்றால் ஸ்ரத்தையாக அனுஷ்டிப்பவருக்கு இக  பர சுகங்களை  இவை தர வல்லவை. ஒரு வருடத்தில் 96 தடவை பித்ருக்களுக்கு ஸ்ராத்தங்கள் ஹிரண்ய ரூபமாக செய்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இது விசேஷமாக செய்ய முடிந்தவர்கள் செய்யலாம். இவை விஷேஷமாக சங்கல்பத்துடன் தொடங்கவேண்டும். "அமாயுக மனுக்ராந்தி த்ரிதிபாத மஹாளயா: அஷ்டகா  அன்வஷ்டகா  சேதி ஷண்ணவத்ய: ப்ரகீர்த்திதா :"  என்று ஷண்ணவதி நாட்களை தர்ம சாஸ்திரம் கூறுகிறது. அந்த 96 நாட்கள் :- 1) ஸங்க்ரமணம் --12 ________________________  சித்திரை முதல் பங்குனி வரை உள்ள மாச பிறப்பு. இதில் உத்ராயணம் ,தக்ஷிணாயன தர்ப்பணமும் அடங்கும். 2) அமாவாசை -12 ____________________ ஒரு வருஷத்தில்  வரும் 12 அமாவாசைகள் 3) வியதிபாதம்  -13 _______________________ 27 யோகங்களில் 18 வது வியதிபாத யோகம் கூடிய நாள் . ஒரு வருஷத்தில்  சாதாரணமாக 13 வரும் . சில வருஷங்களில்  ஒன்று அல்லது இரண்டு கூடி வரலாம் சந்திரன் குருபத்னியான தாரையிடம் தவறான எண்ணத்துடன் பழக முற்பட்டபோது, தர்மோத்தமரான ச