Posts

Showing posts from November, 2019

கைவல்யோபநிஷத்

Image
#கைவல்யோபநிஷத் _________________________ ஸாந்தி  பாடம் :- ஓம் !  ஸஹநாவவது । ஸஹ நௌ புநக்து । ஸஹ வீர்யம் கரவாவஹை  தேஜஸ்விநாவதீதமஸ்து  மா வித்விஷாவஹை ॥ ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி :  ஓம் , குரு சிஷ்யன் ஆகிய எங்கள் இருவரையும் பிரம்மம் காப்பாற்றட்டும். சேர்த்து போஷிக்கட்டும். இருவரும் சேர்ந்து வீரியத்துடன் உழைப்போமாக. எங்கள்  அத்யாயணம் ஒளி பொருந்தியதாக வேண்டும். நாங்கள் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.. ஓம்  மூவுலகிலும் சாந்தி நிலவட்டும். இந்த கைவல்யோபநிஷத் கிருஷ்ண யஜுர் வேதத்தை சார்ந்தது. இதில் பிரம்ம வித்தை ஆஸ்வலாயனருக்கு பிரம்மாவால் உபதேசிக்கப்படுகிறது. ஶீ சங்கராச்சாரியார் பத்து உபநிஷதங்களுக்கு மட்டும் பாஷ்யம் எழுதியிருந்த போதிலும் வேறுசில உபநிஷதங்களை முக்கியமாக  கையாள்கிறார். அவற்றில் ஒன்று கைவல்யோபநிஷத். கைவல்யம் என்பது "ஸ்வரூபப்ரதிஷ்டா "  அல்லது தான் தானாக இருத்தல்  என்று பொருள்.   "முக்திர் -ஹித்வா அன்யதா ரூபம் ஸ்வரூபேண வ்யவஸ்திதி " என்று ஶீமத் பாகவதம் கூறுகிறது. அந்த கைவல்ய நிலையை எய்துவதற்கு வழி கூறுவதால் இது

குரு பக்தி

Image
ஸ்ருதி ஸ்ம்ரிதி  புராணானாம்  ஆலயம் கருணாலயம்  ! நமாமி  பகவத்பாத  சங்கரம் லோகசங்கரம். !!   ஒருநாள் ஆதிசங்கரர் தன் சிஷ்யர்களான பத்ம பாதர், சுரேஸ்வரர், ஹஸ்தாமலகர் மற்றும் ஆனந்த கிரி ஆகியோர்களுக்கு அத்வைத பாடம் எடுப்பதற்காக ஆயத்தமானார்.  இந்த நால்வரில் பத்ம பாதருக்கு  குருபக்தியில் தனக்கு மிகையானவர் யாரும் இருக்கமுடியாது என்ற எண்ணம் எப்பவும்  உண்டு.குரு உபதேசிக்கும் விஷயங்களை உடனுக்குடன் க்ரஹிக்கும் அபாரமான திறமை அவருக்கு இயற்கையாகவே இருந்தது. ஆனால்  கிரி க்கு குருவின் உபதேசங்களிலும், ஞான விஷயங்களிலும் நாட்டமில்லை. எப்பவும்  குருவையே  பார்த்துக்கொண்டும், அவர் தேவைகளை பூர்த்திசெய்தும், அவர் வஸ்திரங்களை  துவைப்பதையும்  , குரு சேவையை மட்டுமே தனது தலையாய கடமையாக  கொண்டிருந்தார். அன்றும் சங்கரர் தனது வகுப்பை தொடங்காமல் மெளனமாக அமர்ந்திருந்தார்.  பத்ம பாதர்" குரு தேவா , இன்றைய பாடத்தை கற்க நாங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம் தாங்கள் தயை  புறிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சங்கரர் பதிலுக்கு சற்று பொறுங்கள். கிரியை இன்னும் காணவில்லை  ,அவர் வந்தவுடன் நாம் பாடத்தை தொடங்குவோம் ,சற்ற

அபிவாதனம்

நமஸ்காரம் பண்ணுபவன் நமஸ்கரிப்பவரைப் பார்த்து  தான் யார், என்ன பெயர், எந்தப் பாரம்பர்யத்தில் வந்தவன் என்று தெரிவித்துக் கொள்வதே அபிவாதனம்.  தன்னைவிட வயதில் பெரிய ஒருவர் வருகிறபோது ஒருத்தனுடைய பிராணன் மேலே கிளம்பி வெளியில் போகப் பார்க்கும். அப்போது அவன் எழுந்து அவரை மரியாதையாக வரவேற்று அபிவாதனம் பண்ணுவதால், கிளம்பின பிராணன் அவனிடமே மறுபடி புகுந்து நிலைப்படுகிறது’ என்று மநு சொல்கிறார்: "ஊர்த்வம் ப்ராணாஹ்யுத்க்ராமந்தி யூந: ஸ்தவிர ஆயதி | ப்ரத்யுத்தாநாபிவாதாப்யாம் புநஸ்தான் – ப்ரதிபத்யதே !"  வயதில் சின்னவன் உட்கார்ந்து கொண்டோ படுத்துக் கொண்டோ இருக்கும் போது ஒரு பெரியவர் அந்தப் பக்கம் வருவதைப் பற்றிச் சொல்லியிருக்கிறது.ஒரு பெரியவரை எப்போது பார்த்தாலும் நமஸ்காரம் பண்ணி அபிவாதனம் செய்வதையும் மநு உள்பட எல்லா தர்மசாஸ்த்ரகாரர்களும் சொல்லியிருக்கிறார்கள். முதலில் நமஸ்காரம். அப்புறம் எழுந்து, குனிந்து நின்றுகொண்டு இரண்டு காதையும் இரண்டு கையால் தொட்டுக் கொண்டு – வலது காதை வலது கையாலும், இடது காதை இடது கையாலும் தொட்டுக் கொண்டு – தான் இன்னார் என்று நமஸ்காரம் பண்ணப்படுகிற