ஸெளந்தர்யலஹரி 31 --41
#ஆனந்த அலை-31 64 தந்திரங்களும் ஸ்ரீவித்தையும்:- சது: ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகல-மதிஸந்தாய புவனம் ஸ்திதஸ் தத்தத்-ஸித்தி-ப்ரஸவ-பரதந்த்ரை: பசுபதி: I புனஸ்-த்வந்நிர்ப்பந்தா-தகில-புருஷார்த்தைக-கடனா ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல-மவாதீதர-திதம் ii பரமசிவன் அவரவர் நாடும் அந்தச் சித்தியைமட்டும் அளிக்கும் வேறு தந்திரங்களாகிய அறுபத்துநான்கு வகைப்பட்ட தந்திர சாஸ்திரங்களால் எல்லா உலகத்தையும் நிரப்பிவிட்டு சும்மா இருக்க, மேலும் உன்னுடைய கட்டாயத்தின் பேரில் எல்லா விருப்பங்களையும் , அறம் ,பொருள், இன்பம்,வீடு என்னும் எல்லா புருஷார்த்தங்களையும் ஒருங்கே கூட்டிவைக்க வல்லதான உன்னுடைய தந்திரமாகிய இந்த ஶீ வித்தையை பூவுலகில் அவதரிக்க செய்தார். ஶீ வித்தை இரண்டு வகைப்படும். அவை ஸமயாசாரம் , வாமாசாரம் அல்லது கெளலமார்க்கம். 1)ஸமயாசாரம் :- வசிஷ்டர், ஸநகர், சுகர், ஸநந்தனர் , ஸநத்குமாரர் ஆகிய ஐவரும் அருளிய "சுபாகம பஞ்சகம்" என்று பெயர் பெற்ற ஸம்ஹிதைகளில் போதிக்கப்பட்ட மார்க்கம். இதுவே வைதீகர்களால் அனுஷ்டிக்க தக்கது . இது எல்லா புருஷார்த்தங்களரயும் சாதிக்க வல்லது. 2) வாமாசாரம் என்னும் கெளல மார்க்கம் :-