கைவல்யோபநிஷத்

#கைவல்யோபநிஷத்

_________________________


ஸாந்தி  பாடம் :-


ஓம் !  ஸஹநாவவது । ஸஹ நௌ புநக்து । ஸஹ வீர்யம் கரவாவஹை 

தேஜஸ்விநாவதீதமஸ்து

 மா வித்விஷாவஹை ॥


ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி


ஓம் , குரு சிஷ்யன் ஆகிய எங்கள் இருவரையும் பிரம்மம் காப்பாற்றட்டும். சேர்த்து போஷிக்கட்டும். இருவரும் சேர்ந்து வீரியத்துடன் உழைப்போமாக. எங்கள் 

அத்யாயணம் ஒளி பொருந்தியதாக வேண்டும். நாங்கள் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.. ஓம்  மூவுலகிலும் சாந்தி நிலவட்டும்.


இந்த கைவல்யோபநிஷத் கிருஷ்ண யஜுர் வேதத்தை சார்ந்தது. இதில் பிரம்ம வித்தை ஆஸ்வலாயனருக்கு பிரம்மாவால் உபதேசிக்கப்படுகிறது. ஶீ சங்கராச்சாரியார் பத்து உபநிஷதங்களுக்கு மட்டும் பாஷ்யம் எழுதியிருந்த போதிலும் வேறுசில உபநிஷதங்களை முக்கியமாக  கையாள்கிறார். அவற்றில் ஒன்று கைவல்யோபநிஷத். கைவல்யம் என்பது "ஸ்வரூபப்ரதிஷ்டா "  அல்லது தான் தானாக இருத்தல்  என்று பொருள்.  

"முக்திர் -ஹித்வா அன்யதா ரூபம் ஸ்வரூபேண வ்யவஸ்திதி " என்று ஶீமத் பாகவதம் கூறுகிறது. அந்த கைவல்ய நிலையை எய்துவதற்கு வழி கூறுவதால் இது கைவல்யோபநிஷத் என்று பெயர் பெற்றது.


தொடர்வோம் ........


#Sathya001

_______
#கைவல்யோபநிஷத்

_____தொடர்-2
_____________________



ப்ரதம காண்டம்:--

1.(1). ஓம் அதாஶ்வலாயநோ பகவந்தம் பரமேஷ்டி நமுபஸமேத்யோவாச ।
அதீஹி பகவந்ப்ரஹ்மவித்யாம் வரிஷ்டாம் ஸதா ஸத்பி: ஸேவ்யமாநாம் நிகூடாம் ।
யதாঽசிராத்ஸர்வபாபம் வ்யபோஹ்ய பராத்பரம் புருஷம் யாதி வித்வாந் ॥

"அதன்மேல் " ஆஸ்வலாயணர் பகவான் பிரம்மாவை அணுகி பின்வருமாறு கூறலானார் : 
"பகவானே சிறந்ததும் எப்போதும் நல்லவர்களால் நாடப்பெற்றதும் மறைவாயுள்ளதுமான பிரம்ம வித்தையை உபதேசித்தருளவேண்டும்  என்று பிரார்த்தனை செய்தார்.

'அத' ( அதன்மேல்)--

பகுத்தறிவு, பற்றின்மை, ஞானம், முத்தியில் அவா , இந்த நான்கு சாதனங்கள் கூடியதற்கு மேல் என்பது அர்த்தம் ஆகிறது.

 பகுத்தறிவு - நிலையுள்ளதும் நிலையற்றது மாண பொருள்களைப் பற்றிய அறிவு

பற்றின்மை - வாழும்போது இவ்வுலகங்களிலும் மரணத்துக்குப் பின் மேல் உலகங்களிலும் கர்மத்தின் பயனாக ஏற்படும் இன்ப நுகற்சிகளில் பற்று இல்லாமை

ஞானம் - சமம் தமம்  உபரதி, திதிக்ஷை,  ஸ்ரத்தை , ஸமாதானம்
என்னும் ஆறுவகை யான செல்வங்கள். 

முமுக்ஷத்வம் :- முக்தி பெறவேண்டும் என்ற அவா.

1.(2) தஸ்மை ஸ ஹோவாச பிதாமஹச்ச !
ஸ்ரத்தா -பக்தி-த்யான-யோகா-தவைஹி !!

பாட்டனாராகிய பிரம்மா, " அதை ஸ்ரத்தையாலும் , பக்தியாலும், தியான யோகத்தினாலும் ,அடைவாயாக "என்று கூறினார்.

