ஸெளந்தர்யலஹரி 31 --41

 


#ஆனந்த அலை-31


64 தந்திரங்களும் ஸ்ரீவித்தையும்:-


சது: ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகல-மதிஸந்தாய புவனம் 

ஸ்திதஸ் தத்தத்-ஸித்தி-ப்ரஸவ-பரதந்த்ரை: பசுபதி: I 

புனஸ்-த்வந்நிர்ப்பந்தா-தகில-புருஷார்த்தைக-கடனா 

ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல-மவாதீதர-திதம் ii 


பரமசிவன் அவரவர் நாடும் அந்தச் சித்தியைமட்டும் அளிக்கும் வேறு தந்திரங்களாகிய அறுபத்துநான்கு வகைப்பட்ட தந்திர சாஸ்திரங்களால் எல்லா உலகத்தையும் நிரப்பிவிட்டு சும்மா இருக்க, மேலும் உன்னுடைய கட்டாயத்தின் பேரில் எல்லா விருப்பங்களையும் , அறம் ,பொருள், இன்பம்,வீடு என்னும் எல்லா புருஷார்த்தங்களையும் ஒருங்கே கூட்டிவைக்க வல்லதான உன்னுடைய தந்திரமாகிய இந்த ஶீ வித்தையை பூவுலகில் அவதரிக்க செய்தார்.


ஶீ வித்தை இரண்டு வகைப்படும். அவை ஸமயாசாரம்  , வாமாசாரம் அல்லது கெளலமார்க்கம்.

1)ஸமயாசாரம் :- 

வசிஷ்டர், ஸநகர், சுகர், ஸநந்தனர் , ஸநத்குமாரர் ஆகிய ஐவரும் அருளிய "சுபாகம பஞ்சகம்" என்று பெயர் பெற்ற ஸம்ஹிதைகளில் போதிக்கப்பட்ட மார்க்கம். இதுவே வைதீகர்களால் அனுஷ்டிக்க தக்கது . இது எல்லா புருஷார்த்தங்களரயும்  சாதிக்க வல்லது. 


2) வாமாசாரம் என்னும் கெளல மார்க்கம் :-

இது 64 தந்திரங்களை உடையது . கெளல மகரிஷியால்  தொகுக்கப்பட்டது. இதில் "சந்திரகலா வித்யாஷ்டகம்" என்னும் எட்டு தந்திரங்களில் சொல்லியிருப்பது மிச்ரம் அதாவது ஒதுக்கவேண்டியதாக கருதப்படுகிறது. 


64 தந்திரங்கள் :-


1)மஹாமாய, 2)ஷாம்பாரா, 3)யோகினிஜால 4)ஷாம்பாராம.

5)தத்வ  ஷாம்பாரம், 6-13)பைரவாஷ்டகம்-8(அசிதாங்க, குரு, சண்ட, க்ரோத,உன்மத்த ,கபால, பீஷன, ஸம்ஹார  ),

14-21)பஹுரூப அஷ்டகம்-8

22-29)யாமள  அஷ்டகம்(  பிரம்ம, விஷ்ணு, ருத்ர, லக்ஷ்மி, உமா , ஸ்கந்த, கணேச,க்ருஹ்ய )

30)மஹொச்சுஸ்ய,

31)வாதூல.,

32)வதுலொத்தார,

33)ஹ்ரிந்த் பேத

34)தந்த்ர பேத,

35)குஹ்ய,

36)காமிகா,

37)கலா வாத,

38)கலா சார

39)குப்ஜிகாமத,

40)தந்தரோத்தார,

41)பஞ்சாம்ரத,

42)ரூப  பேத,

43)வினா தந்த்ர,

44)த்ரோதார,

45)த்ரதலோத்தார,

46)புத்தோதாமர,

47)குலாசார,

48)கலோதிஸா,

49)குலசுடாமணி

50)ஸர்வக்ஜத்தோரா,

51)மஹாகாளி,

52)மஹாலக்ஷ்மி,

53)ஸித்தயோகேஸ்வரி

54)குருபிகா.

55)தேவரூபிகா,

56)ஸர்வவீர மாதா,

57)விமலா,

58சதுராம்னாய தந்த்ரம் ( பூர்வ,தக்ஷிண, உத்தர, பச்சிம),

59)நிருத்தார,

60)வைஷேசிக,

61)க்ஞானார்னவ,

62)வீர பலி,

63)அருணேசா,

64மோஹினீச

விஷுத்தேஸ்வர  தந்த்ரம்.


லலிதா ஸஹஸ்ரநாமம் :- ஸர்வ தந்த்ர ரூபா, ஸமயாசார தத்பரா, என்றெல்லாம் புகழ்வதை  காணலாம்.


இந்த ஸ்லோகம் ஒப்பற்ற ஶீ வித்தையின் பெறுமையை பரைசாற்றுகிறது .


இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால் ஸர்வ வசீகரணம் சித்திக்கும்.

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼


                 *************†**


#ஆனந்த அலை-32


ஸ்ரீவித்தை பஞ்சதசாக்ஷரி மந்த்ரம்:-


சிவ: சக்தி: காம: க்ஷிதி-ரத ரவி: சீதகிரண: 

ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ்-ததனு ச பரா-மார-ஹரய: I 

அமீ ஹ்ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவஸானேஷு கடிதா 

பஜந்தே-வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம் ii 


தாயே ! சிவ பீஜாக்ஷரமான "க", சக்தி பீஜாக்ஷரமான  "ஏ",  மன்மத பீஜாக்ஷரமான  "ஈ", பிருதிவி பீஜாக்ஷரமான   "ல",  அதன் பிறகு சூரிய பீஜாக்ஷரமான  "ஹ " , குளிர்ந்த கிரணங்கள் உடைய சந்திர பீஜமான "ஸ" ,  மன்மத பீஜமான "க",   ஹம்ஸ மந்திரத்தில் உள்ள ஆகாச பீஜமான  " ஹ",  இந்திரனுடைய பீஜமான  "ல",  அதற்குப் பிறகு  பரா பீஜமாகிய. " ஸ",  மன்மத பீஜமான "க",  ஹரி பீஜமான  " ல",   உன்னுடைய இவ்வக்ஷரங்கள் , மூன்று புவனேஸ்வரி பீஜமான  ஹ்ரீங்காரஙகளுடன்  ஒவ்வொரு கூடத்தின்  முடிவில் சேர்க்கப்பட்டு, உன்னுடைய மந்திரத்தின் அவையங்களாக  அமைகின்றன.


இந்த ஸ்லோகமத்தில்  "க" என்னும் அக்ஷரத்தை முதலில் உடைய  "காதி வித்தை" என்னும் பஞ்சதசாக்ஷரி மஹாமந்திரம்  மறைமுகமாக கூறப்படுகிறது. இது வாக்பவம்,, காமராஜம், சக்தி என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 


வாக்பவ  கூடம்:-  முதல் நான்கு அக்ஷரங்களும் ஹ்ரீங்காரமும்(க-ஏ-ஈ-ல ஹ்ரீம்)  பிரலய  கால அக்னி போல ப்ரகாசிப்பதாய் , மூலாதாரத்திலிருந்து கிளம்பி அனாஹதத்தை தொடுகிறது. 


காமராஜ  கூடம் :-

இரண்டாவதாக  ஆறு அக்ஷரங்களும் ஹ்ரீங்காரமும்( ஹ-ஸ-க-ஹ-ல ஹ்ரீம்) கோடி சூரிய ப்ரகாசமுடையதாய்  அனாஹதத்திலிருந்து  கிளம்பி ஆக்ஞா சக்கரத்தை தொடுகிறது.


சக்தி கூடம் :-

மூன்றாவதாக கடைசி மூன்று அக்ஷரங்களும் ஹ்ரீங்காரமும்( ஸ-க-ல  ஹ்ரீம்) கோடி சந்திர ப்ரகாச முடையதாய் ஆக்ஞையிலிருந்து  லலாட மத்திவரை வ்யாபிக்கிறது.


 மாலையில் உள்ள ரத்தின  பரல்கள்போல மூன்று கூடங்களிலும் வர்ணங்கள் வரிசையாக ஒன்றன்மேல்  ஒன்றாக சிந்திக்கப்படவேண்டும். மூலாதாரத்திலிருந்து உதித்த நாதம்  இவ்வெழுத்துக்களிடையே மணிகளை ஊடுருவி செல்லும் சரடுபோல்  விளங்கும். மூன்று கூடங்களிலும் ஹ்ரீங்காரத்தில்  உள்ள பிந்து கலைகள் மூன்றும் வஹ்னிகுண்டலினி, சூர்ய குண்டலினி, ஸோம குண்டலினி எனப்படுவன.

 பஞ்சதசாக்ஷரி மந்திரத்திலுள்ள உயிர் மெய் எழுத்துக்களிலிருந்தே  பஞ்ச பூதங்களான பிருதிவி, அப்பு, வாயு, அக்னி, ஆகாசம் எல்லாம் தோன்றியது. ஆகாசத்தின் குணம் சப்தம் ஒன்றே, வாயுவின் குணங்கள் சப்தம், ஸ்பர்சம் இரண்டு, அக்னியின்  குணம் சப்தம், ஸ்பர்சம், ரூபம் என மூன்று. அப்புவின் குணம் சப்தம்,ஸ்பர்சம், ரூபம் ,ரசம் என நான்கு,  பிருதிவி யின் குணம் சப்தம்,ஸ்பர்சம், ரூபம் ,ரசம்,கந்தம் என ஐந்து. ஆக பஞ்ச பூதங்களின்  15 குணங்களும்(1+2+3+4+5= 15) பஞ்சதசாக்ஷரி யின் விகாசமே  என பார்க்கவேண்டும் என்று பாஸ்கர ராயரின்  "வரிவஸ்யா ரஹஸ்யம்" கூறுகிறது.


லலிதா ஸஹஸ்ரநாமம் 

ஸ்ரீமத்வாக்பவ கூடைக 

ஸ்வரூபமுக பங்கஜா ||

கண்டாத: கடிபர்யந்த மத்யகூட ஸ்வரூபிணீ |

ஸக்தி கூடைகதாபந்ந கட்யதோ பாகதாரிணீ ||


வாக்பவ கூடத்தை அம்பாளுடைய முகமாகவும்,  காமராஜ  கூடத்தை கழுத்து முதல் இடுப்பு வரையிலும், சக்தி கூடத்தை இடுப்புக்கு கீழ் உள்ள பாகமாகவும்  தியானிக்கவேண்டும்.


பஞ்சதசாக்ஷரி மந்திரத்தின் நான்காவது சந்திரகலா கூடம் ரமா  பீஜமாகிய  "ஶீம்" என்றும் அதுவும் சேர்ந்துதான் பதினாறு கலைகளுடன் இம்மந்திரம் பரிபூர்ணம் அடைகிறது என்றும் அதனாலயே இந்த மந்திரம் ஶீ வித்யா என பெயர் பெற்ற ஶீ ஷோடசாக்ஷரி மந்திரமானது. இது பரம ரஹஸ்யமானதால் இங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது. 

வாக்பவ கூடம் ஜாகரத்திற்கும், காமராஜ கூடம் ஸ்வப்னத்திற்கும், சக்தி கூடம் ஸுஷுப்திக்கும், நாலாவதாக சந்திரகலா  கூடம் துரீயத்திற்கும் ஒப்பிடப்படும்.


லலிதா ஸஹஸ்ரநாமம்


ஆத்மவித்யா மஹாவித்யா ஶீ வித்யா காமஸேவிதா !

ஶீ ஷோடசாக்ஷரீ-வித்யா த்ரிகூடா காமகோடிகா  !!. என்று கூறுவதை காணலாம்.


ராஜ்யம் தேஹி ! சிரோ தேஹி ! ந தேஹி  ஷோடசி !! 

ராஜ்யத்தை  கொடுத்தாலும், சிரசை 

கொடுத்தாலும் ஷோடசாக்ஷரி மந்திரத்தைமட்டும் கொடுக்கக்கூடாது  என்ற சான்றோர் வாக்குக்கு ஏற்ப இந்த மந்திரம் பரம ரஹஸ்யமானது. குருவின் பாத சேவையினால்  மட்டுமே அடைய முடியும். அதனால் தகுந்த குருவிடம் தீக்ஷை  பெறாமல் இந்த மந்திரத்தை  ஸ்மரணம்  பண்ணக்கூடாது.


இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால் 

ஸகல கார்ய  ஜயமும், தீர்காயுளும் சித்திக்கும்.

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼





              ********************


#ஆனந்த அலை-33


ஸௌபாக்ய மந்திரம்:-


ஸ்மரம் யோனிம் லக்ஷ்மீம் த்ரிதய-மித-மாதௌ தவ மனோ: 

நிதாயைகே நித்யே நிரவதி-மஹாபோக-ரஸிகா: I 

பஜந்தி த்வாம் சிந்தாமணி-ஜுண நிபத்தாக்ஷ-வலயா: 

சிவாக்னௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதி-சதை: 


ஆதியந்தம் அற்ற பரதேவதையே , பஞ்சதசாக்ஷரி மந்திரத்தின் முதலில் காம பீஜமான க்லீம் என்ற அக்ஷரம், புவனேஸ்வரி பீஜமான ஹ்ரீம் என்ற அக்ஷரம், லக்ஷ்மி பீஜமான ஶீம் என்ற அக்ஷரம், ஆகிய இம் மூன்றையும் சேர்த்து இடைவிடாத ஜபத்திலுள்ள ஆனந்த சுவையை அறிந்தவர்களாகிய சிலர், தொடர்ந்து வரும் சிந்தனையையே  ஜபமாலையாய் கொண்டு, சக்தி முக்கோனத்தில் உள்ள அக்னி யில் காமதேனு அளித்த நெய் போன்ற ஆத்மானந்தத்தைக் கொண்டு நுற்றுக்கணக்கான ஆஹுதிகளை செய்பவர்களாக உன்னை ஆராதிக்கிறார்கள்.


ஸாவித்ரி மந்த்ரம் ப்ரணவமும்,   பூ: ,புவி: ஸுவ: என்ற  மூன்று வ்யாஹ்ருதிகள் சேரும்போது காயத்ரியாக  மாறுவதுபோல, பஞ்சதசாக்ஷரியும்  ஜம்- க்லீம் - ஸெள:  என்ற பாலா மந்திர பீஜங்கள் சேரும்போது  ஸெளபாக்ய பஞ்சதசியாக பெயர் பெறுகிறது.  இந்த மூன்று பீஜாக்ஷரங்களை ஒவ்வொரு கூடத்திலும் முதலில் சேர்ப்பதே ஸெளபாக்ய வித்தை எனப்படுகிறது. ( ஒம் ஐம்  கஏஇல ஹ்ரீம்  க்லீம் ஹஸகஹல ஹ்ரீம்  ஸெள: ஸகல ஹ்ரீம் )


சிவாக்னி :-  

முக்கோண வடிவான குணடத்தில் அக்னி யை ஸ்தாபித்தால் அது சிவாக்னி எனப்படும் . அதில் பசு நெய் கொண்டு ஹோமத்தில் ஆஹுதி செய்து தேவியை ஆராதனை செய்வார்கள் சில புண்யவான்கள். சிலர் சிவோஹம் என்ற பாவனையில் அந்தர்யாகமாக தேவியை ஆராதித்து  ஸகல ஸெபாக்யத்தையும் எய்துவர்.


இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால்

ஸகல ஸெளபாக்யங்களும் சித்திக்கும்.

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼



                   ***************




#ஆனந்த அலை-34


சேஷசேஷீபாவம் :-


ஶரீரம் த்வம் ஶம்போ: ஶஶி மிஹிர வக்ஷோருஹ யுகம்

தவாத்மானம் மன்யே பகவதி நவாத்மான மனகம்

அத: ஶேஷ: ஶேஷீத்யய முபய ஸாதாரணதயா

ஸ்த்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ பரானந்த பரயோ:  !!


 


பரதேவதையே ! சந்திரசூரியர்களை நகில்களாக உடைய நீ பரமசிவனுக்கு உடல் என்றும் மாசற்ற ஒன்பது வ்யூஹ ஸ்வரூபியான சிவனை உன்னுடைய உடல் என்றும் மனக்கண்ணால் காண்கிறேன். ஆகையால் உடைமை, உடையவர் என்ற இந்த உறவு ஸமரஸப்பட்ட ஆனந்தபைரவர், ஆனந்தபைரவி இருவருக்கும் ஸமமாக நிலை பெற்றுள்ளது.


சிவனின் ஒன்பது வியூஹஸ்வரூபி:-

 காலம், குலம், நாமம், ஞானம், சித்தம், நாதம், பிந்து, கலை, ஜீவன் முதலியன.


சேஷசேஷீ: 

உலகின் சிருஷ்டி, ஸ்திதி, லயங்களின் போது சிவன், சக்தி இருவருடைய பிரயத்தனமும் இருந்தபோதிலும் அதில் ஆனந்தபைரவி ஆனந்தபைரவருடன் சிவன் சேஷித்தன்மை அடைந்தவராகவும், சக்தி சேஷத்தன்மை அடைந்தவளாகவும் ஆகிறார்கள். இப்படி இருவருக்கும் சேஷசேஷீ பாவம் ஸமானம் ஆகிறது. சிவனுக்கு ஸமமாக சிவனுக்கு ‘ஸமய:’ என்றும் சக்திக்கு ‘ஸமயா’ என்றும் பெயர்.


இந்த சுலோகத்தை ஜபம் செய்துவரும் குடும்பங்களில் ஸ்த்ரீ புமான்களுக்குப் பரஸ்பரம் அன்யோன்ய பாவம் த்ருடமாகும். வேதோக்த கர்மாக்களைச் செய்யும் காலங்களில் புருஷர்களுக்குப் பிராதான்யமும் குடும்ப விஷயங்களில் ஸ்த்ரீகளுக்குப் பிராதான்யமும் இருப்பது அவசியம். இப்படி ஸமரஸத்துடன் வாழும் கிருஹஸ்தர்கள் ஈசுவர அனுக்கிரகத்தால் ஞானத்தைப் பெற்று மோக்ஷத்தை அடையலாம்.         என்று தேதியூர் சுப்ரஹ்மண்ய சாஸ்திரி கூறுகிறார்.


இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால் தம்பதிகளுல் அன்யோன்ய ஸமரஸ பாவம் சித்திக்கும்.


🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼


ஆனந்த அலை -35_

_______________________


ஆறு சக்கரங்களிலும் விளங்கும் தேவி:-


மனஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத் ஸாரதி ரஸி

த்வ மாபஸ் த்வம் பூமிஸ் த்வயி பரிணதாயாம் ந ஹி பரம்

த்வமேவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விஶ்வ வபுஷா

சிதானந்தாகாரம் ஶிவயுவதி பாவேன பிப்ருஷே !!


मनस्त्वं व्योम त्वं मरुदसि मरुत्सारथिरसि

त्वमापस्त्वं भूमिस्त्वयि परिणतायां न हि परम् ।परम्

त्वमेव स्वात्मानं परिणमयितुं विश्ववपुषा

चिदानन्दाकारं शिवयुवति भावेन बिभृषे ॥ ३५॥

 


ஆக்ஞா சக்கரத்தில் மனமாக நீ விளங்குகிறாய்; விசுத்தி சக்கரத்தில் ஆகாசமாகவும் விளங்குகிறாய்; அநாஹதத்தில் வாயுவாக விளங்குகிறாய்; ஸ்வாதிஷ்டானத்தில் அக்கினியாக இருக்கிறாய்; ஜல தத்துவமும் நீயே; பிருதிவி தத்துவமும் நீயே; நீயே ப்ரபஞ்சமாகப் பரிணமித்திருப்பதால் உனக்கு வேறான பொருள் இல்லவே இல்லை. நீ உனது ஸ்வரூபத்தை பிரபஞ்ச வடிவாக பரிணமிக்கச் செய்வதற்கு பமசிவனுடைய பத்னி என்ற பாவனையால் ஆனந்த வடிவான சித்ரூபத்தை ஏற்றுக்கொள்ளுகிறாய்.


 


இந்த சுலோகத்தில் தேவியின் அஷ்டமூர்த்தித்வம் கூறப்படுகிறது.


பாரும் புனலுங் கனலும்வெங் காலும் படர்விசும்பும்

ஊரும் முருகு சுவையொளி யூறொலி யொன்றுபடச்

சேருந் தலைவி சிவகாம ஸுந்தரி "


அபிராமி! நீ நிலம், நீர், நெருப்பு ஆகாயம் என்ற ஐவகைப்

 பூதங்களாகவும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற அவைகளின் தன்மையாகவும் நிற்கக் கூடியவள். 

 

என்று இதையே அபிராமி பட்டரும் கூறுகிறார்.


லலிதா ஸஹஸ்ரநாமம்


அஷ்டமூர்த்தி ரஜாஜேத்ரீ 

லோகயாத்ரா விதாயிநீ ! 


என கூறுவதை காணலாம்.


🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

________________________________________


ஆனந்த அலை -36

____________________________________


ஆக்ஞா சக்கரத்தில் பர சம்பு ஸ்வரூபம்:-


தவாஜ்ஞா சக்ரஸ்த்தம் தபன ஶஶி கோடி த்யுதிதரம்

பரம் ஶம்பும் வந்தேபரிமிலித பார்ஶ்வம் பரசிதா

யமாராத்த்யன் பக்த்யா ரவி ஶஶி ஶுசீனா மவிஷயே

நிராலோகே(அ)லோகே நிவஸதி ஹி பாலோக புவனே   !!


तवाज्ञाचक्रस्थं तपनशशिकोटिद्युतिधरं

परं शम्भुं वन्दे परिमिलितपार्श्वं परचिता ।

यमाराध्यन् भक्त्या यमाराध्यन् रविशशिशुचीनामविषये

निरालोकेऽलोके निवसति हि भालोकभवने ॥ ३६॥


            உன்னுடைய ஆக்ஞா சக்கரத்தில் இருப்பவரும் கோடி சூர்யசந்திரர்களின்  பிரகாசத்தை உடையவரும், ஸகுண, நிர்க்குண சக்திவடிவான உன்னால் இருபுறமும் அனைக்கப் பெற்றவருமான பரமசிவனை சேவிக்கின்றேன். அம்மாதிரி இருப்பவரை பக்தியுடன் ஒருவன் ஆராதித்தால் சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூவருடைய ஒளியாலும் விளங்கவைக்க முடியாததாகவும், கண்ணுக்கு எட்டாததாகவும் கண்ணால் காணும் உலகத்தினின்று வேறுபட்டதாகவும் உள்ள பரஞ்ஜோதிவடிவமான உனது ஸாயுஜ்ய பதவியில் வசிப்பான் என்பது நிச்சயம்.


தவ: தவ என்னும் சொல்லால் புருவமத்தியில் உள்ள நாலு சிவசக்கரங்கள் கூறப்படுகின்றன. இரண்டுதளம் உள்ள சிவசக்கரம் அன்று


 – லக்ஷ்மிதாரர்


தவாஜ்ஞா:


 காமேசுவர ஸூரியின் அபிப்பிராயத்தில், இது புருவமத்தியில் உள்ள இரண்டுதள வடிவமான ஆக்ஞா சக்கரத்தைத்தான் குறிக்கிறது. அவ்வாறே மேலே வரும் ஐந்து சுலோகங்களிலும் அந்த அந்தச் சக்கரங்கள்தான் குறிக்கப்படுகின்றன.


ஆக்ஞா சக்கரத்தில் பரசம்பு நாதரையும் சித்பராம்பாளையும் 64 மானஸ வியூகங்களால் சூழப்பட்டவர்களாகத் தியானிக்கவேண்டும்


பாரதபூமியில் காசி க்ஷேத்ரம் ஆக்ஞாசக்கர ஸ்தானம். அங்கே துர்க்கையும் விசாலாக்ஷியும் பிரதான சக்திகள்.


அக்னிகண்டம், சூரியகண்டம், சந்திரகண்டம் இவற்றிலுள்ள கிரணங்கள் முன்னூற்றருபதும் ஆக்ஞாசக்கரத்தைக் கடந்து செல்லமாட்டா. அதற்குமேல் ஸஹஸ்ராரத்தில் பிரகாசிப்பது மற்றொரு நித்யமான சந்திரகலை.


 🙏🏼🙏🏼🙏🏼

_________________________________________


ஆனந்த அலை -37

_________________________________________


விசுத்தி சக்கரத்தில் பார்வதி பரமேசுவர த்யானம்:-


விஶுத்தௌ தே ஶுத்தஸ்படிக விஶதம் வ்யோம் ஜனகம்

ஶிவம் ஸேவே தேவீமபி ஶிவஸமான வ்யவஸிதாம்

யயோ: காந்த்யா யாந்த்யா: ஶஶிகிரன ஸாரூப்ய ஸரணே:

விதூதாந்தர் த்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதீ  !!37


विशुद्धौ ते शुद्धस्फटिकविशदं व्योमजनकं

शिवं सेवे देवीमपि शिवसमानव्यवसिताम् ।शिवसमानव्यवसिताम्

ययोः कान्त्या यान्त्याः शशिकिरणसारूप्यसरणे-शशिकिरणसारूप्यसरणे

विधूतान्तर्ध्वान्ता विलसति चकोरीव जगती ॥ ३७॥

                 

உன்னுடைய விசுத்தி சக்கரத்தில் தெளிவான பளிங்கு போன்ற வடிவினரும் ஆகாச தத்துவத்தைத் தோற்றுவிப்பவரும் ஆகிய சிவனையும் சிவனுடைய ஸங்கல்பத்திற்கு ஒத்த ஸங்கல்பம் உடையவளாகிய தேவியாகிய உன்னையும் சேவிக்கிறேன். எவர்களுடைய வெண்ணிலாவைப் போல் வெளிவரும் ஒளியினால் உலகம் முழுதும் அக்ஞானமாகிய அக இருள் ஒழியப் பெற்றதாய் நிலவில் களிக்கும் சகோரப் பக்ஷிபோல் விளங்குகிறதோ அப்படிப்பட்ட உங்களை சேவிக்கிறேன்.


விசுத்தி சக்ரம் பதினாறு இதழ் கமலம்


 


ஆக்ஞா சக்கரத்தில் ஆத்ம தத்வம் நிரூபிக்கப் பட்டது. அவ்வாத்ம  தத்துவத்திலிருந்து ஆகாசம் தோன்றுகிறது. இங்கு ஆத்மாவானது மனஸ் தத்துவம். சந்த்ர ஸ்தானத்தில் உள்ள பார்வதியும் சூரிய ஸ்தானத்தில் உள்ள பரமேசுவரனும் விசுத்தி சக்கரத்தில் விளங்கும்போது மற்ற ஆனந்தங்கள் விலகிப் போகின்றன, பதினாறு நித்யைகளின் நிலவும் இல்லை. சிவதம்பதிகளின் ஆனந்தமயமான ஒளியே எல்லா ஜீவர்களுக்கும் ஜீவாதாரம்.


ஆகாச தத்துவ உபாஸனை சிதம்பர க்ஷேத்திரத்தில் செய்யப்படுவது. சிவனுக்கும் சக்திக்கும் இவ்வுபாஸனையில் வ்யோமேசுவரன் என்றும் வ்யோமேசுவரி என்றும் பெயர். அவர்கள் 72 ஆகாச மயூகங்களுடன் உபாசிக்கப் படுவர். சிலர் இந்தச் சுலோகத்தில் குறிக்கப் படுவது அர்த்த நாரீசுவர மூர்த்தி எனவும் கூறுவர்.


🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼



______________________________________


ஆனந்த அலை -38

_______________________________________


அநாஹத சக்கரத்தில் ஜீவப்ரஹ்ம ஐக்கியம்:-


ஸமுன்மீலத் ஸம்வித் கமல மகரந்தைக ரஸிகம்

பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மானஸசரம்

யதாலாபா தஷ்டாதஶ குணித வித்யாபரிணதி:

யதாதத்தே தோஷாத் குணமகில மத்ப்ய: பய இவ !!       


  


நன்றாக மலர்ந்த ஞானத்தாமரையின் ஆனந்தமாகிய மகரந்தம் ஒன்றையே விரும்பி அநுபவிப்பவைகளும் மகான்களுடைய மனதாகிற மானஸ ஸரஸில் நீந்துபவைகளும் இப்படிப்பட்டவை என்று வர்ணிக்க முடியாதவைகளுமான

இரண்டு ஹம்ஸங்களைபூஜிக்கிறேன்.


 அவைகளுடைய இன்பப் பேச்சில் இருந்தே பதினெட்டெனக் கணக்கிடப்பட்ட வித்தைகள் பரிணமிக்கின்றன. அவை குற்றத்திலிருந்து குணமனைத்தையும் நீரிலிருந்து பாலைப்போல் பிரிக்கின்றது

வாயு தத்துவத்திற்கு இருப்பிடம் அநாஹத சக்கரம். 

இது பன்னிரண்டு இதழ் கமலம்.


 இங்கு ஹம் என்ற சிவனையும் ஸ என்ற சக்தியையும் ஹம்ஸேசுவரன் – ஹம்ஸேசுவரி என்ற 54 வாயவ்ய மயூகங்களுடன் உபாசிக்க வேண்டும். 


இந்த ஹம்ஸங்களின் சம்பாஷணைதான் பதினெட்டு வித்தைகள். அவையாவன: வேதங்கள் 4, சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிஷம் என 6, மீமாம்ஸம், நியாயம், புராணம், தர்மசாஸ்திரம் என 4, ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தர்வவேதம், நீதி சாஸ்திரம் என 4.


“ஹம்ஸ: ஸோஹம் ஸோஹம் ஹம்ஸ:” என்ற அஜபாவித்தையினால் ஹம்ஸத்வந்த்வத்யானம் செய்கிறவர்களுக்குப் பாவங்களும் புண்ணியம் ஆகிவிடும்.


ஹம்ஸத்வந்த உபாசனத்திற்கு ஏற்பட்ட ஸ்தானம் ஆவுடையார் கோவில்.


 


ஸ்ரீசங்கரர் ஸுபகோதய வியாக்யானத்தில் “அநாஹத்தில் சிவனை ஶிகிஜ்வாலா என்ற தீப வடிவிலும், சக்தியை ஶிகினீ என்ற ஒளி வடிவிலும் தியானம் செய்ய வேண்டும்” என்று கூறுகிறார். இப்படி உபாசிப்பவர்கள் எதிலும் நல்லதை எண்ணிப் பார்க்க வேண்டுமேயன்றிக் குற்றங்களை எண்ணக் கூடாது என்பது நியமம்.


வித்யோபாஸகர்கள் அந்தர்முகமாக இருந்து கொண்டு அநாஹத சக்கரத்தில் ஏற்படும் சப்தத்தைக் கவனித்தால், ஸ்ரீவித்யா ஷோடசியில் உள்ள அக்ஷரங்களும், வித்யாகுருவின் ஸ்வரூபமும், தேவியின் ஸ்வரூபமும் (ஆகப் பதினெட்டும்) சப்த மூலமாகப் பிரத்தியக்ஷமாக அநுபவிக்கப் படும்.”  


தேதியூர் சுப்ரஹ்மண்ய சாஸ்திரிகள்


 


ஸ்ரீசங்கரர் ஸுபகோதய வியாக்யானத்தில் “அநாஹத்தில் சிவனை ஶிகிஜ்வாலா என்ற தீப வடிவிலும், சக்தியை ஶிகினீ என்ற ஒளி வடிவிலும் தியானம் செய்ய வேண்டும்” என்று கூறுகிறார். இப்படி உபாசிப்பவர்கள் எதிலும் நல்லதை எண்ணிப் பார்க்க வேண்டுமேயன்றிக் குற்றங்களை எண்ணக் கூடாது என்பது நியமம்.

______________________,__________________


ஆனந்த அலை -39

________________________________________


ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் காமேசுவரி


த்வ ஸ்வாதிஷ்ட்டானே ஹுதவஹ மதிஷ்ட்டாய நிரதம்

தமீடே ஸம்வர்த்தம் ஜனனி மஹதீம் தாஞ்ச ஸமயாம்

யதாலோகே லோகான் தஹதி மஹஸி க்ரோதகலிதே

தயார்த்ரா யா த்ருஷ்டி: ஶிஶிர முபசாரம் ரசயதி        !!


                           தாயே ! உன்னுடைய ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் அக்கினி தத்துவத்தை சிந்தித்து அதில் இடைவிடாது பிரகாசிக்கும் காலாக்கினி ரூபரான அந்த ருத்திரனையும், மகிமை வாய்ந்த அந்த ஸமயா அல்லது சந்திரகலா சக்தி என்னும் உன்னையும், போற்றுகின்றேன். ருத்திரருடைய எந்தப் பார்வையான அக்கினி கோபத்தால் வளர்ந்து உலகங்களை எரிக்கின்றதோ அப்போது கருணையால் நனைந்த உன்னுடைய பார்வை எதுவோ அது குளிர்ச்சியான உபசாரத்தை செய்கிறது.


 


வாயுவிலிருந்து அக்கினி தோன்றுகிறது. அக்கினிக்கு இருப்பிடம் ஸ்வாதிஷ் டான சக்கரம். இது ஆறுதள கமலம். இங்கே ஸமவர்த்தேசுவரர், ஸமயாம்பாள் என்று சிவனையும் சக்தியையும் 62 தைஜஸ மயூகங்களுடன் உபாசிக்க வேண்டும். இதற்கேற்பட்ட ஸ்தானமான அருணாசலம் என்னும் திருவண்ணாமலை. இங்கே உள்ளது தேஜோலிங்கம்.


 


சக்கரக்கிரமத்தில் விசுத்திக்கும் அநாஹதத்தும் பின் மணிபூரகம் வரவேண்டும். ஆனால் தத்துவக் கிரமத்தில் ஆகாசத்திற்கும் வாயுவுக்கும் பின் அக்கினி வருவதால் இவ்வாறு கூறப்படுகிறது


 ஸ்வாதிஷ்டனத்தில் இருக்கும் அக்னியை ப்ரளயகால அக்னியாக பாவித்து, சிவ-தம்பதியினரை ப்ரளயகால ருத்ரனாகவும், ருத்ராணியாகவும் உபாசனை செய்கிறார் இங்கே. ப்ரளயகால அக்னிக்கு ஸம்வர்த்தாக்னி என்று பெயர்.


 அந்த ஸம்வர்த்தாக்னியின் ஜ்வாலையை ருத்ராணி என்று அம்பாளாகச் சொல்கிறார்.


 அம்பாளை ஜ்வாலையாகச் சொன்னாலும் அவளது பார்வை கருணையோடு கூடிய குளிர்ச்சி தருகிறதாம்


🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼


________________________________________


ஆனந்த அலை -40

_____________________________________


மணிபூரகத்தில் மேகத்திடை மின்னல்கொடி போன்றவள்:-


தடித்வந்தம் சக்த்யா திமிர-பரிபந்த்தி ஸ்புரண்யா 

ஸ்புரந்-நானாரத்னாபரண-பரிணேத்தேந்த்ர-தனுஷம் i 

தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக-சரணம் 

நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர-தப்தம் த்ரிபுவனம் ii 


உன்னுடைய மணிபூரக சக்கரத்தை முக்கியமான உறைவிடமாகக் கொண்டதும், இருட்டுக்குச் சத்துருவைப்போல் பிரகாசிக்கும் பராசக்தியாகிற மின்னல் கொடியுடன் கூடியதும், ஜ்வலிக்கும் நானாவிதமான ரத்தின ஆபரணங்களாகிய இந்திரவில்லுடன் கூடியதும், கறுத்ததும், ருத்ரனாகிய பிரளயகால சூரியனால் எரிக்கப்பட்ட மூவுலகையும் மழை பொழிந்து குளிரச் செய்வதும், ஆகிய அதிசயமான மேகம் போன்ற உனது சதாசிவ தத்துவத்தை சேவிக்கிறேன்.


அநாஹத சக்கரத்தில் உள்ள சூரியகிரணம் கீழே பரவி, ஸ்வாதிஷ்டான அக்னியுடன் கூடி மணிபூரகத்தில் புகுந்து மேகத்தை உண்டாக்கி மழை பொழிந்து தாபத்ரயத்தால் தவிக்கும் உலகைக் குளிரச் செய்கிறது” என்று  "அருணாமோதினீ" உரைக்கிறது.


லலிதா ஸஹஸ்ரநாமம்


மணிபூராப்ஜ -நிலயா வதனத்ரய- ஸ‌ம்யுதா!

வஜ்ராதிகாயுதோபேதா டாமர்யாதிபி -ராவ்ருதா!

ரக்த வர்ணா மாம்ஸநிஷ்டா குடான்ன -ப்ரீத -மானஸா!


ஸ‌மஸ்த- பக்த-ஸுகதா லாகின்யம்பா- ஸ்வரூபிணி.!!  என்று கூறுவதை பார்க்கலாம்.


இதன் பொருள், மணிபூரகச் சக்கரத்தில், அம்பிகை, மூன்று முகங்களை உடையவளாக, வஜ்ராயுதம் உள்ளிட்ட ஆயுதங்களைத் தரித்தவளாக, டாமரி தொடங்கி பத்து சக்தி தேவதைகளால் சூழப்பட்டவளாக இருக்கின்றாள்.


இந்தச் சக்கரத்தில் ரத்தச் சிவப்பு வண்ணத்துடன், லாகினி என்ற பெயருடன் எழுந்தருளும் தேவி, உயிரினங்களின், தசைப் பகுதியில் உறைபவளாக, வெல்லம் சேர்த்துச் சமைக்கப்பட்ட அன்னத்தை (சர்க்கரைப் பொங்கல்) விருப்பத்துடன் ஏற்பவளாக, பக்தர்களுக்கு சுகத்தை அருளுபவளாக இருக்கிறாள்.


மேலும்  

மணிபூராந்தருதிதா விஷ்ணு கிரந்தி விபேதினி- 


மணிபூரகமும், அநாகதமும் சேர்ந்து, சூர்ய கண்டமாக அறியப்படுகிறது. அக்னிக் கண்டத்திற்கும் (மூலாதாரமும் சுவாதிஷ்டானமும் இணைந்த பகுதி), சூர்யக் கண்டத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் பிரம்மக் கிரந்தி இருப்பது போல், சூரியக் கண்டத்திற்கும், சோமக் கண்டத்திற்கும் (விசுத்தி, ஆஜ்ஞா சேர்ந்த பகுதி) இடைப்பட்ட பகுதியில் விஷ்ணு கிரந்தி இருக்கிறது. விஷ்ணு கிரந்தி அறுபடும் போது, ஆன்மாவுக்கு, ஸ்திதி வாசனையிலிருந்து விடுதலை கிட்டும்.


விஷ்ணு கிரந்தியை அறுக்கும் முகமாக, தேவி, மணிபூரகத்தின் வழியே மேலேறுகிறாள் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.


இருள் நிறைந்த மணிபூரகத்தில் நீருண்டமேகம் போன்ற சிவனிடம் சாதாரண மின்னல்கொடிபோல் தேவி காட்சி அளிக்கிறாள்.


ஒப்பிடுக: “நீல தோயத மத்யஸ்த்தாத்வித்யுல்லேகேவ பாஸ்வரா”

-நாராயண ஸூக்தம்

அக்கினியிலிருந்து ஜலம் தோன்றுகிறது. ஜலத்திற்கு இருப்பிடமான மணிபூரக சக்கரம் பத்துத்தள கமலம். இங்கே மகேசுவரன் – ஸ்திரஸௌதாமினி என்று சிவனையும் சக்தியையும் உபாசிக்க வேண்டும். இவர்களுக்கு அமிருதேசுவரன் – அமிருதேசுவரி என்ற பெயரும் பொருந்தும். இவர்களை ஸத்யோஜாதம், வாமதேவம் முதலிய 52 ஜல மயூகங்களால் சூழப்பெற்றவர்களாகத் தியானிக்க வேண்டும். இதற்கு ஏற்பட்ட ஸ்தானம் திருவானைக்காவல்


🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼


__________________________________________


ஸெளந்தர்யலஹரி-41

_______________________________


மூலாதாரத்தில் ஆநந்தத்

 தாண்டவம்" :-


தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய-பரயா 

நவாத்மானம் அன்யே நவரஸ-மஹாதாண்டவ-நடம் i 

உபாப்யா-மேதாப்யா-முதய-விதி முத்திசய தயயா 

சனாதனாப்யாம் ஜஜ்ஞே-ஜனகஜனனீமத் ஜகதிதம் ii 


உன்னுடைய மூலாதார சக்கரத்தில் நடனம் செய்வதில் நோக்கம் உள்ளவளும் ‘ஸமயா’ எனப் பெயர் கொண்டவளுமான உன்னுடன் கூட நவரஸம் ததும்பும் சிறந்த தாண்டவம் ஆடுகிற ஆனந்தபைரவரை தியானம் செய்கிறேன். பிரளயத்தில் அழிந்த உலகின் சிருஷ்டியை கருதி கருணையுடன் தம்பதியாகக் கூடியவர்களான உங்கள் இருவர்களாலும் இவ்வுலகமானது தந்தையும் தாயும் உடையதாக ஆகிறது.

அப்புவிலிருந்து பிருதிவி தத்துவம் உண்டாகிறது. பிருதிவிக்கு இருப்பிடம் மூலாதாரம். இது முக்கோணத்தின் நடுவில் நாலுதள கமலம். இங்கே ஆனந்தபைரவர் – ஆனந்தபைரவி என்று சிவனையும் சக்தியையும் 56 பிருதிவி மயூகங்களுடன் கூடியவர்களாகத் தியானம் செய்யவேண்டும்.


 


ஸமயாசாரத்தில் வெளியில் பூஜை இல்லை. இவர்கள் செய்யும் ஐக்கியானுஸந்தானம் நான்குவகைப் பட்டது:


மூலாதாரம் முதலிய ஆறு சக்கரங்களும் ஸ்ரீசக்கரத்தில் உள்ள ஆறு கோணங்களில் ஐக்கியம்.

ஸஹஸ்ராரம் பிந்து ஸ்தானமான சதுரச்ரத்தில் ஐக்கியம்.

பிந்துவில் சிவன் ஐக்கியம்.

ஸ்ரீசக்கரத்தில் அம்பாளுடைய மந்திரம் ஐக்கியம். பரா, பச்யந்தி, மத்யமா, வைகரி என்ற நாதத்துக்கும் ஷட்சக்கர வடிவமான பிந்துவுக்கும் காலாத்மகக் கலை வடிவமான முன்னூற்றருபது கிரணங்களுக்கும் அம்பாள் அதீதமானவள்.

இப்படிச் சிவதம்பதிகளைத் தங்களுக்குள்ளேயே பூஜிப்பவர்களுக்கு ஸமயிகள் என்பது பெ யர்

ஷட்சக்ரங்கள் மூலாதாரத்திலிருந்து ஆஜ்ஞா வரையிகிருப்பதை சொல்வது க்ரமம், ஆனால் இங்கே கடந்த ஆறு ஸ்லோகங்களில் அவற்றைச் சொல்கையில் ஆஜ்ஞா சக்ரத்திலிருந்து ஆரம்பித்து மூலாதாரத்தில் முடித்ததன் காரணம் என்ன என்று பார்க்க வேண்டும். 

அந்த சக்ரங்களின் தத்வங்கள் ஆஜ்ஞாவில் ஆரம்பித்துச் சொல்லுகையில் மனஸ், ஆகாசம், வாயு, அக்னி, ஜலம், ப்ருதிவி என்று வரிசை வருகிறது. 


இந்த வரிசையானது "ஆத்மன ஆகாஸ் ஸம்பூத: ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேராப: அத்ப்ய: ப்ருதிவி" என்ற ச்ருதி வாக்கியத்தை ஒட்டி வருகிறது என்பர். 


அதாவது ப்ருதிவியானது ஜலத்திலிருந்தும், ஜலமானது அக்னியிலிருந்தும், அக்னி வாயுவிலிருந்தும், வாயு ஆகாசத்திலிருந்தும், ஆகாசம் ஆத்ம தத்வத்திலிருந்தும் வந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. 


இந்த பஞ்சவிம்சதிகள் ப்ருதிவியிருந்து செல்கையில் ஸ்தூலமாகவும் பின்னர் ஸுக்ஷ்மத்திலும் மாறுகிறது.


 இதனால்தான் மயிம் மூலாதாரே என்ற 9ஆம் ஸ்லோகத்திலும் மாற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.


இந்த ஸ்லோகத்தில் மூலாதாரத்தில் அம்பிகையை பரமசிவனுடன் சேர்த்து உபாசிக்கும் முறை சொல்லப்பட்டிருக்கிறது.


 அம்மூலாதாரத்தில் இருக்கும் சக்திக்கு குண்டலினீ என்று பெயர். 


அம்பாளை உபாசிக்கும் முறையில் பல விதங்கள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றில் முக்கியமானவை இரண்டு. 


அதாவது, தக்ஷிண மார்க்கம், வாம மார்க்கம் என்பன அவ்விரண்டும். இவை முறையே ஸமயமார்க்கம், கெளல மார்க்கம் என்றும் வழங்கப்படுகிறது.

 கெளல மார்க்கத்தில் பூர்வ கெளலம், உத்தர கெளலம் என்று இருமுறைகள் உண்டு. 

அம்பாளது பூஜையானது அந்தர்முகமாகவே செய்யப்பட வேண்டும் என்றும், அதிலும் அம்பாளை சஹஸ்ராரகமலத்துக்கு அழைத்து வந்து அங்கே பூஜிக்க வேண்டும் என்றும் ஸமயிகள் கூறுவர்.


 இவ்வாறு செய்ய இயலாதோர், பஹிர்முகமாக ஸ்ரீசக்ரம், மேரு போன்றவற்றில் பாவனையாக பூஜிப்பர்.


கெளல மார்க்கத்தில் ஸ்ரீசக்ரத்தில் த்ரிகோணத்தை மட்டுமே பூஜிப்பர். 

கெளல மார்கத்தவர் மூலாதாரத்தில் இருக்கும் த்ரிகோணத்தையே பிந்து ஸ்தானமாக பூஜிப்பதால் அங்கிருக்கும் குண்டலினீ சக்தியே ப்ராதான்யம், இதனால்தான் இச்சக்திக்கு கெளலினீ என்றொரு பெயர்.


 குண்டலினீ தனது நித்திரையை விட்டு எழும்பினாலே கெளலர்களுக்கு முக்தி


இவை எல்லாமே ஸ்ரீவித்யை என்று சொல்லப்பட்டாலும் இதனை உணர்ந்து, உபாசித்து உயர்வினை எய்தியவர்கள் 12 பேர். 

அவர்கள் ஒவ்வொருவரும் மஹிமை வாய்ந்த இவ்வித்யை வேதங்களின் வேவ்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து உபாசித்துள்ளதால் இவ்வித்யை 12 மந்த்ர த்ரஷ்டாகளால்/ரிஷிகளால் வழங்கப்படுகிறது. அவர்கள் அகஸ்தியர், லோபாமுத்ரா, துர்வாசர், மனு, சந்திரன், மன்மதன், குபேரன், அக்னி, சூர்யன், இந்திரன், ஸ்கந்தன், சிவன் ஆகியவர்கள். இவர்கள் சொல்லிய வித்தைகள் இதுவரை வந்த ஸ்லோகங்களில் (32 முதல்) ஆங்காங்கே மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கிறது.


இதுவரை 41 சுலோகங்கள் ஆனந்தலஹரீ – கைலாஸத்தில் இருந்து கிடைத்தவை.

இனிவரும் ஐம்பத்தொன்பது சுலோகங்கள் ஸௌந்தர்ய லஹரீ – ஸ்ரீ சங்கராசாரியார் அருளியது.


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏








Comments

Popular posts from this blog

ஸ்ரீ ருத்ரம்

தர்ம சாஸ்திரம்

அர்த்தமுள்ள ஸந்தியாவந்தனம்: