நமஸ்காரம் பண்ணுபவன் நமஸ்கரிப்பவரைப் பார்த்து தான் யார், என்ன பெயர், எந்தப் பாரம்பர்யத்தில் வந்தவன் என்று தெரிவித்துக் கொள்வதே அபிவாதனம். தன்னைவிட வயதில் பெரிய ஒருவர் வருகிறபோது ஒருத்தனுடைய பிராணன் மேலே கிளம்பி வெளியில் போகப் பார்க்கும். அப்போது அவன் எழுந்து அவரை மரியாதையாக வரவேற்று அபிவாதனம் பண்ணுவதால், கிளம்பின பிராணன் அவனிடமே மறுபடி புகுந்து நிலைப்படுகிறது’ என்று மநு சொல்கிறார்:
"ஊர்த்வம் ப்ராணாஹ்யுத்க்ராமந்தி யூந: ஸ்தவிர ஆயதி |
ப்ரத்யுத்தாநாபிவாதாப்யாம் புநஸ்தான் – ப்ரதிபத்யதே !"
வயதில் சின்னவன் உட்கார்ந்து கொண்டோ படுத்துக் கொண்டோ இருக்கும் போது ஒரு பெரியவர் அந்தப் பக்கம் வருவதைப் பற்றிச் சொல்லியிருக்கிறது.ஒரு பெரியவரை எப்போது பார்த்தாலும் நமஸ்காரம் பண்ணி அபிவாதனம் செய்வதையும் மநு உள்பட எல்லா தர்மசாஸ்த்ரகாரர்களும் சொல்லியிருக்கிறார்கள்.
முதலில் நமஸ்காரம். அப்புறம் எழுந்து, குனிந்து நின்றுகொண்டு இரண்டு காதையும் இரண்டு கையால் தொட்டுக் கொண்டு – வலது காதை வலது கையாலும், இடது காதை இடது கையாலும் தொட்டுக் கொண்டு – தான் இன்னார் என்று நமஸ்காரம் பண்ணப்படுகிறவருக்கு சாஸ்த்ரோக்தமாக அறிமுகம் செய்து கொள்வதான அபிவாதன வாசகத்தைச் சொல்லவேண்டும்.
முடிவாக, நமஸ்காரம் பண்ணப்படுகிறவரின் பாதங்களைத் தொடவேண்டும்.
ஸவ்யேந ஸவ்ய: ஸம்ப்ரஷ்டவ்யோ தக்ஷிணேந ச தக்ஷிண:
என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
வலது காதை வலது கையாலும் இடது காதை இடது கையாலும் அபிவாதனத்தின்போது தொடுகிறாற்போலவே தான் எதிரே இருப்பவர் காலைத் தொடும்போதும், அதாவது பாவனையாக அப்படிப் பண்ணும்போதும் அவருடைய வலது காலை நம்முடைய வலது கையாலும் இடது காலை இடது கையாலுந்தான் தொடுகிற மாதிரிச் செய்யவேண்டும். அதாவது அவருடைய வலது காலுக்குக் கிட்டே நம்முடைய வலது கையும், இடது காலுக்குக் கிட்டே இடது கையும் இருக்கும்படி கைகளை மறித்துப் போட்டுக் கொள்ளவேண்டும்.
இந்த நமஸ்கார க்ரியையே ஒரு யோகாப்யாஸம், பலவிதமான நாடி சலனங்களால் நம் சித்தத்தை சுத்தம் செய்யும் தேஹப்பயிற்சி.
""தேவான், நதீம், ஸபாம், வ்ருக்ஷாம், அக்னீனபி ததா யதீன்|
தண்டவத் ப்ரண்மேத் பூமெள நாபிவாதனம் ஆசரேத் ||'"
- மனுஸ்மிருதி
அபிவாதன நமஸ்காரம் செய்யப்படுவதில் சில நியதிகள் கடைபிடிக்கப்படுகின்றன.
அவை :-
.1) தீர்த்த பாத்திரம், புஷ்பம், ஜபம், ஹோமம் போன்றவை செய்யும் போதும் அபிவாதனம் செய்யக்கூடாது. ப்ரேத/பித்ரு கர்மாகள் செய்கையில் பூணூலை வலம் மாற்றிக் கொண்டே அபிவாதனம் செய்ய வேண்டும்
2. ப்ரத்யபிவாதனம் செய்யத் தெரியாதவர்களுக்கு (ஸ்மிருதியில் சொல்லியபடி ஆசிர்வாதம் செய்யத் தெரியாதவர்களுக்கு) அபிவாதனம் தேவையில்லை, வெறும் நமஸ்காரம் மட்டும்.
3. ஸன்யாசிகளுக்கு அபிவாதனம் கூடாது.
4. தம்பதிகளில் பெண்களுக்கு மட்டும் நமஸ்காரம் செய்கையில் அபிவாதனம் கிடையாது.
5. ஆசாரமில்லாதவனுக்கும், அசுத்தமாக இருப்பவர்களுக்கும் அபிவாதனம் கூடாது, ஆச்சாரமில்லாத காலத்தில் அபிவாதனம் இல்லாது நமஸ்காரம் செய்யலாம்.
6) கோயில்களிலும், வீட்டுப் பூஜைகளிலும் நமஸ்கரிக்கிறபோது அபிவாதயே சொல்லக் கூடாது.
7) சபைக்கு நமஸ்காரம் செய்யும்போதும் அபிவாதயே கிடையாது.
8)ஸ்த்ரீகளில், தாயாரைத் தவிர, மற்றவர்களுக்கு அபிவாதனம் இல்லாமலேதான் நமஸ்காரம்.
9)
எல்லாம் தெரிந்தவரானாலும் ஒரு பெரியவர் படுத்துக் கொண்டிருக்கும்போதும், ஜபம்-பூஜை பண்ணும்போதும், ஹோமம் பண்ணும்போதும், தலையில் எண்ணைய் வைத்துக் கொண்டு ஊறிக் கொண்டிருக்கிறபோதும், ஆஹார வஸ்துக்கள் வைத்துக் கொண்டிருக்கும் போதும், ஆஹாரம் பண்ணும்போதும், அாிவாதன
நமஸ்காரம் பண்ணக்கூடாது.
நமஸ்காரம் பண்ணினவன் தெரிவித்துக் கொண்டபடி அவன் சர்மாவை (பெயரை), ஆசீர்வாதம் செய்பவர் ‘இன்ன பெயருள்ள சர்மா’ என்று கூப்பிட்டு “தீர்க்காயுஷ்மான் பவ ஸெளம்ய!” என்று சொல்வதே ப்ரத்யபிவாதனம்.
அவர் ஆசீர்வாதம் என்று பண்ணினாலும் பண்ணாவிட்டாலும் ஸரி, அப்படிப் பண்ணவேண்டும் என்று நினைக்காதவராகக் கூட இருந்தாலும் ஸரி, நம்முடைய நிஜமான, அந்தரங்க சுத்தமான பாவனா நமஸ்காரத்தினால் அவருக்குள் அந்தராத்மாவாக இருக்கப்பட்ட ஈச்வரன் – நாராயணன் – ஆசீர்வாதம் செய்துவிடுவான்.
#Sathya001
Comments
Post a Comment