குரு பக்தி
ஸ்ருதி ஸ்ம்ரிதி புராணானாம் ஆலயம் கருணாலயம் !
நமாமி பகவத்பாத சங்கரம் லோகசங்கரம். !!
ஒருநாள் ஆதிசங்கரர் தன் சிஷ்யர்களான பத்ம பாதர், சுரேஸ்வரர், ஹஸ்தாமலகர் மற்றும் ஆனந்த கிரி ஆகியோர்களுக்கு அத்வைத பாடம் எடுப்பதற்காக ஆயத்தமானார். இந்த நால்வரில் பத்ம பாதருக்கு குருபக்தியில் தனக்கு மிகையானவர் யாரும் இருக்கமுடியாது என்ற எண்ணம் எப்பவும் உண்டு.குரு உபதேசிக்கும் விஷயங்களை உடனுக்குடன் க்ரஹிக்கும் அபாரமான திறமை அவருக்கு இயற்கையாகவே இருந்தது. ஆனால் கிரி க்கு குருவின் உபதேசங்களிலும், ஞான விஷயங்களிலும் நாட்டமில்லை. எப்பவும் குருவையே பார்த்துக்கொண்டும், அவர் தேவைகளை பூர்த்திசெய்தும், அவர் வஸ்திரங்களை துவைப்பதையும் , குரு சேவையை மட்டுமே தனது தலையாய கடமையாக கொண்டிருந்தார்.
அன்றும் சங்கரர் தனது வகுப்பை தொடங்காமல் மெளனமாக அமர்ந்திருந்தார். பத்ம பாதர்" குரு தேவா , இன்றைய பாடத்தை கற்க நாங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம் தாங்கள் தயை புறிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சங்கரர் பதிலுக்கு சற்று பொறுங்கள். கிரியை இன்னும் காணவில்லை ,அவர் வந்தவுடன் நாம் பாடத்தை தொடங்குவோம் ,சற்று காத்திருங்கள் என்று சொன்னார். ஞான விஷயங்களில் நாட்டமில்லாத ஒருவருக்காக குருதேவர் காத்திருப்பதை பொறுக்கமுடியாத பத்மபாதர் , அங்கிருந்த சுவற்றைக்காட்டி கிரிக்கு கற்பிப்பதும் இந்த சுவற்றை போன்ற ஜடப்பொருளுக்கு கற்பிப்பதும் ஒன்றுதான் என்று கூறினார். பத்ம பாதரின் அந்த வாரத்தைகளைக் கேட்ட சங்கரர், குருவின் சேவையில் எப்பொழுதும் மூழ்கி கிடக்கும் தன் சீடன்மேல் அணுக்ரஹம் செய்ய கருணைகொண்டார். கிரிக்கு ஶுக்ஷுமமாக சகல வித்தையையும், ஆத்ம ஞானத்தையும் உபதேசம் செய்தார். அந்தக்ஷனத்திலிருந்து சகல ஞானத்தை பெற்ற கிரி தன் குருநாதனிடம் திரும்பினார்.
சங்கரரின் பாதங்களில் விழுந்த கிரி தன் குருவை போற்றி தனது முதல் படைப்பான 8 வ்ருத்தங்களை கொண்ட ஸ்லோகத்தை தோடக இலக்கணத்தில் பாடினார். எந்த வேதாந்தத்தை அன்று உபதேசம் செய்ய இருந்தாரோ அதன் உள் பொருளையும், அதன் ஸ்வரூபம் குருநாதரே என்று பொருள்படுமாறு இருந்தது அந்த ஸ்லோகம். இதை பார்த்த அனைவரும் கிரியின் குருபக்தியைக் கண்டு அதிசயித்தனர் . தோடக இலக்கணத்தில் பாடியதால் அன்றிலிருந்து தோடகாச்சார்யார் என அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் சங்கரர் அவரை அதர்வண வேத ப்ரதிநிதியாக வடக்கே ஜோதிஷ்மட் மடாதிபதியாக அமர்த்தினார்.
குரு பக்தி ஒன்றே எல்லாவற்றையும் தர வல்லது என்பதற்கு இதைவிட வேறு சிறந்த உதாரணம் வேண்டுமோ ?
தோடகாஷ்டகம்
விதிதாகில ஶாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோபனிஷத்-கதிதார்த னிதே |
ஹ்றுதயே கலயே விமலம் சரணம்
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 1 ||
கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துஃக விதூன ஹ்றுதம் |
ரசயாகில தர்ஶன தத்த்வவிதம்
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 2 ||
பவதா ஜனதா ஸுஹிதா பவிதா
னிஜபோத விசாரண சாருமதே |
கலயேஶ்வர ஜீவ விவேக விதம்
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 3 ||
பவ எவ பவானிதி மெ னிதராம்
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா |
மம வாரய மோஹ மஹாஜலதிம்
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 4 ||
ஸுக்றுதேஉதிக்றுதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்ஶன லாலஸதா |
அதி தீனமிமம் பரிபாலய மாம்
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 5 ||
ஜகதீமவிதும் கலிதாக்றுதயோ
விசரன்தி மஹாமாஹ ஸச்சலதஃ |
அஹிமாம்ஶுரிவாத்ர விபாஸி குரோ
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 6 ||
குருபுங்கவ புங்கவகேதன தே
ஸமதாமயதாம் ன ஹி கோஉபி ஸுதீஃ |
ஶரணாகத வத்ஸல தத்த்வனிதே
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 7 ||
விதிதா ன மயா விஶதைக கலா
ன ச கிஞ்சன காஞ்சனமஸ்தி குரோ |
த்றுதமேவ விதேஹி க்றுபாம் ஸஹஜாம்
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 8 ||
Comments
Post a Comment