கைவல்யோபநிஷத்

#கைவல்யோபநிஷத் _________________________ ஸாந்தி பாடம் :- ஓம் ! ஸஹநாவவது । ஸஹ நௌ புநக்து । ஸஹ வீர்யம் கரவாவஹை தேஜஸ்விநாவதீதமஸ்து மா வித்விஷாவஹை ॥ ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி : ஓம் , குரு சிஷ்யன் ஆகிய எங்கள் இருவரையும் பிரம்மம் காப்பாற்றட்டும். சேர்த்து போஷிக்கட்டும். இருவரும் சேர்ந்து வீரியத்துடன் உழைப்போமாக. எங்கள் அத்யாயணம் ஒளி பொருந்தியதாக வேண்டும். நாங்கள் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.. ஓம் மூவுலகிலும் சாந்தி நிலவட்டும். இந்த கைவல்யோபநிஷத் கிருஷ்ண யஜுர் வேதத்தை சார்ந்தது. இதில் பிரம்ம வித்தை ஆஸ்வலாயனருக்கு பிரம்மாவால் உபதேசிக்கப்படுகிறது. ஶீ சங்கராச்சாரியார் பத்து உபநிஷதங்களுக்கு மட்டும் பாஷ்யம் எழுதியிருந்த போதிலும் வேறுசில உபநிஷதங்களை முக்கியமாக கையாள்கிறார். அவற்றில் ஒன்று கைவல்யோபநிஷத். கைவல்யம் என்பது "ஸ்வரூபப்ரதிஷ்டா " அல்லது தான் தானாக இருத்தல் என்று பொருள். "முக்திர் -ஹித்வா அன்யதா ரூபம் ஸ்வரூபேண வ்யவஸ்திதி " என்று ஶீமத் பாகவதம் கூறுகிறது. அந்த கைவல்...