பாட்டனார் -:-
உலகை வளர்த்த பல ப்ரஜாபதிகளுக்கு பிதாவாகிய பிரம்மாவை பாட்டனார் எனக்கூறுவது வழக்கம்

1.(3) ந கர்மணா  ந ப்ரஜயா தநேந த்யாகேநைகே அம்ருʼதத்வமாநஶு: ।
பரேண நாகம் நிஹிதம் குஹாயாம் விப்ராஜதே யத்யதயோ விஶந்தி ॥ 

கர்மத்தினாலன்று ,மக்களாலன்று,செல்வத்தினாலன்று , தியாகத்தினால் மட்டுமே சிலர் சாகா நிலை எய்தியுள்ளார்கள் .
யோக முயற்சி உடையோர் எய்தும் அப்பதவி ஸ்வர்க்கத்தை விட சிறந்தது, புத்தி குகையில் நிலைத்து பிரகாசிப்பது ஆகும்.

ந கர்மணா :-  

இங்க விலக்கப்பட வேண்டியதாக சொல்லப்படும் கர்மம், நாம் ஆசை வாய்ப்பட்டு செய்யப்படும் கர்மங்கள்.  பயனில் பற்றற்று உலக நன்மைக்காகவும் ஈஸ்வரார்ப்பணமாகவும் செய்யப்படும் கர்மம் ஞானத்திற்கு சாதனம்.

1.(4)
வேதா³ந்தவிஜ்ஞாந-ஸுநிஶ்ர்சிதார்தா: ஸந்ந்யாஸ-யோகாத்-யதய: ஶுத்தஸத்த்வா: ।
தே ப்ரஹ்மலோகே து பராந்தகாலே பராம்ருʼதா: பரிமுச்யந்தி ஸர்வே !!

செம்மையான வேதாந்த ஞானத்தால் நிச்சய புத்தி உடையவர்களும், சன்யாச யோகத்தால் பரிசுத்தமான அந்தக்கரண உடையவர்களுமான துறவிகளாகிய அவர்கள் எல்லோரும் பராம்ருதமாகிய பிரம்மத்தில் நிலைபெற்று, ஜீவன் முக்தர்கள் ஆகவே வாழ்ந்து அந்திம காலத்தில் அதாவது சரீரம் விழுந்தபின் பற்று அனைத்தினின்றும் அறவே விடுபடுகின்றனர்.

தொடர்வோம்.....   

#Sathya001
_________

#கைவல்யோபநிஷத்

தொடர்-3
_______________________________
1.(5)
விவிக்ததேஶே ச ஸுகாஸநஸ்த: ஶுசி: ஸமக்ரீவஶிர:ஶரீர: ।
அந்த்யாஶ்ரமஸ்த: ஸகலேந்த்ரியாணி நிருத்ய பக்த்யா ஸ்வகுரும் ப்ரணம்ய ॥ 

கடைசி ஆசிமத்தில் உள்ள சந்நியாசியானவன், தனிமையான  இடத்தில் சுகமான ஆசனத்திலமர்ந்து ,பரிசுத்தமானவனாய்  ,கழுத்து ,தலை, உடல் ஆகியவற்றை சமமாக நிறுத்தி, எல்லா இந்திரியங்களையும் அடக்கி பக்தியுடன் தன் குருவை வணங்கி ,...


1.(6)ஹ்ருʼத்புண்டரீகம் விரஜம் விஶுத்தம் விசிந்த்ய மத்யே விஶதம் விஶோகம் ।
அசிந்த்யமவ்யக்தமநந்தரூபம் ஶிவம் ப்ரஶாந்தமம்ருʼதம் ப்ரஹ்மயோநிம் ॥ 

ஹ்ருதய கமல மத்தியில் அழுக்கற்றதும் ,பரிசுத்தமானதும், தெளிவானதும், துன்பம் அற்றதும், சிந்தனை கெடாததும்  , வெளிப்படையாய் தோன்றாததும், என்னற்ற வடிவு உடையதும், மங்களமும், சாந்தமும் நிறைந்ததும், அழிவற்றதுமான பிரம்மாண்டங்களின் பிறப்பிடமும்,..  

1.(7)தமாதிமத்யாந்தவிஹீநமேகம் விபும் சிதாநந்தமரூபமத்புதம் । var ததாதி
உமாஸஹாயம் பரமேஶ்வரம் ப்ரபும் த்ரிலோசநம் நீலகண்டம் ப்ரஶாந்தம் ।
த்யாத்வா முநிர்கச்சதி பூதயோநிம் ஸமஸ்தஸாக்ஷிம் தமஸ: பரஸ்தாத் ॥

ஆதியும் நடுவும்,  முடிவில்லாததும், ஒன்றேயாகியதும் ,எங்கும் நிறைந்ததும் , அறிவும் ஆனந்தமுமே வடிவாகியதும், வேறு வடிவற்றதும்,  அற்புதமானதும் , ஆகிய பரம்பொருளை  பரம சாந்தனும், நீலகண்டனும் முக்கண்ணனும் , உமாதேவியுடன் கூடியவனும், பிரபுவும் ஆகிய பரமேஸ்வரனாக தியானித்து, உண்டாய உலகின் உற்பத்தி ஸ்தானமும், அனைத்திற்கும் சாட்சியும், அறியாமையாகிய இருளை கடந்ததுமான நிலையை அம்முனிவன் அடைகிறான்.

1.(8)ஸ ப்ரஹ்மா ஸ ஶிவ: ஸேந்த்ர: ஸோঽக்ஷர: பரம: ஸ்வராட் ।
ஸ ஏவ விஷ்ணு: ஸ ப்ராண: ஸ காலோঽக்நி: ஸ சந்த்ரமா: ॥ 

அவனே பிரம்மா, அவனே சிவன், அவனே இந்திரன், அவனே அழிவில்லாதவன், உயர்ந்தவன், தன்னைத்தானே ஆள்பவன் அவனே  பிராணன், அவனே காலன், அவனே அக்னி, அவனே சந்திரன்.

தொடர்வோம்...     

#Sathya001

___________

#கைவல்யோபநிஷத்

தொடர்-4
_________________________________

1.(9). ஸ ஏவ ஸர்வம் யத்பூதம் யச்ச பவ்யம் ஸநாதநம் ।
ஜ்ஞாத்வா தம் ம்ருத்யு-மத்யேதி நான்ய: பந்தா விமுக்தயே ॥ 

உண்டானதும், உண்டாக்கப் போவதும் என்றும் உள்ளதும் எல்லாமும் அவனே. அவனை அறிந்து ஒருவன் சாவை கடந்து செல்கிறான். முத்திக்கு வேறு வழியில்லை.

1.(10) ஸர்வ பூதஸ்த -மாத்மாநம் ஸர்வ-பூதாநி சாத்மனி ।
ஸம்பஶ்யந் ப்ரஹ்ம பரமம் யாதி நான்யேந ஹேதுனா ॥ 

எல்லா உயிர்களிலும் தன்னையும், தன்னிடம் எல்லா உயிர்களையும் நன்கு கண்டுகொண்டு ஒருவன் பர பிரம்மத்தை அடைகிறான், வேறு எக் காரணத்தினாலும் அன்று.

இதே கருத்தை பகவத்கீதை"
 ஸர்வபூதஸ்ய மாத்மானம்  ஸர்வ பூதானி சாத்மனி !
ஈஷதே யோகயுக்தாத்மா  ஸரவத்ர ஸமதர்சன: !! 
அதாவது :-
யோகத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும் காணுகிறான் "  என்று கூறுவதை காணலாம்

1.(11). ஆத்மான-மரணிம் க்ருத்வா ப்ரணவஞ் சோத்தராரணிம் ।
ஜ்ஞான-நிர்மதனாப்யாஸாத் பாபம் தஹதி பண்டித: ॥ 

தன்னை கீழ் அரணிக் கட்டையாகவும் ஓங்காரத்தை மேல் அரணிக் கட்டையாகவும் செய்து ஞானத்தால் திரும்பத் திரும்ப கடைந்து அறிவாளி பாவத்தை சுட்டெரிக்கிறான்.

 1.(12). ஸ ஏவ மாயாபரிமோஹிதாத்மா ஶரீரமாஸ்தாய கரோதி ஸர்வம் ।
ஸ்த்ரியந்நபானாதி-விசித்ரபோகைர் ஸ ஏவ ஜாக்ரத் பரித்ருப்திமேதி ॥

மாயையால் மதியிழந்த ஜீவன் எவனோ அவன் உள்ளத்திலிருந்து எல்லாவற்றையும் செய்கிறான். ஸ்த்ரீ, அன்னம், பானம் முதலிய பல வகைப்பட்ட போகங்களால் அவனே  
விழிப்பு நிலையில் த்ருப்தியை அடைகிறான்.

தொடர்ந்து தேடுவோம்...... 

#Sathya001

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ருத்ரம்

தர்ம சாஸ்திரம்

அர்த்தமுள்ள ஸந்தியாவந்தனம்: