ஷண்ணவதி ஸ்ராத்தங்கள்



இதை ஷண்ணவதி தர்ப்பணம் என்று சொல்வதைவிட ஸ்ராத்தம் என்று சொல்வதே பொருத்தம். ஏனென்றால் ஸ்ரத்தையாக அனுஷ்டிப்பவருக்கு இக  பர சுகங்களை  இவை தர வல்லவை.
ஒரு வருடத்தில் 96 தடவை பித்ருக்களுக்கு ஸ்ராத்தங்கள் ஹிரண்ய ரூபமாக செய்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இது விசேஷமாக செய்ய முடிந்தவர்கள் செய்யலாம். இவை விஷேஷமாக சங்கல்பத்துடன் தொடங்கவேண்டும்.

"அமாயுக மனுக்ராந்தி த்ரிதிபாத மஹாளயா:
அஷ்டகா  அன்வஷ்டகா  சேதி ஷண்ணவத்ய: ப்ரகீர்த்திதா :"

 என்று ஷண்ணவதி நாட்களை தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

அந்த 96 நாட்கள் :-

1) ஸங்க்ரமணம் --12
________________________

 சித்திரை முதல் பங்குனி வரை உள்ள மாச பிறப்பு. இதில் உத்ராயணம் ,தக்ஷிணாயன தர்ப்பணமும் அடங்கும்.

2) அமாவாசை -12
____________________

ஒரு வருஷத்தில்  வரும்
12 அமாவாசைகள்

3) வியதிபாதம்  -13
_______________________

27 யோகங்களில் 18 வது வியதிபாத யோகம் கூடிய நாள் .
ஒரு வருஷத்தில்  சாதாரணமாக 13 வரும் .
சில வருஷங்களில்  ஒன்று அல்லது இரண்டு கூடி வரலாம்
சந்திரன் குருபத்னியான தாரையிடம் தவறான எண்ணத்துடன் பழக முற்பட்டபோது, தர்மோத்தமரான சூரிய பகவான் சந்திரனைக் கோபத்துடன் கடிந்து உஷ்ணமாகப் பார்த்தார். தனது சொந்த விஷயத்தில் சூரியன் தலையிடுவதை விரும்பாத சந்திரனும் பதிலுக்கு சூரியனைச் சினந்து நோக்கினான்.
அப்போது அவர்களுடைய கோபப்பார்வை ஒன்று கலந்ததால் அவர்களிடையே ஒரு திவ்ய புருஷன் தோன்றினான். இவ்விதம் ஏற்பட்ட தேவதையே வ்யதீபாதம் என்ற யோகத்திற்கு உரிய தேவதை யாகும்.
அன்றைய தினம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது அதிதமான  பலன்கொடுக்கும்.  வ்யதீபாதம் மார்கழி மாதத்தில் வரும்போது இதற்கு "மஹா வ்யதீபாதம்' என்று பெயர்.

4) வைத்ருதி  -13
________________________

இதுவும் 27 யோகங்களில்  கடைசி யோகமான வைத்ருதி  யோகம் சேர்ந்த நாள் . தர்ம சாஸ்திரம் பித்ருக்களும்  உகந்த நாளாக இதை சொல்கிறது. இதுவும் ஒரு வருஷத்தில்  சாதாரணமாக 13 வரும் .
சில வருஷங்களில்  ஒன்று அல்லது இரண்டு கூடி வரலாம்.

5) மஹாளயம் - 16
________________________

புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய பக்ஷம். ப்ரதமை தொடங்கி மஹாளய அமாவாசை வரை உள்ள காலம்

6)மன்வாதி  நாட்கள் -14
_________________________

ஸ்வாயம்பு ,ஸ்வரோசிச,உத்தம, தாமஸ, ரைவத, ஸாக்ஷுச, வைவஸ்வத, ஸாவர்ணி, தக்ஷ ஸாவர்ணி, ப்ரம்ம ஸாவர்ணி,தர்ம ஸாவர்ணி, ருத்ர ஸாவர்ணி, ரெளச்ய ஸாவர்ணி, மற்றும் இந்த்ர  ஸாவர்ணி ஆகிய
பதினான்கு மன்வந்தரங்கள் தொடங்கும் நாட்கள். அவை

1)  ஐப்பசி சுக்லபக்ஷ நவமி
2)   கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ துவாதசி
3) சித்திரை மாதம் சுக்ல பக்ஷ திரிதியை
4) பங்குனி மாதம் பௌர்ணமி
5) புரட்டாசி மாதம் திரிதியை
6) தை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி
7) ஆடி மாதம் சுக்ல பக்ஷ தசமி
8) மாசி மாத சுக்ல பக்ஷ சப்தமி
9) ஆவணி மாசம் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி
10) ஆடி பௌர்ணமி
11) கார்த்திகை பாதம் பௌர்ணமி
12) பங்குனி மாதம் பௌர்ணமி
13) சித்திரை மாதம் பௌர்ணமி.
14) ஆடி மாதம் பௌர்ணமி.

7). யுகாதி  -4
_________________

4 யுகங்களான க்ருத  ,த்ரேதா, த்வாபர, மற்றும்  கலியுகம் தோன்றிய நாட்கள்

கிருத யுகம் - வைகாசி மாதம் சுக்லபட்ச திருதியை

திரேதா யுகம்- கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ நவமி

துவாபர யுகம் -புரட்டாசி மாதம் கிருஷ்ணபக்ஷ திரயோதசி

கலியுகம் - மாசி மாதம் பௌர்ணமி

8)அஷ்டகா -4
__________________

 மார்கழி முதல் பங்குனி வரை வரும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி

9)அனவஷ்டகா -4
_____________________

 மார்கழி முதல் பங்குனி வரை வரும் கிருஷ்ண பக்ஷ நவமி,

10) திஸ்ரோஷ்டகை (பரேத்யு) -4
___________________________________

மார்கழி முதல் பங்குனி வரை வரும் கிருஷ்ண பக்ஷ ஸப்தமி,

இந்த யுகாதி மன்வாதிகளில் செய்கிற சிராத்தங்கள் 2000 வருஷங்கள் பித்ருக்களை திருப்தி செய்த பலன் தரும்

பொதுவாக பித்ருக்களுக்கு அவா மறித்த  திதிதான் ஸ்ராத்தத்துக்கு எடுத்துப்பா. ஆனா இந்த 96 நாட்களை கூர்ந்து கவனிச்சா திதி ,வாரம்,யோகம், மாசம், அயணம், ஸம்வத்ஸரம், யுகம்,மன்வந்திரம் மற்றும் பிரம்மாவின் ஆயுட்காலமான கல்பம் வரை எல்லா காலங்களும் சம்மந்தப்பட்ட நாட்களாக இருப்பதை காணலாம். அதனால் இந்த காலங்களில் செய்யப்படும் ஸ்ராத்தங்களும் தரப்பணங்களும்  வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபமா இருக்கிற எல்லா தலைமுறை பித்ருக்களும்  திருப்தி அடைவார்கள்.
இந்த ஷண்ணவதி ஸ்ராத்தத்தை நமது ஜென்மாவில் ஒரு தடவையாவது  அனுஷ்டிக்கனும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. தகப்பனார் சிவ லோக ப்ராப்தி அடைந்தவர்கள் மட்டும்தான் இதை அனுஷ்டிக்க வேண்டும். மாதா பிதா
வருஷ  ஸ்ராத்தம் முடிஞ்ச உடனே அல்லது வருஷ  பிறப்பிலிருந்தோ இதை ஆரம்பிக்கலாம்.  வாழ்நாளில் ஒரு தடவையாவது  இந்த ஷண்ணவதி ஸ்ராத்தம் மற்றும் தர்பணாதிகள் செய்வதால் பித்ருக்கள் திருப்தி அடைந்து , இக பர ஸுகம், குடும்ப அபிவிருத்தி மற்றும்
ஸத் ஸந்தானம் எல்லாம் அனுக்ருஹம் செய்வார்கள்.


Comments

Popular posts from this blog

ஸ்ரீ ருத்ரம்

தர்ம சாஸ்திரம்

அர்த்தமுள்ள ஸந்தியாவந்தனம்: