ஸெளந்தர்யலஹரி 1---26

அழகின் ஆனந்த அலைகள்

________________________________

எந்த குழந்தைக்கும் தாய் எந்த ஸ்வரூபத்தில் இருந்தாலும் அழகுதான்.
அப்படியிருக்க அன்னைகளுக்கெல்லாம் தாயான ஜகஜ்ஜனனி அம்பிகையின் அழகும், ப்ரபாவமும்  நினைப்பதும், துதிப்பதும் சொல்லொனா  ஆனந்தம். 
இந்த ஸெளந்தர்யலஹரி எனும் க்ரந்தம் லிங்கபுராணத்தில்  மகாமேரு பரவதத்தில் விநாயகரால்  எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. மேரு கிரியில் எழுதியவர் புஷ்பதந்தர் என்றும், ஆனால் அதற்கு முன்பே கயிலாயத்தில் சிவாலய மதில் சுவர்களில் எழுதப்பட்டிருந்ததாக  ஒரு வரலாறு உண்டு.
ஆனால் இந்த ஸெளந்தர்யலஹரியை தமிழில் மொழிபெயர்த்த  வீரை கவிராஜ  பண்டிதர், மேரு கிரியில் இருந்ததை கெளடபாதர் கிரஹித்து பின்பு ஆதிசங்கரருக்கு அதை உபதேசம் செய்ததாக கூறுகிறார்.
மற்றும் சிலர் ஆதிசங்கரரே  கைலாய பர்வதத்திலிருந்து கொண்டுவந்தார் என்றும் அவருக்கு கிடைத்தது  ஆனந்தலஹரி என்னும் 41 ஸ்லொகங்கள்மட்டுமே  என்றும் மற்ற 59 ஸ்லோகங்களை தாமே எழுதி பூர்த்தி செய்தார் எனவும் கூறுவர்..
 இந்நூல் ஸாக்த ஆகமத்தில் சமயாசார தத்துவத்தை ப்ரகடனபடுத்துவதாக உள்ளது  இதற்கு  இதுவரை 36 வ்யாக்யானங்கள் காணப்பட்டாலும் ஶீ லக்ஷ்மிதாரர் எழுதிய ஸெளந்தர்யலஹரி பாஷ்யம் தான் சிறப்பாக கருதப்படுகிறது..
நமஸ்கரித்தல், ,அனுக்ரஹம் ,சித்தாந்தத்தை எடுத்துரைத்தல், பராக்ரம துதி,,பெருமைகளை புகழ்தல், ப்ரார்த்தனை செய்தல், என ஆறு வகை ஸ்தோத்திர லக்ஷணம் பொறுந்தியதால் ,இது தேவி ஸ்துதிகளில் தலைசிறந்தது.
இதில் முதல் 41 ஸ்லோகங்களில் ஶீ வித்தையின் தத்துவங்களையும் பாக்கி 59 ஸ்லோகங்கள் அழகை வர்ணிப்பதாகவும் உள்ளன. சாதாரணமாக புருஷ தெய்வங்களை பாதாதி  பேச வரணணையும் ஸ் த்ரீ தெய்வங்களுக்கு கேசாதி பாத வர்ணணையும் செய்வது தான் மறபு. அந்த வகையில் இதுவும் தேவியின் அழகை கேசத்திலிருந்து பாதம்வரை வர்ணணை அமைந்துள்ளது.
11 வது ஸ்லோகம் ஶீ சக்கரம் என்னும் ஶீ நகரத்தையும்,27 வது ஸ்லோகம்  சமயாசார  மானசிக பூஜையையும்,  32 வது ஸலோகம் ஶீ பஞ்சதசாக்ஷ்ரி மந்திரத்தையும், 33 ஸெளபாக்ய பஞ்சதசி  மந்திரத்தையும், 34 முதல் 41 வரை 6 ஆதாரசக்ரங்களில் அம்பிகையை  ஆராதிக்கும்  அந்தர்யாகத்தையும்  மற்ற ஸ்லோகங்களால் தேவியின் அழகையும், விளக்கியபின்  சூரியனுக்கே அக்னியை தீபமாக  காண்பித்ததுபோல் அவள் கொடுத்த வாக்கை அவளுக்கே  அர்ப்பனித்து. முடிக்கிறது.
தேவியை  நினைக்கவும்,ஆராதனை செய்யவும் புண்யம் செய்தவர்க்கே  இயலும் என்று ஆசார்யாள் முதல் ஸ்லோகத்திலேயே குறிப்பிடுகிறார்.
நாமும் அம்பிகையை நினைக்க ஏதோ சிறிது புண்யம் செய்திருக்கவேண்டும்.
அப்படிப்பட்ட தேவியின் அழகின் ஆனந்த அவைகளில் நாமும் தினமும் ஒரு ஸ்லோகத்தை பாராயணம் செய்வோம்.

ஜபோ ஜல்ப:சில்பம் ஸகலமபி முத்ராவிரசனா 
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசனத்யாஹுதி-விதி: I 
ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா 
சபர்யா-பர்யாயஸ்-தவ பவது யன்மே விலஸிதம் ii


ஆனந்த அலை- 1

______________________

சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
நசேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது-மபி
அதஸ்-த்வா-மாராத்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத-புண்ய:ப்ரபவதி [1]




शिवः शक्त्या युक्तो यदि भवति शक्तः प्रभवितुंन चेदेवं देवो न खलु कुशलः स्पन्दितुमपि ।अतस्त्वामाराध्यां हरिहरविरिञ्चादिभिरपिप्रणन्तुं स्तोतुं वा कथमकृतपुण्यः प्रभवति ॥ 


பராசக்தியின்  ஏற்றம்-

 மங்கள மூர்த்தியான மகாதேவன் பராசக்தியாகிய உன்னுடன்  கூடியவராக  இருந்தால் மட்டுமே ப்ரபஞ்சத்தை  ஆக்குவதற்கு திறமை உடையவர் ஆவார். அவ்வாறு கூடியில்லாவிட்டால் அசையக்கூட முடியாது அன்றோ? ஆகையால் விஷ்ணு பிரம்மா ருத்ரன் முதலியவர்களாலும் பூஜித்தற்குறிய உன்னை புண்ணியம் செய்யாதவன் வணங்குவதற்கோ துதிப்பதற்கோ  எங்கனம்   தகுதி உடையவன் ஆவான்.
ஸாக்ஷியாகிய இந்த சக்தி சங்கரனுக்கு மங்களத்தை செய்பவள் .இவளை விட்டு பிரிந்தால் சிவனும் சவம் போல ஆகிரான் என்பது ஸ்காந்தம்  உறைப்பது. இதையே அபிராமி பட்டர்

கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி 
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா 
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த 
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே.

என்று கூறினார்.


______________________________________


ஸெளந்தர்யலஹரி

                 #ஆனந்த அலை-2

தேவியின் பாத தூளி மகிமை:--

தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-பங்கேருஹ-பவம்
விரிஞ்சி: சஞ்சின்வன் விரசயதி லோகா-னவிகலம் !
வஹத்யேனம் சௌரி: கதமபி ஸஹஸ்ரேண சிரஸாம்
ஹர: ஸம்க்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூளன-விதிம் /2/



तनीयांसुं पांसुं तव चरण पङ्केरुह-भवंविरिञ्चिः सञ्चिन्वन् विरचयति लोका-नविकलम् ।वहत्येनं शौरिः कथमपि सहस्रेण शिरसांहरः सङ्क्षुद्-यैनं भजति भसितोद्धूल नविधिम्॥ 2 ॥


ப்ரம்மா உன்னுடைய திருவடித்  தாமரைகளிலுள்ள மிக நுட்பமான துளை சம்பாதித்து  உலகங்களை முட்டின்றி ஸ்ருஷ்டிக்கிறார் .ஆதிஷேஷன் தனது ஆயிரம் தலைகளால் இந்த ப்ரபஞ்சத்தின் வடிவான தேவியின் பாத தூளியை தாங்குகிறார்.  ஸாக்ஷாத்  பரமேஸ்வரனும் இந்த பாத தூளியை பொடியாக்கி  விபூதியாக  பூசிக்கொள்ளும் முறையை அனுஷ்டிக்கிறார்.
இந்த ஸ்லோகத்தை பாராயனம் செய்பவருக்கு ஸர்வ  லோக வச்யம் சித்திக்கும்.


______________________________________


ஸெளந்தர்யலஹரி
___________________________________

#ஆனந்த அலை-3
______________________

அவித்யானாம் அந்தஸ்திமிர- மிஹிர-த்வீப-நகரீ !
ஜடானாம் சைதன்ய-ஸ்தபக-மகரந்த ஸ்ருதிஜரீ !
தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜன்மஜலதௌ !
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய பவதி /3/


अविद्याना-मन्त-स्तिमिर-मिहिर द्वीपनगरीजडानां चैतन्य-स्तबक मकरन्द श्रुतिझरी ।दरिद्राणां चिन्तामणि गुणनिका जन्मजलधौनिमग्नानां दंष्ट्रा मुररिपु वराहस्य भवति॥ 3 ॥


தேவியின் பாத தூளி முக்தி அளிக்க வல்லது :--

உன்னுடைய பாத தூளி  அவித்தை  குடிகொண்ட  உள்ளத்தினர்க்கு  அகத்திருளை போக்கும் சூரியனின்  உதயத்தீவின்  நகரம் போலும், அவிவேகிகளுக்கு ஆத்ம ஞானமாகிய  கற்பகவிரக்ஷத்தின்  பூங்கொத்திலிருந்து  பரவி செல்லும் மகரந்தம் போலும் ,ஏழைகளுக்கு நினைத்ததை அளிக்கும் சிந்தாமணி குவியலாகவும், பிறவிக்கடலில் மூழ்கியவர்க்கு  ஆதி வராஹமாய் அவதரித்து பூமியை தூக்கிய முராரியின் கோரை பற்கள் போலும் விளங்குகின்றது.

சிந்தாமணி என்னும் ரத்தினம் நினைத்ததை எல்லாம் அளிக்கும். அமபாளின் (ஹ்ரீம்) மாயாபீஜத்திற்கு சிந்தாமணி பீஜம் என்று பெயர். அம்பாளின் பாத தூளி   சிந்தித்ததையெல்லாம் அருள வல்லது.
இதையே அபிராமி பட்டரும் ,

வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே:
தேவியை சிந்திப்பவர் எல்லா வளங்களையும், பரமானந்தத்தையும் பெருவர் என கூறுகிறார்.


__________________________________


ஸெளந்தர்யலஹரி
_______________________

#ஆனந்த அலை-4

**தேவியின் பாதகமலத்தின் நிகரற்ற  சக்தி**

த்வதன்ய: பாணிப்யாம்-அபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடித-வராபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வஞ்சாஸமதிகம்
சரண்யே லோகானாம் தவ கி சரணாவேவ நிபுணௌ //4//


त्वदन्यः पाणिभया-मभयवरदो दैवतगणः
त्वमेका नैवासि प्रकटित-वरभीत्यभिनया ।
भयात् त्रातुं दातुं फलमपि च वांछासमधिकं
शरण्ये लोकानां तव हि चरणावेव निपुणौ ॥ 4


அம்மா !  உலகிற்கு புகலிடமே உனக்கு வேறான தேவ கூட்டங்கள் கைகளால் அபயத்தையும் வரத்தையும் அளிப்பதாக காட்டுவார்கள். நீ ஒருத்தி மட்டும் அபிநயத்தால் வரத்தையும் அபயத்தையும் பிரகடனம் செய்பவளாக இருப்பது இல்லை. ஏனென்றால் பயத்திலிருந்து  காப்பாற்றவும் வேண்டியதுக்கு அதிகமாகவே பலனை அளிப்பதற்கும்கூட உன்னுடைய திருவடிகளே திறமை உடையவைகள்  அன்றோ?.

 அபிராமி பட்டரும்

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.!!

உன் பத்ம பாதங்களை தவிர வேறு ஒருவரையும் பணியேன்  என்று உறைக்கிரார் .
அம்பிகையின்  பாதத்தை  சரணடைவோம்.


_____________________________________

**ஸெளந்தர்யலஹரி**
_______________________________________

 #ஆனந்த அலை-5

தேவி பூஜையின்  மகிமை:-

ஹரிஸ்-த்வா-மாராத்த்ய ப்ரணத-ஜன சௌபாக்ய ஜனனீம்
புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப-மனயத்
ஸ்மரோபி த்வாம் நத்வா ரதி நயன-லேஹ்யேன வபுஷா
முனீனா-மப்யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம் //5// 


हरिस्त्वामारध्य प्रणत-जन-सौभाग्य-जननीं
पुरा नारी भूत्वा पुररिपुमपि क्षोभ मनयत् ।
स्मरो‌உपि त्वां नत्वा रतिनयन-लेह्येन वपुषा
मुनीनामप्यन्तः प्रभवति हि मोहाय महताम् ॥ 5 ॥


வணங்கும் அடியார்களுக்கு ஸகல ஸெளபாக்கியத்தையும் தோற்றுவிக்கும் உன்னை மகாவிஷ்ணு பூஜித்து  முன்ளொரு சமயம் பெண் உரு கொண்டு முப்புரம் எரித்த பரமசிவனையும்கூட ,மனம் சலிக்கும்படி (மோகம்) கவர்ந்தார். மன்மதனும் உன்னை வணங்கி ரதி தேவி கண் கொண்டு பருகும் அமிர்தம் போன்ற வடிவம் கொண்டு மகான்களான  முனிவர்கள்கூட அந்தரங்கத்தில் மதி மயக்கம் உண்டாகும் படி செய்ய சக்தி உள்ளவன்  ஆகிறான்.

ப்ரணதஜன ஸெளபாக்ய ஜனனீம்:- தேவியை ஆராதித்தவர்னளில்  தலைசிறந்தவர்களாக மகேஸ்வரன், மாதவன்,பிரம்மா ,மன்மதன் ஸ்கந்தன்  நந்திகேஸ்வரர் ,இந்திரன் ,மனு, சந்திரன், குபேரன், அகஸ்தியர், தூர்வாசர் என பன்னிரண்டு பேர்களை கூறப்படுகிறது.

இதை அபிராமி பட்டரும் ,

ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தங் கோன், 
போதிற் பிரமன் புராரி, முராரி பொதியமுனி, 
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல் 
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே.
என உறைக்கிறார்.

பரமசிவனால் எரிக்கப்பட்ட மன்மதன், தேவியின் கடாஷத்தால் மற்றவர்களுடைய கண்ணுக்குப் புலப்படாமல், தன் மனைவியான ரதியின் கண்களூக்கு மட்டும் புலப்படும்படியான ஸூக்ஷ்ம சரீரத்தை அடைந்ததாக காஞ்சீ மகாத்மீயம் கூறுகிறது. 


"ஹரநேத்ராக்னி ஸந்தக்த காம சஞ்சீவ நெளஷதி:"
" என்பது லலிதா ஸஹஸ்ரநாமத்தில் 84ஆவது நாமாவளி, அதாவது சிவபெருமானால் எரிக்கப்பட்ட மன்மதனை பிழைக்கவைத்த சஞ்சீவினி மருந்தே என்று அன்னையை விளிப்பதாகப் பாடல்..


______________________________________

ஸெளந்தர்யலஹரி
__________________________________________

#ஆனந்த அலை-6

 தேவியின் கடைக்கன் பார்வை:-

தனு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்ச விசிகா:
வஸந்த: ஸமந்தோ மலயமரு-தாயோகன-ரத:
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிசுதே காமபி க்ருபாம்
அபாங்கத்தே லப்த்வா ஜதித-மனங்கோ விஜயதே //6// 


धनुः पौष्पं मौर्वी मधुकरमयी पञ्च विशिखाः
वसन्तः सामन्तो मलयमरु-दायोधन-रथः ।
तथाप्येकः सर्वं हिमगिरिसुते कामपि कृपां
अपाङ्गात्ते लब्ध्वा जगदिद-मनङ्गो विजयते ॥ 6 ॥


பனிமலையரசனின் பெண்ணே ,மன்மதனுடைய  வில் மலர்களால் ஆனது, வில்லின் நாண் தேனீக்களினாள் ஆனது, பாணங்களும்  ஐந்து பூஷ்பங்கள்,  மந்திரி வசந்த ருது, போர் செய்ய ஏறி வரும் தேர் மலய மாருதம்  எனும் மலைகளில் வீசும் தென்றல் காற்று, அப்படி இருந்தும் உடல் இல்லாத மன்மதன் ஒருவனாகவே உன்னுடைய கடைக்கண் பாரவையால் 
ஏதோ ஒரு கிருபையை  அடைந்து இந்த உலகம் அனைத்தையும் ஜயிக்கிறான்.

இந்த ஸ்லோகத்தில் சொல்லும் வித்தை அனங்க  வித்யா என்று பெயர். அம்பிகையின் கருணைக்கு பாத்திரம் ஆனவன் ஒரு சாதனமும் இல்லாவிட்டாலும் உலகையெல்லாம் வெல்லக்கூடியவன் ஆகிறான் என்பதற்கு மன்மதனே  உதாரணம்.

தேவியின் கடைக்கண் பார்வையால் எல்லாவற்றையும் அடையலாம் என்பதை அபிராமி படடரும்-

தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

என்று துதிக்கிறார்


_______________________________________


ஸெளந்தர்யலஹரி
___________________________________________

#ஆனந்த அலை-7

தேவியின் ஸ்வரூபம்:-


க்வணத் காஞ்சி தாமா கரிகலகும் ஸ்தன நதாப
ரீக்ஷீணா மத்த்யே பரிணத ஶரச்சந்த்ர வனாதனுர் பாணான் பாஶம் ஸ்ருணி மபி ததானா கரதலை:புரஸ்தா தாஸ்தாம் ந: புரமதிது ராஹோ புருஷிகா                        

क्वणत्काञ्ची-दामा करि कलभ कुम्भ-स्तननता
परिक्षीणा मध्ये परिणत शरच्चन्द्र-वदना ।
धनुर्बाणान् पाशं सृ॒णिमपि दधाना करतलैः
पुरस्ता दास्तां नः पुरमथितु राहो-पुरुषिका ॥ 7 ॥


சலங்கைகள் கிலுகிலுக்கின்ற தங்க ஒட்டியாணம் பூண்டவளும், யானையின் மஸ்தகம் போன்ற நகில்களால்  சற்று வணங்கிய (குனிந்த) வடிவுடையவளும் இடையில் மிக மெலிந்தவளும் , சரத் காலத்து பூர்ணசந்திரன் போன்ற முகம் படைத்தவளும்,கைகளால் கரம்புவில் ,புஷ்ப பாணம்,பாசம், அங்குசம் ஆகியவற்றை தரிப்பவளும் முப்புரம் எரித்த பரம சிவனுடைய ஆச்சர்யமான அகம்பாவ  வடிவினளுமான பராசக்தி எங்களுக்கு எதிரில் எழுந்தருளட்டும்

 லலிதா ஸஹஸ்ரநாமம்,

"ராகஸ்வரூப பாசாட்யா
க்ரோதாகாராங்குசோஜ்ஜ்வலா ||
மநோரூபேக்ஷு கோதண்டா
பஞ்சதந்மாத்ரஸாயகா !! '

என்று தேவியின் ஆயுதங்களை குறிக்கிறது.

அபிராமி பட்டரும்

"தாமம் கடம்பு; படைபஞ்சபாணம்; தனுக்கரும்பு;
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது; எமக்கென்று வைத்த
சேமம் திருவடி; செங்கைகள் நான்கு; ஒளி செம்மை; அம்மை
நாமம் திரிபுரை; ஒன்றோடு இரண்டு நயனங்களே. என்று தேவியின் ஸ்வரூபத்தை வர்ணிக்கிறார் ."

அம்பாளுக்கும் மன்மதனுக்கும் ஆயுதங் களாக கரும்பு வில்லும் புஷ்ப பாணமும் இருந்தாலும் அம்பிகை அக்ஞானத்தில் மூழ்கி கிடக்கும் அடியார்களின் மனத்தையும் காமத்தையும் அடக்குவதற்காகவே தன் கைகளில் ஏந்தியுள்ளாள்.

______________________________,_______

ஸெளந்தர்யலஹரி
__________________________________________

#ஆனந்த அலை-8
-----------------------------

தேவியின் சிந்தாமணி க்ருஹம்:-

ஸுதா ஸிந்தோர் மத்த்யே ஸுரவிடபி-வாடீ-பரிவ்ருதே
மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமனி க்ருஹே I
சிவாகாரே மஞ்சே பரமசிவ பர்யங்க நிலயாம்
பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சிதானந்த லஹரீம் II


सुधासिन्धोर्मध्ये सुरविट-पिवाटी-परिवृते
मणिद्वीपे नीपो-पवनवति चिन्तामणि गृहे ।
शिवकारे मञ्चे परमशिव-पर्यङ्क निलयाम्
भजन्ति त्वां धन्याः कतिचन चिदानन्द-लहरीम् ॥ 8 ॥

அமிர்த கடலின் நடுவில்  கல்பகவ்ருக்ஷத் தோப்புகளால்  சூழப்பட்ட ரத்னத்தீவில், கதம்ப மரங்கள் நிறைந்த உத்தியான  வனத்துடன்  கூடிய சிந்தாமணி க்ருஹத்தில் பரம மங்கள வடிவமான சிம்மாசனத்தில் பரமசிவனுடைய  மடியில் வீற்றிருக்கும் ஞானானந்தக்கடலின் அலை போன்ற உன்னை புண்யவான்களான சிலரே வழிபடுகிறார்கள்.

லலிதா ஸஹஸ்ரநாமம்:-

சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா
பஞ்ச ப்ரஹ்மாஸநஸ்திதா ||
மஹாபத்மாடவீஸம்ஸ்தா கதம்பவநவாஸிநீ |
ஸுதாஸாகரமத்யஸ்தா காமாக்ஷீ காமதாயிநீ ||

இங்கே தேவியின் வாசஸ்தலமான சிந்தாமணி க்ருஹம் வர்ணிக்கப்படுகிறது. அது சகல பிரம்மான்டங்களுக்கு அப்பால் அமிர்த ஸாகரத்தில் மத்தியில் ரத்தினத்தீவில் உள்ளது. அதன் வெளிப்ரகாரங்கள் இருபத்தைந்து. அவை வரிசையாக இரும்பு, எஃகு, செம்பு, வெள்ளீயம் ,பித்தளை, பஞ்சலோகம், வெள்ளி,தங்கம்,புஷ்பராகம்,பத்மராகம், கோமேதகம், வஜ்ரம், வைடூர்யம், இந்திரநீலம்,  முத்து, மரகதம்,பவழம், நவரத்னம், நானாரத்னம் ,இவற்றாலும்  மனம் புத்தி அஹங்காரம்  ஆகிய தத்துவங்களாலும்  சூரியன் சந்திரன், மன்மதன் ஆகியோரின் தேஜஸ்ஸாலும் அமைந்தவை. எட்டாவது ப்ரகாரத்தில் உள்ளது கதம்பவனம்.அங்கே தேவியின் மந்த்ரினியான ஶீ ராஜமாதங்கி (சியாமளா) தேவி வசிப்பாள். பதினைந்தாவது ப்ரகாரத்தில் அஷ்டதிக்பாலர்கள் வசிப்பர். பதினாறாவது ப்ரகாரத்தில் தேவியின் சேனாநாயகியான தண்டினி  எனப்படும் வாராஹியின் இருப்பிடம்.இங்கு சியாமளா தேவிக்கும் ஒரு இடம் உண்டு. பதினேழாவதில் யோகினிகள்  வசிப்பர். பதினெட்டில் மகாவிஷ்ணு,  பத்தொன்பதில் ஈசானன் ,  இருபதில்  தாரா தேவி, இருபத்தொன்றில் வாருணி இருபத்தி இரண்டாவது அஹங்கார  கோட்டையில் குைுகுல்லா தேவி, இருபத்தி மூன்றாவது சூரிய ப்ரகாரத்தில் மார்தான்ட பைரவர், இருபத்துநாலாவதில்  சந்திரன், இருபத்தைந்தாவது ஸ்ருங்கார வனத்தில் மன்மதன். இதற்குள் மஹாபத்ம வனமும்  கல்பவிருக்ஷ தோப்பு,  அதன் நடுவில் சிந்தாமணி க்ருஹம். அதன் அக்னி மூலையில் சிதக்னிகுண்டம் .கிழக்கு துவாரம் இருபுரமும் மந்த்ரினி தண்டினி தேவிகளின்  க்ருஹங்களும் உள்ளன.நான்கு துவாரங்களிலும் சதுராம்னாய தேவதைகள் காவல் இருப்பர். இதனுள் நவாவரணங்களுடன்  ஶீ  சக்ரம்  , ஶீ சக்ரத்தின்  நடுவே ஸர்வானந்தமயம் என்னும் பிந்து பீடத்தில்,  பிரம்மா ,விஷ்ணு, ருத்ரன், ஈசானன் கால்களாகவும் ஸதாசிவனுடைய மடியின் மேல் பலகையாக  கொண்ட பஞ்சபிரம்மாசளத்தில், ஸதாசிவனுடைய மடியில் ஶீ லலிதா மஹாதிரிபுரஸுந்தரி எழுந்தருளி இருப்பாள்.

.சிந்தா என்பது எண்ணம் அல்லது இச்சையை குறிக்கும் சொல். எண்ணமே ரத்தினமாக கட்டப்பட்ட வீட்டில் வசிப்பவள். எண்ணங்களுக்குள்ளும்
அபிலாஷைகளுக்குள்ளும் வசிப்பவள் என்றால் அவள் சர்வவியாபியாக இருக்க வேண்டும். தோற்றத்தின் அனைத்து அம்சங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறாள். எண்ணங்களுள் அவள் வசிப்பிடம் இருந்தால் அவள் வசிக்கும் வீடு இச்சைகளை பூர்த்தி செய்யும் பேரருளாகவும் பெருவரமாகவும் விளங்கும்



__________________________________

ஸெளந்தர்யலஹரி
______________________________________

 #ஆனந்த அலை-9
-------------------------------

மஹிம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டானே ஹ்ருதி மருத-மாகாச-முபரி I
மனோபி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே" II


महीं मूलाधारे कमपि मणिपूरे हुतवहं
स्थितं स्वधिष्टाने हृदि मरुत-माकाश-मुपरि ।
मनो‌உपि भ्रूमध्ये सकलमपि भित्वा कुलपथं
सहस्रारे पद्मे स हरहसि पत्या विहरसे ॥ 9 ॥


மூலாதாரத்தில் பிருதிவி தத்துவத்தையும், மணிபூரத்தில் ஜலதத்துவத்தையும், ஸ்வாதிஷ்டானத்தில் அக்னி தத்துவத்தையும், ஹ்ருதய ஸ்தானத்திலுள்ள அநாஹதத்தில் வாயு தத்துவத்தையும் அதற்குமேல்  விசுக்தியில் ஆகாச தத்துவத்தையும் புருவ மத்தியில் ஆக்ஞா  சக்கரத்தில் மனஸ்  தத்துவத்தையும் ஊடுருவி சென்று ஸஹஸ்ராரத்தில் ஆயிரம் இதழ் கொண்ட கமலத்தில் ரஹஸ்யமான இடத்தில் உனது பதியான  ஸதாசிவனுடன்  கூடி மகிழ்கிறாய்.
 ஆறு ஆதார சக்கரங்களையும் கடந்து சென்று ஸஹஸ்ராரத்தில் சமாதி எய்துதல் சட்சக்ரவேதனம் அல்லது அந்தர்யாகம் எனப்படும்.
முலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் அக்னி கண்டம் அதற்குமேல்  ப்ரம்மக்ரந்தி எனும் முடிச்சு உள்ளது. மணிபூரகமும் அநாஹதமும் சேர்ந்து சூர்யகண்டம். அதற்குமேல்  விஷ்ணுக்ரந்தி எனும் முடிச்சு . விசுக்தியும் ஆக்ஞையும் சேர்ந்து ஸோமகண்டம் அதற்குமேல் ருத்ரக்ரந்தி என்னும் முடிச்சு உள்ளது. க்ரந்தி  என்பது நாடிகளின்  முடிச்சையும்  உள்ளில்  பாயும் பூர்வாசிரம எண்ணங்களையும் அதனால் வரும் சிக்கல்களையும் குறிக்கும். ஒவ்வொரு யோகநிலைக்கு மேல் சென்று கீழே இரங்காமல் இருக்கவே இந்த க்ரந்தி  என்ற முடிச்சு இருப்பதாக வரிவஸ்யா  ரஹஸ்யம் கூறுகிறது.

லலிதா ஸஹஸ்ரநாமம்:-

மூலாதாரைக நிலயா ப்ரஹ்மக்ரந்தி விபேதிநீ !
மணிபூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி விபேதிநீ !
ஆஜ்ஞா சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி விபேதிநீ |
ஸஹஸ்ராராம்புஜாரூடா
ஸுதாஸாராபி வர்ஷிணீ !


என்று கூறுவதை பார்கலாம்..
இந்த ஸ்லோகம் அந்தர்யாகம் எனப்படும் தேவி மானச பூஜயை கூறுகிறது.

அந்தர்யாகம்:-
மூலாதாரத்தில் எழுந்த பராசக்தி ஸ்வாதிஷ்டானத்தைக் கடந்ததும்  மணிபூரகத்தில் ப்ரத்யக்ஷமாகிறாள் அங்கே பாத்யம் அர்க்யம் முதல் பூஷனம் வரை எல்லா உபசாரங்களை செய்து அநாஹதத்திற்கு அழைத்து வந்து தூபம் முதல் தாம்பூலம் வரை உபசாரங்கள்  செய்து, விசுக்திக்கு அழைத்து வந்து அங்கே தேவியை சிம்மாசனத்தில் இருக்க பண்ணி சந்திரகலாரூபமான ஸ்படிக  மணிகளால் பூஜித்து, ஆக்ஞா  சக்கரத்திற்கு அழைத்து நீராஜனம்  செய்து ஸஹஸ்ராரத்தின் நடுவில் இருக்கும் சந்திர மண்டலத்தில் சதாசிவனுக்கு அருகில் சேர்த்து அவர்களை சுற்றி படுதாவை  போட்டு(மறைத்து) தான் ஸமீபத்தில்  இருந்துகொண்டு, அம்பாள் மூலாதாரத்துக்கு திரும்பும் சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும். இதுவே அந்தர்யாகம் என்னும் ஸமயாசார பூஜை.
மகான்களும் யோகிகளும்  மிகவும் ப்ரயத்தனப்பட்டு குருமுகமாக அறிந்து சாதனை செய்யும் குண்டலினி யோகம், இந்த அந்தர்யாகம் எனும்  சகுன ப்ரம்மமான சித்சக்தியின் மானச பூஜையிலேயே எளிதில் சித்திக்கிறது. அதனாலேயே சித்சக்தியான அம்பாளின் உபாஸனை ஶீ வித்தை என அழைக்கப் படுகிறது.

ராமக்ருஷ்ண பரமஹம்ஸரும் " அமீ யந்த்ர:, துமீ  யந்த்ரி",  அதாவது நான் யந்திரம்  நீ என்னில் ஊடுருவும் சித்சக்தி என்கிறார்.

_____________________________________


ஸெளந்தர்யலஹரி

#ஆனந்த அலை--10

ஸுதாதாராஸரைச்-சரணயுகலாந்தர்-விகலிதை:
ப்ரபஞ்சம் ஸ்ஞ்சஎதீ புனரபி ரஸாம்னாய-மஹஸ: I
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப-மத்தயுஷ்ட-வலயம்
ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி



सुधाधारासारै-श्चरणयुगलान्त-र्विगलितैः
प्रपञ्चं सिन्ञ्न्ती पुनरपि रसाम्नाय-महसः।
अवाप्य स्वां भूमिं भुजगनिभ-मध्युष्ट-वलयं
स्वमात्मानं कृत्वा स्वपिषि कुलकुण्डे कुहरिणि ॥ 10 ॥

திருவடிகள் இரண்டின் இடையிலிருந்து  பெருகும் அமிர்த தாரையின் ப்ரவாகத்தால் ஐம்பூதங்களான உடலிலுள்ள நாடிகள் எல்லாவற்றையும் றனைப்பவளாய் அமிர்த கிரனங்களை பொழியும் சந்திர மண்டலத்தில் இருந்து உனது இயற்கையான இருப்பிடமான மூலாதாரத்தை மறுபடியும் அடைந்து பாம்பைபோல குண்டல வடிவாக உன்னுடைய உருவத்தை செய்துகொண்டு சிறு துவாரம் உடைய மூலாதார குண்டத்தில்  உறங்குகிறாய்.

"குலபதம்" என்பது ஸுஷும்னா மார்க்கம் எனும் ராஜவீதியாக  பொருள் படுகிறது. அங்கு சஞ்சரிக்கும் குண்டலினி சக்திக்கு "குலாங்கனா"  என்று பெயர்.
லலிதா ஸஹஸ்ரநாமம்--குலாங்கநா குலாந்தஸ்தா கௌலிநீ குலயோகிநீ |
அகுலா ஸமயாந்தஸ்தா ஸமயாசார தத்பரா ||
என்று சொல்வதை பார்க்கலாம்

"குலகுண்டே குஹரினி"---  'கு' என்பது பிருதிவி தத்துவம். அது மூலாதாரத்தில் லயம் அடைவதால் மூலாதார சக்கரம் குலகுண்டம் எனப்படும்.அதன் நடுவில் தாமரையில்  இருப்பதுபோல ஒரு கிழங்கு இருப்பதாகவும் அதன் நடுவில் ஸூக்ஷ்மமாக துவாரம் இருப்பதாகவும் அதில் தலையை வைத்துக்கொண்டு மூன்றரை வட்ட வடிவில் குணடலம் இட்டுக்கொண்டு தாமரை நூல்போல் மெல்லிய பிழம்பு  வடிவில் குண்டலினி சக்தி உறங்குவதாக கூறப்படுகிறது.
எல்லாவற்றிற்கும் ஆதாரமாக பூமி தத்துவம் இருப்பதால் அடிப்படையான முதல் சக்கரம் மூலாதாரம் என பெயர் பெற்றது. அவ்வாதாரம் இல்லையென்றால் தேகம்  நிலையில்லாமல் கீழே அல்லது மேலே செல்லும்.
9 வது ஸ்லோகம் குண்டலினி சக்தியின் ஆரோகனம் சொல்லப்பட்டது. இங்கெ  அவரோகனம் சொல்லப்படுகிறது. ஸஹஸ்ராரத்தில் பரமசிவனுடன் கூடியிருந்து ஆனந்த வெள்ளத்தை  பெருக்கி அதனால் உடலில் உள்ள எல்லா நாடிகளையும் நனைத்துவிட்டு மீண்டும் மூலாதாரத்திற்கு தேவி வருகிறாள்.  லலிதா ஸஹஸ்ரநாமம் இவளை குலாம்ருதைகரசிகா" என்று சொல்வதை காணலாம். தேவியின் சரணாரவிந்தத்திலுருந்து  பெருகும் அமிர்த தாரை பகதர்களாகிய நம்மை சிறந்த புத்தியுள்ளவர்களாக்கி போஷிக்கட்டும் என்று தைத்திரிய  அருணம்  உறைக்கின்றது.

சித்  என்னும் குண்டலினி சக்தியை சத் என்னும் சிவத்துடன் ஸஹஸ்ராரத்தில் சேர்க்கும் சாதகன்  ஆனந்தத்தை  அனுபவித்து சச்சிதானந்தன் ஆகிறான்

இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால்  சரீர சுத்தியும் , வீரிய சுத்தியும் ஏற்படும்



_______________________________

ஆனந்த அலை- 11


ஸ்ரீசக்கர வர்ணனை

சதுர்ப்பி: ஸ்ரீகண்டை: சிவ யுவதிபி; பஞ்சபிரபி
ப்ரபின்னாபி: சம்போர்-நவபிரபி மூலப்ரக்ருதிபி: I
சதுச்சத்வாரிம்சத்-வஸுதல-கலாச்ர-த்ரிவலய
த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா: பரிணதா: II

चतुर्भिः श्रीकण्ठैः शिवयुवतिभिः पञ्चभिपि
प्रभिन्नाभिः शम्भोर्नवभिरपि मूलप्रकृतिभिः ।
चतुश्चत्वारिंशद्-वसुदल-कलाश्च्-त्रिवलय-
त्रिरेखभिः सार्धं तव शरणकोणाः परिणताः ॥ 11 

நான்கு சிவ சக்கரங்களாலும் சிவ சக்ரங்களிலிருந்து  வேறான ஐந்து சக்தி சக்கரங்களாலும் ஒன்பதாக  உள்ளதும் பிரபஞ்சத்தின் மூலகாரணமான தத்துவங்கள் கூடியதுமான உன்னுடைய இருப்பிடமாகிய ஶீ சக்ரத்தின் கோணங்கள் , எட்டு தளம், பதினாறு தளம் , மூன்று வட்டங்கள் ,மூன்று கோடுகள் ஆகியவற்றுடன் கூடி பரிணமிக்கும் நாற்பத்து நான்காக  உள்ளன.!!

பராசக்தியின் யந்திர  ரூபம் ஶீ சக்கரம். அது இங்கே வர்ணிக்கப்படுகிறது.
ஶீ கண்டை: - ஶீ என்பதற்கு கொடுமையான விஷம் என்று ஒரு பொருள் உண்டு.கழுத்தில் விஷத்தை தாங்கியதால்  ஶீ கண்டன் என சிவபெருமான் பெயர் பெற்றார்.
சிவயுவதிபி: - என்பது சிவ பத்னியான அம்பாளையும் அவளுடைய ஐந்து கோணங்களையும் குறிக்கும்.
மூலப்ரகிருதிபி:-- இந்த ஒன்பது சக்கரங்களும் அண்டமாகிய உலகிற்கும் பிண்டமாகிய உடலுக்கும் மூலகாரணங்களான தத்துவங்களை குறிப்பவையாதலால் அவை மூலப்ரக்ருதிகள் என்றும் யோனிகள்  என்றும் கூறப்படுகின்றன. உடலில் உள்ள மூலபொருள்களில்  மஜ்ஜை,  சுக்கிலம்,பிராணன்,ஜீவன் என்ற நான்கும் சிவாம்சம்.  தோல் , ரத்தம், மாம்சம், மூளை, எலும்பு என்ற ஐந்தும் சக்தி அம்சம்.  மூல காரணங்களில் ப்ருதிவி  , அப்பு, தேயு, வாயு , ஆகாசம் என்ற ஐந்தும் சக்தி அம்சம். மாயை, சுத்த வித்தை, மகேஸ்வரன், சதாசிவன்  என்ற நான்கும் சிவாம்சம்.

44 நான்கு கோணங்கள்:---  14+10+10+8+1 ஆக 43 கோணங்கள். சிவசக்கரங்களை  தன்னுள் அடக்கிய பிந்து 44 வது கோணமானது.
வசுதல:- வசுக்கள்  எட்டு பேர் ஆதலால்  எட்டு தளங்களை குறிக்கும்.

கலாச்ர:-   கலைகள் 16 . அதனால் 16 தளங்களை குறிக்கும்.
லலிதா ஸஹஸ்ரநாமம் "மஹா யந்த்ரா". ,  என்று குறிப்பிடுவது இந்த ஶீ சக்ரத்தைத்தான்.

முக்கோணம், எட்டு கோணம்,இரண்டு பத்து கோணங்கள், பதினான்கு கோணம் ஆகிய ஐந்தும் சக்தி கோணங்கள். பிந்து, எட்டிதழ்  கமலம், பதனாறிதழ் கமலம், நாற்கோணம் , ஆகிய நான்கும் சிவ கோணங்கள்  என்பது  லலிதா  திரிசதி  வ்யாக்யானம்.

வரிவஸ்யா  ரஹஸ்யம்  இந்த ஶீ சக்கரத்தை இரண்டு வகையாக சொல்கிறது.

ஸ்ருஷ்டி சக்கரம்:  ஸமயாசார தத்துவப்படி சக்தி சக்கரம் ஐந்தும் மேல்நோக்கியும் சிவ சக்கரங்கள் நான்கும் கீழ் நோக்கியும்  அதாவது நடுவில் உள்ள த்ரி கோணம் மேல் நோக்கி இருப்பது.

ஸம்ஹார  சக்கரம்:--
சக்தி சக்கரங்கள் கீழ் நோக்கியும் சிவ சக்கரம் மேல் நோக்கியும் இருப்பது அதாவது நடு முக்கோணம் கீழ் நோக்கி இருப்பது.


ஸ்ரீசக்ரத்தில் ஒன்பது சுற்றுகள் அதாவது ஆவரணங்கள் உள்ளன.

இவை ஒவ்வொன்றிலும் தேவியின் பரிவார தேவதைகள் வசிக்கிறார்கள்.

இந்த ஒன்பது ஆவரணத்திற்கும் பூஜை செய்வதையே நவாவரண பூஜை' என்கிறோம்.

  மந்திரங்களில் 'தேவி கட்க மாலா' ஸ்துதியை,முறைப்படி கற்று, பாராயணம் செய்வது, நவாவரணபூஜைக்கு இணையாகச் சொல்லப்படுகிறது.

முதல் ஆவரணம்:

இது 'பூபுரம்' எனப்படுகிறது.
மூன்று சதுரங்கள் கொண்டது.நம் தேகம் ஸ்ரீசக்ரமாகப் பாவிக்கப்படும்போது, முதல் ஆவரணம்,
 நம் ஜீவாத்மாவின் ஸ்தூல சரீரத்தையும், இந்திரியங்கள், மனம் இவற்றால் உணரப்படும் விஷயங்களையும் குறிக்கும்.

 இதில்,முதலாவது ரேகையில் அஷ்டமாசித்திகளும்மத்திம ரேகையில் ப்ராஹ்மி உள்ளிட்ட அஷ்டமாத்ருகா தேவியரும்,கடைசி ரேகையில்,ப்ரகடயோகினியரும் வசிக்கின்றனர்.
இது  த்ரைலோக்ய மோகனச் சக்ரம்' எனப்படுகிறது.

இரண்டாம் ஆவரணம்:

பதினாறிதழ் கமலத்தைக் கொண்ட‌ இது 'ஸர்வாசாபரிபூரகச் சக்ரம்' எனப்படுகிறது.
குப்த யோகினிகள் என்ற பெயர் கொண்ட தேவதைகள் இங்கே வசிக்கின்றனர்.
ஜீவாத்மாவின், ஸ்வப்னாவஸ்தையையும், சூட்சும சரீரத்தையும் அதில் அடையப்படும் அனுபவத்தையும் குறிக்கிறது.

மூன்றாவது ஆவரணம்:

இதன் வடிவம் எட்டிதழ் கமலம்.
இது 'ஸர்வஸம்க்ஷோபணச் சக்ரம்' எனப்படுகிறது.
குப்ததர யோகினிகள் இதில் வசிக்கும் தேவதைகளாவர்.

நான்காவது ஆவரணம்:

 இது 14 முக்கோணங்களை உடையது.
 இது 'ஸர்வ சௌபாக்கியதாயகச் சக்ரம்' எனப்படுகிறது.
இதில் ஸம்ப்ரதாய யோகினிகள் வசிக்கின்றனர்.

ஐந்தாவதுஆவரணம்:

இது 10 முக்கோணங்களை உடையது.
 இதன் பெயர் 'ஸர்வார்த்தஸாதகச் சக்ரம்'.
இதில் குலோத்தீர்ண யோகினியர் வாசம் செய்கின்றனர்.

ஆறாவது ஆவரணம்:

இதுவும் 10 முக்கோணங்களை உடையது.
 இதன் பெயர், 'ஸர்வ ரக்ஷாகர சக்ரம்' என்று பெயர்.
நிகர்ப்ப யோகினிகள் இதில் வாசம் செய்கின்றனர்.

ஏழாவது ஆவரணம்:
.
இது எட்டுக் கோணங்களை உடையது.
 இது 'ஸர்வ ரோகஹரச் சக்ரம்' எனப்படுகிறது.
ரஹஸ்ய யோகினிகள் இதில் வசிக்கின்றனர்.

எட்டாவது ஆவரணம்:

இது முக்கோண வடிவானது.
 இதற்கு, 'ஸர்வ ஸித்திப்ரதசக்ரம்' என்பது பெயர்.
ஜீவப்ரஹ்ம ஐக்கியமே ஸர்வசித்தி என்று குறிப்பிடப்படுகிறது.
இதில் அதிரஹஸ்ய யோகினிகள் வசிக்கின்றனர்.

ஒன்பதாவது ஆவரணம்:

இது 'ஸர்வானந்தமயச் சக்ரம்' ஆகும்.
 இது பிந்து வடிவானது.
இதில் சிவனும் சக்தியும் ஐக்கியமாய்  வீற்றிருந்து அருளுகின்றனர்.

சம தளமாக, கிடைமட்டத்தோடு இருக்கும் ஸ்ரீசக்ரத்திற்கு, 'பூப்ரஸ்தாரம்' என்று பெயர்.

காஞ்சி காமாட்சி அம்மன் சன்னதியில், உள்ள #ஸ்ரீசக்ரம்,' பூப்ரஸ்தாரம்' ஆகும்


இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால்  ஸத்ஸந்தானமும் ஜன்ம சாபல்யமும் சித்திக்கும்.

_________________________

ஆனந்த அலை:-12

உவமையற்ற ஸெளந்தர்யம்:

த்வதீயம் ஸௌந்தர்யம் துஹினகிரிகன்யே துலயிதும்
கவீந்த்ரா: கல்பந்தே கதமபி விரிஞ்ச-ப்ரப்ருதய: I
யதாலோகௌத்ஸுக்யா-தமரலலனா யாந்தி மனஸா
தபோபிர் துஷ்ப்ராபாமபி கிரிஷ-ஸாயுஜ்ய-பதவீம்!!


त्वदीयं सौन्दर्यं तुहिनगिरिकन्ये तुलयितुं
कवीन्द्राः कल्पन्ते कथमपि विरिञ्चि-प्रभृतयः ।
यदालोकौत्सुक्या-दमरललना यान्ति मनसा
तपोभिर्दुष्प्रापामपि गिरिश-सायुज्य-पदवीम् ॥ 12 ॥

பனி மலையரசன் பெண்ணே கவி ஸ்ரேஷ்டர்களான  சரஸ்வதியின் வல்லபரான ப்ரம்மா போன்றவர்கள்கூட  உன்னுடைய அழகுக்கு  உவமை கூறுவதற்கு  எப்படி எப்படியோ கற்பனை செய்து பாற்கிறார்கள்.  ஆனால் அவர்களால் முடியவில்லை. அந்த அழகை அனுபவிக்க ஆசை கொண்டதால் அழகிற் சிறந்த தேவஸ்த்ரீகளூம் பரமசிவனின்  கண்ணைக் கொண்டு அதை கான விரும்பி  தவ முயற்சிகளால் அது அடைவதற்கு அரிதாயினும் பரமசிவ  சாயுஜ்ய பதவியை மானசீகமாக அடைகிறார்கள்.

பரமசிவனுடைய  கண்ணல்லாது வேறு கண்களால் பரதேவதையின்  அழகை முழுவதும் அனுபவிக்க இயலாது ஆகையால்  சிவ சாயுஜ்யத்தின் பெருமை இங்கு பறைசாற்றப்படுகிறது.

லலிதா ஸஹஸ்ரநாமம் நாமாவளி 6 லிருந்து 51 வரை அம்பாளின் அழகை புகழ்கிறது..
மஹாலாவண்ய சேவதி: --பேரழகின்  பொக்கிஷமாக திகழ்பவள்.

அபிராமி பட்டர் அம்பாளின் அழகை

அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?

அபிராமி அன்னை அதிசயமான அழகுடையவள்! அவள் தாமரை போன்ற மலர்களெல்லாம் துதிக்கக் கூடிய வெற்றி பொருந்திய அழகிய முகத்தையுடையவள்; கொடி போன்றவள்; அவள் கணவன் முன்பு ஒருநாள் மன்மதனின் வெற்றிகளையெல்லாம் தோல்வியாக நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். அப்படிப்பட்டவரின் மனத்தையும் குழையச் செய்து, அவருடைய இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்டாள், வெற்றியுடைய தேவி என்று  வெகுவாக புகழ்கிறார்.
காளிதாச மகாகவி தன்னுடைய "சியாமளா தண்டகத்தில்"  மரகத ஸ்யாமா, மாஹேந்த்ர நீலத்யுதி  கோமளாங்கீம் என்றெல்லாம் அம்பாளின் அழகை வர்ணிக்கிறார்.

அன்னையை  எந்த ஸ்வரூபத்தில் கண்டாலும் குழந்தைகளாகிய நமக்கு அழகுதானே.!!

இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால் ஊமையும்  பேசுவான், சிவ சாயுஜ்யம் கிட்டும்.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

_________________________________

ஸெளந்தர்யலஹரி

#ஆனந்த அலை:- 13

தேவியின் கடைக்கண்ணின் கிருபை :-


நரம் வர்ஷீயாம்ஸம் நயனவிரஸம் நர்மஸு ஜடம்
தவாபாங்காலோகே பதித-மனுதாவந்தி சதச:
கலத்வேணீபந்தா: குசகலச-விஸ்ரஸ்த-ஸிசயா
ஹடாத்த்ருட்யத்-காஞ்ச்யோ விகலித-துகூலா யுவதய:



नरं वर्षीयांसं नयनविरसं नर्मसु जडं
तवापाङ्गालोके पतित-मनुधावन्ति शतशः ।
गलद्वेणीबन्धाः कुचकलश-विस्त्रिस्त-सिचया
हटात् त्रुट्यत्काञ्यो विगलित-दुकूला युवतयः ॥ 13 ॥



தாயே ! ஒருவன் எவ்வளவு வயதானவனாக இருந்தாலும் , அழகில்லாமல் உடல் பலம்  அற்றவனாக இருந்தாலும் , காமரச சல்லாபம் தெரியாதவனாக இருந்தாலும் , உன் பார்வை அவன் மீது பட்டால், இளவயது மங்கையரும் கூட ,கூந்தல் அவிழ , மேலாடை நழுவ , இடையினில் ஒட்டியாணம் தெறிக்க, தன்னை மறந்துஅவன் மீது   மோஹம் கொண்டு , அவனை மன்மதன்  என்று எண்ணி அவனைத்தொடர்வார்கள் .

அம்பாளின் கடாக்ஷம் எவனிடத்தில் விழுந்தாலும் ,அவன் காமேஸ்வரனுடைய அம்சம் உடையவனாகி  விடுவதால் ஸ்த்ரீகளாக வர்ணிக்கப்படும்  சக்தியெல்லாம் அவனை தாமே வந்தடைகின்றன என்பதை இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது என்பதையும்  சாதாரண ஸ்த்ரீகளும் இவனுக்கு காம வசம் ஆகிறார்கள்  என்று வெளிப்படையாக   சொல்லர்த்தம் இதில் அடங்கியிருந்தாலும் உண்மையான நோக்கம் அதுவல்ல  என்பதை உணரவேண்டும்.

எங்கும் நிறம்பிய நிலை குலையாத ஸமுத்ரத்தை நதிகள் அடைந்து அமைதி அடைகின்றதோ  அதுபோல ஆசைகளெல்லாம் அவனை அடைகின்றதால் அவன் அமைதியை எய்துகிறான். ஆசைகளை  தேடி தொடர்பவன்  அமைதியை எய்துவதில்லை என்று கீதையின் இரண்டாவது அத்யாயம் சொல்வதை பார்க்கலாம்.
சகல விஷயங்களிலும் நமக்குள்ள சித்த விகாரங்கள்  எல்லாம் நிவ்ரித்தியாக வேண்டும் என்பதற்காகத்தான், அம்பாள் கரும்பு வில்லையும்  புஷ்பபாணங்களையும் தன் கையில் வைத்துக்கொண்டிருக்கிறாள். அந்த அம்பாள் கடாக்ஷம் ஏற்பட்டு விடுமானால் எல்லாவற்றையும் சமமாக பார்க்கிற த்ருஷ்டி, எந்த விஷயத்திலும் மோகம் ஏற்படாத நிலை இவைகள் உண்டாகிவிடும் என்பது மூக கவியின்  வாக்கு.
லலிதா ஸஹஸ்ரநாமம் தேவியை  "நிர்மோஹா மோஹ நாசினி" என்று சொல்வதை பார்க்கலாம்.

இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால்   காம ஜெயம் ஏற்படும்
                🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼



_____________________________________

ஸெளந்தர்யலஹரி

#ஆனந்த அலை-14

ஆதார சக்கரங்களின் கிரணங்களும் அதற்கு அப்பாலும்:-

க்ஷிதௌ ஷட்-பஞ்சாஸத்-த்விஸமதிக-பஞ்சாச-துதகே
ஹுதாசே த்வா-ஷஷ்டிச்-சதுரதிக-பஞ்சாச-தனிலே i
திவி த்வி:ஷட்த்ரிம்சந்மனஸி ச சதுஷ்ஷஷ்டிரிதி யே
மயூகாஸ்-தேஷா-மப்யுபரி தவ பாதாம்புஜ-யுகம் ii


क्षितौ षट्पञ्चाशद्-द्विसमधिक-पञ्चाश-दुदके
हुतशे द्वाषष्टि-श्चतुरधिक-पञ्चाश-दनिले ।
दिवि द्विः षट् त्रिंशन् मनसि च चतुःषष्टिरिति ये
मयूखा-स्तेषा-मप्युपरि तव पादाम्बुज-युगम् ॥ 14 ॥

பூமி தத்துவமான மூலாதாரத்தில் 56, ஜல தத்துவமான மணிபூரகத்தில் 52 ,அக்னி தத்துவமான ஸ்வாதிஷ்டானத்தில் 62, வாயு தத்துவமான அனாஹதத்தில் 54, ஆகாச தத்துவமான விசுத்தியில் 72, மனஸ்
தத்துவமான ஆக்ஞையில் 64 என்று கிரணங்கள் எவை உண்டோ அவைகளுக்கு மேலாக உன்னுடைய இரண்டு திருவடிகளும் உள்ளன.

ஆறு ஆதாரங்கள் கால கதிக்கு உட்பட்டவை ஆனால் அம்பாளின் திருவடிகள் காலத்தையும் கடந்தவை என்பது இங்கே குறிப்பிடபடுகிறது. மூலாதாரம் 55 நாட்கள் கொண்ட வசந்தருதுவுக்கு ஒப்பாகவும், மணிபூரகம்  52 நாட்கள் கொண்ட க்ரீஷ்மருதுவுக்கு  ஒப்பாகவும், ஸ்வாதிஷ்டானம் 62 நாட்கள் கொண்ட வர்ஷருதுவுக்கு ஒப்பாகவும், அனாஹதம் 54 நாட்கள் கொண்ட சரத்ருதுவுக்கு ஒப்பாகவும், விசுத்தி 72 நாட்கள் கொண்ட ஹேமந்தருதுவுக்கு ஒப்பாகவும், ஆக்ஞை 64 நாட்கள் கொண்ட சிசிரருதுவுக்கு ஒப்பாகவும் வர்ணிக்கப்படுகிறது. பிரம்மாண்டத்தில்  நாட்களாக இருப்பவை பிண்டத்தில்  கிரணங்களாக கூறப்பட்டன. இந்த ஆறு ஆதாரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் அக்னி கண்டம் அதன் முடிவில் உள்ளது ப்ரம்மக்ரந்தி. ஸ்வாதிஷ்டானமும் அனாஹதமும் சூர்ய கண்டம் அதன்முடிவில் விஷ்ணுக்ரந்தி, ஆக்ஞை சந்திர கண்டம். அதன் முடிவில் ருத்ரக்ரந்தி.
அக்னி மூலாதாரத்திலும் மணிபூரக்திலும் ப்ரகாசிக்கிறது. ஸ்வாதிஷ்டானத்திலும் அனாஹதத்திலும் சூர்ய பிரகாசம்.

 ஆகவே இவை ஒன்றில் ஒன்று ஊடுருவி நிற்கின்றன என்பதை உணர வேண்டும்.
1). அக்னி கண்டத்தில் கிரணங்கள்  108 . அவை :----  a.  24 தத்துவங்கள்+கலை, ப்ரக்ருதி, புருஷன்,மஹத் ஆகிய 4   =28. சிவனும் சக்தியுமாக இரட்டித்து  56.
b:- 5 பூதங்கள் + 10 இந்திரயங்கள் + அவற்றின் தொழில்கள்10+ மனம் 1=26. இவை சிவனும்
சக்தியுமாக இரட்டித்து 52.
a + b = 108.
2) சூர்ய கண்டத்தில்
கிரணங்கள் 116. அவை:
a. :- 5 பூதங்கள் + 5 தன்மாத்திரைகள் +10 இந்திரயங்கள் + அவற்றின் தொழில்கள்10+ மனம் 1 =31 .. இவை சிவனும்
சக்தியுமாக இரட்டித்து 62.
b:- பூமி தத்துவங்கள் மஹத் நீங்களாக 27 இவை சிவனும்
சக்தியுமாக இரட்டித்து 54.
a + b= 116
3). சந்திர கண்டத்தில் கிரணங்கள் 136. அவை:-
36 தத்துவங்கள் இரட்டித்து 72 + அவற்றில் கடைசி 4 நீங்கலாக 32. இதை இரட்டித்து 64. .
72. +. 64. = 136.
இந்த மூன்று கண்டங்களும்  சேர்ந்து அதாவது 108 + 116 + 136 = 360  கிரணங்கள் ஆனது. காலாத்மகமான  வருஷத்திலும் 360 நாட்கள்( வேத தத்துவ முறை படி) அல்லது கலைகள்.
தேவியின் ஸ்தானம்  அக்னி, சூர்ய, சந்திர கலைகளுக்கு  அப்பாற்பட்டு அவைகளையெல்லாம் விழுங்கும் ஸ்வரூபம் உடையதாக விளங்குகின்றது.

காளிகா புராணம், காலத்தை வென்றதால் அம்பாளை   "காளீ" என புகழ்கிறது.

இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால் பஞ்சம், கொள்ளை, நோய்கள் நிவர்த்தியாகும்.

         🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

_______________________________

ஸெளந்தர்யலஹரி

#ஆனந்த அலை-15

தேவியின் சுத்த ஸத்வ வடிவம் :-

சரஜ்-ஜ்யோத்ஸ்னா ஸுத்தாம் சசியுத-ஜடாஜூட-மகுடாம்
வர-த்ராஸ-த்ராண-ஸ்படிக-குடிகா-புஸ்தக-கராம் i
ஸக்ருந்ந த்வா நத்வா கதமிவ சதாம் ஸந்நிதததே
மது-க்ஷீர-த்ராக்ஷா-மதுரிம-துரீணா: பணிதய: Ii 



शरज्ज्योत्स्ना शुद्धां शशियुत-जटाजूट-मकुटां
वर-त्रास-त्राण-स्फटिकघुटिका-पुस्तक-कराम् ।
सकृन्न त्वा नत्वा कथमिव सतां सन्निदधते
मधु-क्षीर-द्राक्षा-मधुरिम-धुरीणाः फणितयः ॥ 15 ॥
ஸரத்கால நிலவைப்போல் நிர்மல வடிவினளும், சந்திரனுடன் கூடிய சடை முடியும் கிரீடமும் உடையவளும் வரம் அபய முத்திரை ஸ்படிக  மாலை  புஸ்தகம் ஆகியவற்றை  கையில் கொண்டவளுமான உன்னை ஓரு முறை நமஸ்கரித்துவிட்டால், அப்படிப் பட்ட நல்லவர்களுக்கு தேனும் பாலும் திராக்ஷையும் சேர்தாற்  போல இனிய சொற்றொடர்கள் எப்படித்தான் சித்திக்காமல் போகும்.

சரஸ்வதி கடக்ஷத்தால் வித்தையில் உயரவடைய விரும்புவோர் தியானம் செய்ய வேண்டிய முறை இங்கே கூறப்படுவதால் இதை ஸாரஸ்வத பிரயோகம் என்பர்.
ரஜோ குணம், தமோ குணம் அற்ற சுத்த சத்வத்தை வெண்மை குறிக்கிறது. அதனால் இந்த வடிவில் உபாசிப்பதற்கு சத்வ குணம் மேலிட்டுருக்க வேண்டும்.
சந்திர கலையை முடியில்  தரிப்பதால் பராசக்தியின் வடிவிலிருந்து  இது வேறன்று என்பதை உணர வேண்டும்.இது ஆதி மஹாசரஸ்சதியின் வடிவம். பிரம்பத்னி சரஸ்வதியின் வடிவன்று.
ஜபம் செய்தால் என்னை காணலாம், கல்வி அனைத்தையும் என் கடாக்ஷத்தால் பெறலாம் என உணர்த்தவே தேவி புஸ்தகத்தையும்  ஸ்படிக  மாலையையும் கையில் கொணடுள்ளாள்  போலும்.
சந்திர கலையினை முடியில் சூட்டியிருப்பதால் பராசக்தியின் வடிவிலிருந்து இது வேறு அல்ல என்பது தெரிகிறது

இந்த பாடலில் தேவியின் (சரஸ்வதி ரூபம்) சுத்த சத்வ வடிவினைப் பற்றி சொல்லியிருக்கிறார் சங்கரர்.

அன்னை லலிதா மாஹா த்ரிபுர சுந்தரி தன்னிலிருந்து முதலில் தோற்றுவித்தது மூன்று சக்திகள்.

 அவை முறையே மஹாகாளி, மஹாலக்ஷ்மி, மஹாசரஸ்வதி. 

இந்த மூன்று வடிவங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் இரண்டு வடிவங்கள் தோன்றியதாம்.

 மஹாலஷ்மியிடமிருந்து ப்ரம்மாவும், லஷ்மியும் (சிவப்பு வர்ணம்),

 மஹாசரஸ்வதியிலிருந்து விஷ்ணுவும், பார்வதியும் (நீல வர்ணம், இப்போது தெரிகிறதா விஷ்ணுவும், பார்வதியும் ஏன் சகோதர-சகோதரி பாவம் என்று?

மஹாகாளியிடமிருந்து சிவனும் சரஸ்வதியும் (வெண்மை நிறம்) கொண்டு தோன்றினர் என்று தேவீ மஹாத்மீயம் கூறுகிறது.

 'ஸர்வ வர்ணாத்மிகே'ன்னு காளிதாசர் ச்யாமளா தண்டகத்தில் சொல்வது இதனால்தான்.

லக்ஷ்மி அஷ்டோத்திரமாகட்டும், சரஸ்வதி அஷ்டோத்திரமாகட்டும், 'ப்ரம்ம-விஷ்ணு சிவாத்மிகாயை'என்று ஒரு நாமாவளி வருவதை கவனித்து இருக்கலாம். 

அன்னை லலிதாவே ப்ரம்ம ரூபமாக ஸ்ருஷ்டி கார்த்தாவாகவும், 

விஷ்ணு ரூபமாக கோப்த்ரியாகவும்,

 ருத்ர ரூபமாக ஸம்ஹார மூர்த்தியாகவும் விளங்குகிறாள்.

 இதனால்தான் ப்ரம்ம-விஷ்ணு-சிவாத்மிகா.

உன்னை ஒருமுறை தியானித்தால் போதுமே தேன் பால் திராட்சையைக் காட்டிலும் இனிமை மிக்கதான வாக்குத் திறன், கவித்திறன் பெருகும்..


இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால் கவித்துவமும் பாண்டித்யமும் சித்திக்கும்
        🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

______________________________________


ஸெளந்தர்யலஹரி

#ஆனந்த அலை--16

அருண மூர்த்தி:-

கவீந்த்ராணாம் சேத: கமலவன பாலாதப-ருசிம்
பஜந்தே யே ஸந்த: கதிசிதருணா மேவ பவதீம் i
விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ஷ்ருங்காரலஹரீ
கபீராபிர்-வாக்பிர்-விதததிஸதாம் ரஞ்சனமமீ ii


कवीन्द्राणां चेतः कमलवन-बालातप-रुचिं
भजन्ते ये सन्तः कतिचिदरुणामेव भवतीम् ।
विरिञ्चि-प्रेयस्या-स्तरुणतर-श्रृङ्गर लहरी-
गभीराभि-र्वाग्भिः र्विदधति सतां रञ्जनममी ॥ 16 ॥
கவியரசர்களுடைய சித்தமாகிய தாமரை வனத்திற்கு உதய சூரியன் போல் பிரகாசிப்பவளும், அதனால் அருணா என பெயர் பெற்றவளும்,,  ஆகிய உன்னை எந்த சில புண்யவான்கள் பூஜிக்கிறார்களோ அவர்கள் பிரம்ம பத்னியான சரஸ்வதியின் செழிப்புமிக்க ச்ருங்கார ரசத்தின் பிரவாகம் போன்ற கம்பீரமான வாக்குகளால் ஸாதுக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறார்கள்.

அம்பாளை சிவப்பு வர்ணமாகவும் எட்டு கைகளுடன் ஹ்ருதயத்தில் தியானிப்பது இங்கே கூறப்படுகிறது. பாசம் ,ஈட்டி, கரும்புவில், புஷ்ப பாணங்கள் , புத்தகம், ஸ்படிகமாலை, ஆகியவற்றையும் , அபயம் ,வரம் எட்டு கைகளில் தரித்து மூன்று கண்களுடன்  விளங்குகிறாள். இவ்வடிவம்  ஸத்வத்தில் ரஜோ குணப்  ப்ரதானமான  மகாசரஸ்வதியின் ரூபம்.

லலிதா ஸஹஸ்ரநாமம் அம்பாளை " சிந்தூராருண விக்ரஹாம்", அருணா கருணாதரங்கிதாக்ஷிம்". என்று புகழ்வதை  பார்க்கலாம்.
லலிதா த்ரிசதி  தியான ஸ்லோகமும் "அருணா அதிசய கருணா அபிநவ  குலஸுந்தரிம்  வந்தே " என்று அம்பிகையை சிவப்பு வர்ணமாக வர்ணிக்கிறது.

இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால் வேதாகம ஞானம் சித்திக்கும்




🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
_____________________________


ஸெளந்தர்யலஹரி

#ஆனந்த அலை--17

வாக் தேவதைகளால் சூழப்பெற்றவள்:-

ஸவித்ரீபிர்-வாசாம் சசிமணி-சிலா-பங்க-ருசிபிர் 
வசின்யாத்யாபிஸ்-த்வாம் ஸஹ ஜனனி ஸஞ்சிந்தயதி ய: 
ஸ கர்த்தா காவ்யானாம் பவதி மஹதாம் பங்கிருசிபிர் 
வசோபிர்-வாக்தேவீ-வதன-கமலா மோத மதுரை: Ii 

सवित्रीभि-र्वाचां चशि-मणि शिला-भङ्ग रुचिभि-
र्वशिन्यद्याभि-स्त्वां सह जननि सञ्चिन्तयति यः ।
स कर्ता काव्यानां भवति महतां भङ्गिरुचिभि-
र्वचोभि-र्वाग्देवी-वदन-कमलामोद मधुरैः ॥ 17 


தாயே வாக்கின் ப்ரவர்த்தகர்களும் சந்திர காந்த கல்லை பிளந்தால் தோன்றுவதுபோல காந்தியுடையவர்களும் ஆகிய வசின்யாதி வாக்தேவதைகளுடன் கூடியுருப்பவளான உன்னை எவன் சிந்திக்கிறானோ அவன் மகான்களுடைய காவியங்களை போல பிரகாசிப்பனவும்  ஸரஸ்வதியின் முககமலத்தில் பரிமளம்போல்  மதுரமானதுமான வாக்குகளால் காவியங்களுக்கு கர்த்தாவாக ஆகிறான்.

வாக் தேவிகளுடன்  அம்பாளை உபாசிப்பவர்கள் சிருங்கார ரசம் மிகுந்த கவித்திறன் உடையவர்களாக விளங்குவர் . இதற்கு உதாரணம் மகாகவி காளிதாசன். ஒரு நாள் போஜராஜன் பூவில் பூவின் உற்பத்தி கேட்கப்படுகிறது, காணப்படவில்லை, என்று ஒரு ஸ்லோகத்தின் முன் பாதியை சொல்லி பின் பாதியை யாராவது பூர்த்தி செய்யலாம் என்றான். அவையில் மற்ற வித்வான்களுக்கு  தோன்றாமல் இருக்க காளிதாசன் அருகில் இருந்த ஒரு அழகிய தாசியை  பார்த்து பெண்ணே உன் முகத்தாமரையில் இரண்டு நீலோத்பலம் கானப்படுகின்றன என்று கூறினார்.அரசனும் மற்றவர்களும் அந்த சிருங்காரம் நிறைந்த அந்த சோல்லைக்கேட்டு ஆச்சர்யமும் ஆனந்தமும் எய்தினார்கள் . காளிதாசன் தேவியின் அருளினால் கவித்துவம் பெற்றான். 

தேவியின் புகழை பாடும் வாக் தேவியர்கள் எட்டுபேர். அவர்கள் அம்பிகையின் வாசஸ்தலமான ஶீ சக்கரத்தின் 7 வது ஆவரணமான ஸர்வரோஹகர சக்கரம் என்னும்  அஷ்ட கோணத்தில் உறைகிறார்கள். அவர்கள் முறையே 
வசினி வாக்தேவதா 
காமேஸ்வரி வாக்தேவதா,
மோதினி வாக்தேவதா,
விமலா வாக்தேவதா,
அருணா வாக்தேவதா,
ஜயினி வாக்தேவதா,
ஸர்வேஸ்வரி  வாக்தேவதா,
கெளலினி வாக்தேவதா.
லலிதா ஸஹஸ்ரநாமம் அம்பாளின் ஆக்ஞைக்கு இணங்க இவர்களாலயே பாடப்பட்டது என்று ப்ரம்மாண்ட புராணம் கூறுகிறது.

இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால்   சிறந்த வாக்விலாசமும் சாஸ்த்ர ஞானமும் உண்டாகும்.

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼


_______________


ஸெளந்தர்யலஹரி


#ஆனந்த அலை-18


அருணரூப தியானம்:-

தனுச்சாயாபிஸ்-தே தருண தரணி ஸ்ரீ ஸரணிபிர் 
திவம் ஸர்வா-முர்வீ-மருணிமனி மக்னாம் ஸ்மரதி யா i 
பவந்த்யஸ்ய த்ரஸ்யத்-வன-ஹரிண-சாலீன-நயனா: 
ஸஹோர்வச்யா வச்யா: கதிகதி ந கீர்வாண-கணிகா: Ii 


तनुच्छायाभिस्ते तरुणतरणिश्रीसरणिभिः
दिवं सर्वामुर्वीमरुणिमनि मग्नां स्मरति यः ।
भवन्त्यस्य त्रस्यद्वनहरिणशालीननयनाः
सहोर्वश्या वश्याः कति कति न गीर्वाणगणिकाः 


.உதய சூரியன் போல், உன் மேனியிலிருந்து வருகின்ற அழகான சிவந்த  கிரணங்களினால்,  இந்த பூமி, ஆகாயம்  முழுவதும் சிவப்பு  நிறத்தில் மூழ்கி இருப்பதாக (அருணா தேவீ ரூபம்)   தியானம் செய்யும் பக்தர்களிடம் , மருண்ட மான் விழிகளைக் கொண்ட, ரம்பை ஊர்வசி  போன்ற தேவலோக பெண்களும் வசப்படுகிறார்கள் . அப்படியிருக்க சாதாரண  பெண்களைப்பற்றிச் சொல்லவும்  வேண்டுமோ ?

லலிதா ஸஹஸ்ரநாமம் 
தியான ஸ்லோகத்தில் அம்பாளை ,
ஸிந்தூராருணவிக்ரஹாம் 
த்ரிநயனாம் மாணிக்யமௌலிஸ்புரத்
தாராநாயக ஷேகராம் 
ஸ்மிதமுகீமாபீனவக்ஷோருஹாம் |
பாணிப்யா மலிபூர்ணரத்னசஷகம் 
ரக்தோத்பலம் பிப்ரதீம் 
ஸௌம்யாம் ரத்னகடஸ்த ரக்தசரணாம்
த்யாயேத் பராமம்பிகாம் 
என்றும், 
 உத்யத்பாநு ஸஹஸ்ராபா , 
என்றும் தேவியின் சிவந்த வடிவை புகழ்கின்றது.
இந்த ஸ்லோகம் ஸ்த்ரீ  வச்யகரம் என்று சொல்லப்படும்.  ஆனால் " ஸ்த்ரிய ஸமஸ்தாஸ் தவ தேவி பேதா: என்றபடி எல்லா ஸ்த்ரீகளும் பரதேவதையின் ஸ்வரூபங்களேயாதலால்  உபாசகன் அவர்களை அங்கனமே கண்டு வணங்குவான். காமத்தால் ஸ்த்ரீகளுக்கு வசமாகமாட்டான்.

இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால் காமஜயம் ஏற்படும்.



🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

_________________

ஸெளந்தர்யலஹரி

#ஆனந்த அலை-19

காமகலா த்யானம் :-

முகம் பிந்தும் க்ருத்வா குசயுகமதஸ் தஸ்ய தததோ 
ஹரார்த்தம் த்யாயேத்யோ ஹரமஹிஷி தே மன்மத கலாம் i 
ஸ ஸத்ய: ஸம்க்ஷோபம் னயதி வனிதா இத்யதிலகு 
த்ரிலோகீமப்யாஷு ப்ரமயதி ரவீந்து -ஸதனயுகாம்


मुखं बिन्दुं कृत्वा कुचयुगमधस्तस्य तदधो
हरार्धं ध्यायेद्यो हरमहिषि ते मन्मथकलाम् ।मन्मथकलाम्
स सद्यः संक्षोभं नयति वनिता इत्यतिलघु
त्रिलोकीमप्याशु भ्रमयति रवीन्दुस्तनयुगाम् ॥रवीन्दुस्तनयुगाम् 


பரமசிவனின் பட்டமகிஷியே ! ஶீ சக்ர மத்தியிலுள்ள பிந்துவை காமகலா  ரூபிணியான உனது முகமாக தியானம் செய்துகொண்டு அதற்கு கீழே இரண்டு ஸ்தனங்களையும் அதற்கும் கீழே சிவனின் பாதி வடிவான யோனியையும் தியானம் செய்துக் கொண்டு உன்னுடைய காம கலையான "க்லீம்" பீஜத்தை எவன் அவ்வங்களில்  தியானம் செய்கிறானோ  அவன் உடனே காம சக்திகளை தன் வசப்படும்படி செய்கிறான். சூரிய சந்திரர்களை ஸ்தனங்களாக கொண்ட முவுலக வடிவான மடந்தையர்களைகூட விரைவில் மயங்கச் செய்வான்.

இந்த ஸ்லோகமும் ஸ்த்ரீ வச்யகரம் எனப்படும். இந்த உபாசனை வாமாசாரத்தின் ஒரு அங்கமும்  ரஹஸ்ய மானதும் ஆகும்.
க்லீம்  என்ற பீஜத்தின்  உயிர் எழுத்து 'ஈ' அதுவும் 3 பிந்துக்களால் ஆனது மெலுள்ள பிந்து சந்திரன். கீழுள்ளவை  சூரியனும்  அக்னியும்..
இங்கனம் காமகலா தியானம் செய்பவன் சாக்ஷாத் தேவியின் ஸ்வரூபமாகிறான். வேறு எண்ணம் இல்லாமல் ஒருமைப்பட்ட மனத்துடன் மூன்று பிந்துக்களையும் தியானம் செய்பவன் பரமானந்தத்தில் மூழ்கி மீண்டும் கர்ப்பதுவாரத்தை காண்பதில்லை. இந்த ஸ்லோகத்தில் பிறவிப் பிணியிலிருந்து  காக்க வல்ல அம்பாளின் க்லீம் பீஜத்தின்  ப்ரபாவம் நன்கு விளக்கப்பட்டுள்ளது.

லலிதா ஸஹஸ்ரநாமம் - க்லீங்காரி, காமகலா ரூபினி  என்று வர்ணிப்பதும் தேவியின் இந்த ஸ்வரூபத்தைதான். இவள் ஶீ சக்ரத்தின் ஒன்பதாவது ஆவரணமான ஸர்வானந்தமயம் எனப்படும் பிந்து ஸ்தானத்தில் பரா பராதிரஹஸ்ய யோகினி  ஶீ மஹாதிரிபுரசுந்தரியாக உறைகிறாள்.

இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால் காமஜயமும்  மீண்டும் மீண்டும் பிறவாத  நிலையும் ஏற்படும்



🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

___________)

ஸெளந்தர்யலஹரி

#ஆனந்த அலை-20

சந்திரகாந்தப் பிரதிமை போன்ற வடிவம் -

கிரந்தி மங்கேப்ப்ய: கிரண நிகுரும்பாம்ருத ரஸம் 
ஹ்ருதி த்வா மாதத்தே ஹிமகர சிலா மூர்த்திமிவ ய: I 
ஸ ஸர்ப்பாணாம் தர்ப்பம் சமயதி சகுந்தாதிப இவ 
ஜ்வரப்லுஷ்டான் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா ii

அன்னையே ! சந்திர காந்தக் கற்களினால்செய்யப்பட்டதுபோல் அழகிய உருவம்கொண்டவளே ! உன்னை வணங்கும்அடியார்க்கு , உன் அங்கங்களிலிருந்து பெருகும்  அமிர்த   மழையினை வாரிவழங்குபவளே  ! அதனால் உன் அருள்   பெற்றவன் ஆடும் பாம்பிற்கு சாடும் கருடனைப்   போலவும் , ஜுரத்தினால் பாதிக்கப்  பட்டவர்களுக்கு, உன்னால்   கிடைக்கப் பெற்ற அமிர்த  பார்வையினாலேயே , நிவர்த்தியைத் தருபவனாகவும் இருந்து, அவர்களின்நோயை  குணப்படுத்துகிறான்.

ஹிமகரசிலாமூர்த்தி:- 

சசம் என்றால் முயல். 

சந்திரனில் தெரியும் கருப்பு நிறத்திட்டானது முயல் ரூபத்தில் இருக்கிறபடியால் சந்திரனுக்கே 'சசி' என்று பெயர். 

சாதாரணமாக சந்திரனிலிருந்துதான் அம்ருதமும் பனி ஜலமும் உருவாவதாக சொல்லப்படும்.

 இந்த பனி ஜலத்தை உருவாக்குவதால் சந்த்ரனுக்கு ஸுதாகரன் என்ற நாமம் உண்டு. 
 இந்த சந்திரன் பனி மலையினை உருவாக்குவதால் ஹிமகரன் என்றும் பெயர்.

பனிமலை நிறத்தில் அன்னை என்பதை ஹிமகர-சிலா என்று கூறி அவளிடத்துப் பெருகும் அம்ருதரஸம் என்று ஆரம்பித்து ஸ்லோகத்தின் முடிவில் அவளை வழிபடுவதால் உபாசகனும் அம்ருதத்தை பெருக்குவதாக சொல்லி முடிக்கிறார். 

அதாவது சஹஸ்ராரத்தில் அன்னையை நிலை நிறுத்தி ஜபம் செய்கையில் உபாசகனுக்கு ஏற்படும் உணர்வினை அம்ருத ஊற்றாக உருவகப்படுத்துவது வழக்கம். 


அம்ருதேஸ்வரி என்னும் ரூபம் இங்கே சொல்லப்படுகிறது.. இது எல்லா விஷங்களையும் போக்கும் மந்திரம். கருடபகவான் பார்வையால் விஷங்களை போக்குவதால் இது காரூட ப்ரயோகம் எனப்படும் இங்கே கூறியபடி ஆறு மாத தியானத்தால் கருடபகவானுக்கு சமானமாகி பார்வையினாலயே உலகை வசம் செய்பவனாவான்.சந்திரகாந்தப் ப்ரதிமை  போன்ற தேவியின் தியானத்தால் எல்லா ஜ்வரங்களையும் விஷங்களையும் போக்கடிப்பவன் ஆகிறான். 
மகாவிஷ்ணு ஹாலஹால விஷம் தன்னை தாக்காமல் இருக்க அம்ருதேஸ்வரியைதான் தியானம் செய்தார். அம்பாளுடைய சிந்தாமணி க்ருஹத்தை சுற்றியிருக்கும் அம்ருதவாவியில் மணிமயமான படகில் இருந்துகொண்டு அம்ருதேஸ்வரி பக்தர்களை கரை சேர்ப்பதாக கூறப்படுகிறது. அதனால் அம்ருதேஸ்வரிக்கு தாரா என்று பெயர்.

#Sathya001



ஸெளந்தர்யலஹரி

#ஆனந்த அலை-21

மின்னல் கொடி போன்ற வடிவம்:--

தடில்லேகா தன்வீம் தபன சசி வைஷ்வானர மயீம் 
நிஷண்ணாம் ஷண்ணாமப்யுபரி கமலானாம் தவ கலாம் i 
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித மலமாயேன மனஸா 
மஹாந்த: பச்யந்தோ தததி பரமாஹ்லாத லஹரீம் ii 



மின்னல் கொடி போன்ற சூக்ஷுமமான தேஜோரூபம் உடையதும்  சூரியன், சந்திரன் அக்னி ஆகிய வடிவங்களில் ப்ரகாசிப்பதும் ஆறு ஆதார சக்ரங்களுக்கு மேலே தாமரைக்காடு போன்ற ஸஹஸ்ரார சக்ரத்தில் நிலைபெறுவதுமான உன்னுடைய "ஸாதா" எனப்படும் கலையை காமம் முதலான அழுக்குகள் அவித்தை  முதலிய மயக்கங்களும் நீங்கிய மனத்தினால் மகான்களைக் கண்டு அனுபவிப்பர்களாய் அலையலையாக வரும் அளவு கடந்த ஆனந்தத்தை அடைகிறார்கள். 

.
மஹாபத்ம வடனி என்கிற ஆயிரம் இதழ்களையுடைய தாமரை நமது உடலின் ஆறு சக்கரங்களுக்கும் மேலே இருக்கிறது..இதை சஹஸ்ரார கமலம் என்போம்..

அங்கிருந்து கொண்டு சூரியன் சந்திரன் ஆகியோரைக் கலைகளாகக்கொண்டு மின்னல் கொடி போல அம்பாள் தோன்றுவாள்..

.

அந்தத் தோற்றத்தை காமம் குரோதம் விட்ட அறியாமை மூடத்தனம் இல்லாத மஹா யோகிகளால் மட்டுமே காண இயலும்



குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து படப்படியாக மேலேறி வரும்போது ஆக்ஞா சக்கரத்தில் அதிக நேரம் தாமதிக்காமல் மின்னல்கொடிபோல் காட்சி அளித்து விரைவில் ஸஹஸ்ராரத்தில் நிலையாக குளிர்ந்து ப்ரகாசிப்பதால் "ஸ்திரஸெளதாமினி" என்றும் , ஆக்ஞையில் நொடிநேரம்  ப்ரகாசிப்பதால் க்ஷணஸெளதாமினி என்றும் கூறப்படுகிறாள்.

இந்த உபாசனை செய்கிறவர்கள் தேஹத்தை ஆத்மா என்றும், தான் பெரியவன் என்ற அஹங்காரம் கொண்டும், தன் விருப்பு வெறுப்பு கொண்டு சாகாமலிருக்கவேண்டும் என்ற அறியாமயை  விலக்கிய மகான்களாவர்கள்.அவர்கள் வழிபடும் " ஸாதா" என்னும் இக்கலையின் அம்சமே  சூரிய, சந்திர, அக்னி கலைகளாகும் . அது சூரியனைப்போல  இருளை  போக்குவதாயும்,சந்திரனைபோல தாபத்தை நீக்குவதாயும், அக்னியைப்போல புண்ய  கர்மாக்களை விரைவில் பக்குவப்படுத்துவதாயும்  விளங்குவது.  இவ்வுபாசனையில் என்றுமே துன்பம் இல்லாமல் என்றென்றும் ஆனந்தமாய் வாழலாம்

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
#Sathya001


______________________________

ஸெளந்தர்யலஹரி

#ஆனந்த அலை--22

ஸ்தோத்திர மகிமை:

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம் 
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி ய: I 
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜஸாயுஜ்ய பதவீம் 
முகுந்த ப்ரஹ்மேந்த்ர ஸ்புட மகுட நீராஜித பதாம் ii.




பவன் என பெயர் பெற்றபரமசிவனின் பத்தினியே ! நீ அடிமையான என்னிடத்தில் கருணையுடன் கூடிய பார்வையை செலுத்தி அருள்வாயாக என்று எவனாவது ஒருவன் துதிசெய்ய விரும்பி பவானி ! நீ ! என்ற இரண்டு வார்த்தைகளை சொன்னால் அப்போதே நீ அவனுக்கு விஷ்ணு பிரம்மா, இந்திரன் ஆகியவர்களின் கிரீட  ஒளியால் நீராஜனம் செய்யப்பட்ட  திருவடிகளையுடைய  உனது சாயுஜ்ய பதவியை அளிக்கிறாய்

பவானி என்னும் பதத்தை தேவியை அழைக்கும் பதமாக பக்தன் உபயோகித்திருந்தாலும் அதை வினைசொல்லாக கொண்டால் "நான் ஆவேன்" என்று பொருள்படும். 
பவானித்வம் என்றால் "பாவம் நீ " அதாவது நீயாகவே  நான் ஆகிறேன் என்று பொருள்கொண்டு வேத மகாவாக்கியங்களான "அஹம்ப்ரம்மாஸ்மி",(யஜுர்வேதம்) "அயமாத்மா ப்ரம்மா"(அதர்வண வேதம்),
"தத்வமஸி"(சாம வேதம்) கருத்துக்களை கூறுவதாக ஆகிறது.ஆகவே  ப்ரம்மத்தை உணர்த்தும் ஸகுன பிரம்ம உபாசனையாக இந்த ஸ்லோகம் திகழ்கிறது. இப்படிப்பட்ட  ஞானத்தை அடைந்தவன் மோக்ஷத்துக்கு  அதிகாரியாகிறான்.  தேவியின் கருணையால் பவானித்வம் என்று கூறுபவனை அவ்வித  அதிகாரியாகவே ஏற்று தனக்கும் அவனுக்கும் வேற்றுமை இல்லாததாகிய  ஸாயுஜ்ய  பதவியை அம்பாள் அவனுக்கு அளிக்கிறாள். 

தெளிவாக இல்லாலோ, வேறு பேச்சுக்கள் நடுவிலோ தேவியின் நாமம் உச்சரிக்கப்பட்டால்கூட  அவள் விரும்பிய பொருள்களை ,அவை கிடைத்தற்கு அறிதாயினும்,எப்போதும் அளிப்பாள்  என்று தேவி பாகவதம் கூறுவதை பார்க்கலாம்.

ஶீ லலிதா ஸஹஸ்ரநாமம் "பவானி', "பாவனாகம்யா" என்றெல்லாம் தேவியை உணர்த்துகிறது.
தேவியின் அருளைப் பெற  பூஜை, ஹோமம் ,ஜபம் முதலிய கிரியைகளைவிட ஒருமித்த மனத்துடன் அவளை துதித்தலே போதுமானது என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.

இந்த பவானி என்னும் பாவனையால்  ஒரு நல்ல அம்பாள் உபாசகன் தேவியின் குணங்களான தாய்மை, அன்பு ,பரிவு, பாசம்,கருணை சகிப்புதண்மை, முதலிய எல்லாம் அமையப்பெற்றிருப்பான் .


🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼


___________________

ஸெளந்தர்யலஹரி

#ஆனந்த அலை--23

சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கம்" :-

த்வயா ஹ்ருத்வா வாமம் வபு-ரபரித்ருப்தேன மனஸா 
சரீராத்தம் சம்போ-ரபரமபி சங்கே ஹ்ருதமபூத் i 
யதேதத் த்வத்ரூபம் ஸகல-மருணாபம் த்ரிநயனம் 
குசாப்யா-மாநம்ரம் குடில-சசி-சூடால-மகுடம்  !!

அம்மா ! சிவந்த சந்திரக்கலையுடன் கூடியமணிமுடி , மூன்று கண்கள் , பருத்த இருஸ்தனங் களோடு, நீ  சற்று   முன்புறம்  சாய்ந்து  இருப்பதைப் பார்த்தால், நீ, ஆதிசிவனுடைய இடப்பாகத்தை அபஹரித்தது  போதாமல் , ஆசை தணியாமல், அவருடையமுழு பாகத்தையும் அபஹரித்து விட்டது  போல்  தோன்றுகிறது .  

சிவனும் சக்தியும் ஒரே உடலில் வலதுபாகமும்  இடது பாகமும். சிவனுடைய பாகம் வெளுப்பு. சக்தியின் பாகம் சிவப்பு. ஆனால் தேவியின் உடல் முழுவதும் சிவப்பாகவே  காணப்படுவதாலும் மூன்று கண்களூம் ,கிரீடத்தில் சந்திரகலையும், தோன்றுவதாலும் பாதி உடலை கொண்டதில்  திருப்தி ஆகாமல் தேகம்  முழுவதையும் தன்மயமாகவே ஆக்கிக்கொண்டாள் என்று இங்கே கூறப்படுகின்றது. முக்கண்ணன், சந்திரசேகரன் எனப் பெயர் பெற்ற பரமசிவன் சக்தியின் வடிவத்தில் மறைந்து போகிறான். இதனால் சக்தியை பூஜை செய்தால் சிவனையும் பூஜை செய்ததாக ஆகிறது.

இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால்  ஸர்வ ஸம்பத்து ஸித்திக்கும்


🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

______________

ஸெளந்தர்யலஹரி

#ஆனந்த அலை-24

தேவியின் புருவ அமைப்பு:-

ஜகத் ஸூதே தாதா ஹரி-ரவதி ருத்ர: க்ஷபயதே 
திரஸ்குர்வன்-னேதத் ஸ்வமபி வபு-ரீசஸ்-திரயதி i 
ஸதா பூர்வ: ஸர்வம் ததித-மனுக்ருஹ்ணாதி ச சிவஸ் 
தவாஜ்ஞா மாலப்ய க்ஷண சலிதயோர்-ப்ரூலதிகயோ: Ii 

தாயே ! படைக்கும் கடவுளான பிரம்மா , காக்கும் கடவுளான விஷ்ணு , அழிக்கும்கடவுளான ருத்ரன்  ஆகிய மூவரையும்  ஈசனானவர் தன்னுள் மறையும்படி  செய்துதானும் மறைகிறார்  (கண்ணுக்குத்தெரியாமல் ).  பின் உன் கொடி போன்றபுருவத்தின் அசைப்பால், நீ  காட்டிய  உத்தரவை மதித்து, சதாசிவன்  இன்நால்வருக்கும்  அனுக்கிரகம் செய்து  , மீண்டும் உலகத்தை உற்பத்திச்செய்வதற்காக அவர்களைப் படைக்கிறார் .

சிருஷ்டி , ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம், அனுக்ருஹம் என்னும் ஐந்து தொழில்களை முறையே பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன், ஸதாசிவன் ஆகியோர் மூலமாக தேவி நடத்துகிறாள். ஆகையால் "லலிதா ஸஹஸ்ரநாமம் "ஸ்ருஷ்டிகர்த்ரீ ப்ரஹ்மரூபா 
கோப்த்ரீ கோவிந்தரூபிணீ ||
ஸம்ஹாரிணீ ருத்ரரூபா திரோதாநகரீச்வரீ |
ஸதாசிவாsநுக்ரஹதா 
பஞ்சக்ருத்யபராயணா ||   என்று தேவியை அழைக்கிறது. 

எல்லா தெய்வங்களும் அம்பாளிடம் ஐக்கியமாகி  இருப்பதால் , அவளை பூஜை செய்தால் மட்டும் போதுமானது. அனைத்து தெய்வங்களையும் தனித்தனியே பூஜை செய்ய வேண்டியதில்லை.

ஶீ மார்க்கண்டேய புராணத்தில் சும்பன்  அம்பிகையை பார்த்து மற்றவர்கள் கொடுத்த பலத்தினால் கர்வம் கொள்கிறாய், உனக்கென்று தனி பலம் இல்லை என்று கூறுகிறான். அதற்கு தேவி பதிலுறையாக "ஏகைவாஹம் ஜகத்யத்ர த்விதீயா கா மமாபரா " என்று கூறுகிறாள், அதாவது நான் ஒருவள்தான் இந்த ஜகத்தில் இருக்கிறேன். என்னையல்லாது இரண்டாவதாக வேறு யார் இருக்கிறார்கள்?. என்று அனைத்து சக்திகளும் தன்னிடத்தே ஒடுங்குவதை காண்பித்தாள். அவள் ஜகத்வடிவினள் . ஸர்வ தேவ ஸ்வரீபி. 

இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால்
ஸர்வ பூத ப்ரேத பிசாச பய நிவாரணம் பெறலாம்



🙏🏼🙏🏼🙏🏼

_________________
ஸெளந்தர்யலஹரி

#ஆனந்த அலை-25

தேவியின் பூஜையில் மும்மூர்த்தி பூஜை அடக்கம் :-

த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண-ஜநிதானாம் தவ சிவே 
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா i 
ததா ஹி த்வத் பாதோத்வஹன மணிபீடஸ்ய நிகடே 
ஸ்திதா ஹ்யேதே சச்வன்-முகுலித-கரோத்தம்ஸ-மகுடா: Ii 

சிவபத்தினியே உன்னுடைய திருவடிகளில் எந்த பூஜை செய்யப்படுகிறதோ  அது உன்னுடைய முக்குணங்களை அனுசரித்து தோன்றிய மும்மூர்த்திகளுக்கும் பூஜையாகும். அது பொருத்தமே. இவர்கள் உன்னுடைய திருவடிகளை தாங்கும் ரத்தின  பலகையின் சமீபத்தில் எப்போதும் குவித்த கைகளைக் கிரீடத்தில் வைத்துக்கொண்டு நிற்கிறார்கள்  அன்றோ?.

த்ரிகுணஜனிதான :-  மூன்று குணங்களை உடைய மாயைக்கு , ரஜோ குணம் மேலிட்டிருக்கும்போது, அதனுடைய சம்பந்தப்பட்ட சைதன்யம் பிரம்மா ஸ்வரூபமாகிறது.
மாயைக்கு ஸத்வ குணம் மேலிட்டிருக்கும்போது அதனுடைய சம்பந்தப்பட்ட சைதன்யம்
விஷ்ணு
ஸ்வரூபமாகிறது
மாயைக்கு தமோ குணம் மேலிட்டிருக்கும்போது
அதனுடைய சம்பந்தப்பட்ட சைதன்யம் ருத்ர ஸ்வரூபமாகிறது.

 மணிபீடஸ்ய நிகடே:- 
சரீரத்தில்  உள்ள ஆறு ஆதார சக்ரங்களும் மணிபீடங்கள். அவை மூன்று கண்டங்களாக பிரிக்கப்படுகின்றன. அக்னி கண்டத்தில் உள்ள பிரம்மக்ரந்தி பிரம்மாவின் இருப்பிடம். சூர்ய கண்டத்தில் உள்ள விஷ்ணுக்ரந்தி ,விஷ்ணுவின் இருப்பிடம். ஸோம கண்டத்தில் உள்ள ருத்ரக்ரந்தி, ருத்ரனின் இருப்பிடம். ஆறு ஆதார சக்ரங்களிலும் அந்தர்யாக  முறையில் தேவி பூஜிக்கப்படும்போது மும்மூர்த்திகளும்  பூஜிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள். 

லலிதா ஸஹஸ்ரநாமம் அம்பாளை "த்ரிகுணா", *த்ரிகுணாத்மிகா" என்று குறிப்பிடுவதை பார்க்கலாம். 

இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால் உன்னத பதவியும், அதிகாரமும், கிடைக்கும். 

____________________



ஸெளந்தர்யலஹரி

#ஆனந்த அலை-26

பராசக்தியின் பாதிவ்ரத்ய மகிமை :-

விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம் 
வினாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம் i 
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித த்ருசா 
மஹா ஸம்ஹாரே அஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதி ரஸௌ ii

பிரம்மா அழிவை அடைகிறார், ஹரியாகிய விஷ்ணு முடிவை அடைகிறார். யமன் நாசத்தை  அடைகிறான். குபேரன் மரணத்தை அடைகிறான். ஒருவர்பின் ஒருவராக வரும் இந்திரர்கள் கூட்டமும் கண்ணை மூடி  பெருந்தூக்கத்தில் ஆழ்கிறது. அப்படிப்பட்ட மஹாப்ரளய காலத்தில், பதிவ்ரதையான தாயே !, உனது பதியான  ஸதாசிவன் உன்னுடன்  விளையாடுகிறார்.

பஞ்வத்வம்:- மரணம் சம்பவிக்கும்போது பஞ்ச பூதங்களும்  ஒவ்வொன்றாக பிரியும் மரண நிலை. 
மஹாப்ரளய காலத்தில் பிருதிவி முதல் எல்லா தத்துவங்களும் ஒன்று அதற்கு மேல் உள்ள தத்துவத்தில் லயமாகி கடைசியில் ஸகுன ,நிற்குண ப்ரம்மங்களான சக்தியும், சிவமும்  ஆகிய இரண்டுமே எஞ்சிநிற்கும். அப்போது சிவன் சம்ஹார தாண்டவம் ஆடிக்கொண்டிருப்பதை  பராசக்தி மட்டும் பார்த்துக்கொண்டிருப்பாள்.

லலிதா ஸஹஸ்ரநாமம் 
"மகேஸ்வர மஹாகல்ப மஹாதாண்டவ ஸாக்ஷினி" என்று கூறுவதை காணலாம்.

இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால் அகத்திலும் புறத்திலும் சத்ருக்களின் அழிவு ஏற்படும்.




🙏🏼🙏🏼🙏🏼



🙏🏼🙏🏼🙏🏼


Comments

Post a Comment

Popular posts from this blog

ஸ்ரீ ருத்ரம்

தர்ம சாஸ்திரம்

அர்த்தமுள்ள ஸந்தியாவந்தனம்: